கண்டா ஓங்கல்
கண்டா ஓங்கல் Risso's dolphin[1] | |
---|---|
ஒரு சராசரி மனிதனுடன் ஒப்பீடு | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Grampus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/GrampusG. griseus
|
இருசொற் பெயரீடு | |
Grampus griseus (G. Cuvier, 1812) | |
கண்டா ஓங்கல் பரவியுள்ள இடங்கள் |
கண்டா ஓங்கல் (Risso's dolphin) என்பது கிராம்பஸ் பேரினத்துக்கு உட்பட்ட சேர்ந்த ஒரையொரு ஓங்கில் இனம் ஆகும். தைவானிய மீனவர்களிடையே இது பொதுவாக மாங்க் டால்பின் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஓங்கிலுடன் நெருங்கிய தொடர்பான இனங்களில் சில: வலவம் திமிங்கலம் (Globicephala spp.), பிக்மி கொலையாளி திமிங்கலம் (Feresa attenuata), முலாம்பழத் தலை திமிங்கலம் (Peponocephala electra), பொய் கொலைத் திமிங்கிலம் (Pseudorca crassidens) போன்றவை உள்ளன.[3]
விளக்கம்
[தொகு]கண்டா ஓங்கில்களின் முன்பக்க உடலானது ஒப்பீட்டளவில் பெரிய உடலையும், முதுகுத் துடுப்பையும் கொண்டது. அதே நேரத்தில் பின்புற உடலானது ஒப்பீட்டளவில் குறுகிய வாலைக் கொண்டது. இதற்கு பந்துவடிவ செங்குத்து தலை இருக்கும்.[4]
இந்த ஒங்கில்களின் குட்டிகள் சாம்பல் நிறமாகவும், பின்னர் பழுப்பு நிறமாகவும் ஆகும். குட்டிகள் முதிர்ந்தத்தும் வெள்ளி நிறத்துக்கு மாறி, பின்னர் கிட்டத்தட்ட கருப்பு நிறமாகி, பின்னர் இளங்கருப்பாக (எப்போதும் கருப்பாக உள்ள துடுப்புகளைத் தவிர) மாறும். இவற்றின் வயிற்றுப் பகுதி வெள்ளை நிறத்தில் இருக்கும். இவற்றின் கன்னத்தில் இருந்து வயிறுவரை வெள்ளை நங்கூரம் போன்ற குறிகள் காணப்படுகின்றன. இதன் கருத்த உடலில் வெள்ளை நிற கோட்டுக் கிறுக்கள்கள் உள்ளன. இந்தக் கீறல்கள் பெரும்பாலும் இதனுடன் உள்ள ஓங்கில்களுடனான சண்டை அல்லது விளையாட்டுக்கடி போன்றவற்றால் உருவானவையாக இருக்கலாம். பல்லுள்ள திமிங்கலங்களின் உடலில் இவாவாறான கீறல்கள் ஒரு பொதுவான அம்சமாக இருந்தபோதிலும், இந்த கண்டா ஓங்கில்களின் உடலில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் கீறல்கள் இருக்கும்.[5] முதிர்ந்தவை பெரும்பாலும் வெள்ளையாகத் தோன்றுகிறன. பெரும்பாலான ஓங்கில்களுக்கு இரண்டு முதல் ஏழு இணைப்பற்கள் உள்ளன, அனைத்தும் கீழ் தாடையில் உள்ளன.
இவற்றின் நீளம் பொதுவாக 10 அடிகள் (3.0 m) இருக்கும் என்றாலும், சில 13.12 அடிகள் (4.00 m) வரைகூட காணப்படும்.[6] பெரும்பாலான ஓங்கில்களைப் போலவே, ஆண் மீன்கள் பெண் மீன்களைவிட விட சற்று பெரியவை. இந்த இனமானது 300–500 கிலோகிராம்கள் (660–1,100 lb) எடை கொண்டவை. இது "டால்பின்" என்று அழைக்கப்படும் உயிரினத்தில் மிகப்பெரிய இனமாகும்.[7][8] கணாடா ஓங்கில்கள் திமிங்கிலங்களைப் போல தங்கள் தலையில் உள்ள துளைகளால் மூச்சுக் காற்றை பீச்சியடிக்கின்றன. அக்காற்று ஓன்ன்றையடி வரை பீச்சியடிக்கின்றது.
பரவலும், வாழ்விடமும்
[தொகு]இவை உலகளவில் மித மற்றும் வெப்பமண்டல கடற்பகுதிகளில், இந்திய, பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களிலும், பாரசீக வளைகுடா, மத்திய தரைக்கடல், செங்கடலிம் காணப்படுகின்றன. கருங்கடலில் (2012 இல் மர்மாரா கடலில் பதிவு செய்யப்பட்டது) [9] . இவை வடக்கே அலாஸ்கா வளைகுடா மற்றும் தெற்கு கிரீன்லாந்திலிருந்து தெற்கே டியெரா டெல் ஃபியூகோ வரை உள்ளன .[4]
இவற்றின் விருப்பமான சூழலானது கண்டத் திட்டுப் பகுதியில் 400–1,000 m (1,300–3,300 அடி) ஆழத்தில், குறைந்தது 10 °C (50 °F) நீர் வெப்பநிலையில் வாழ்வது என்றாலும். இது மிகவும் விரும்பும் வெப்பநிலை 15–20 °C (59–68 °F) ஆகும்.
அமெரிக்காவின் கண்டத் திட்டுப் பகுதியைச் சுற்றியுள்ள கண்டா ஓங்கில்களின் தொகை 60,000 க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்படுள்ளது. பசிபிக் பகுதியில், நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கிழக்கு வெப்பமண்டல நீரில் 175,000 ஓங்கில்களும் மேற்கில் 85,000 ஓங்கில்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. உலகளாவிய கணக்கீடு இல்லை.
சூழலியல்
[தொகு]இவை பெரும்பாலும் அண்மைக்கடல் மண்டலக் கடல்சார்ந்த கணவாய்களை உணவாக கொள்கின்றன. கூட்டமாக இவை கரை ஒதுங்கி தத்ளிப்பது என்பது மிக அரிதான நிகழ்வு ஆகும்.[4] ஸ்காட்லாந்தில் சிக்கித் தவித்த இந்த மீன் மாதிரிகளின் வயிற்றின் உள்ளே மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வில் இவற்றால் ஸ்காட்டிஷ் கடல்நீரில் வேட்டையாடப்பட்ட மிக முக்கியமான இனங்களாக சுருண்ட ஆக்டோபஸ் என்று தெரிந்தது.
சாண்டா கேடலினா தீவுப் பகுதியில் இந்த ஓங்கில் கூட்டம் காணப்படுகிறது. அங்கு இவை குறுந்தடுப்பு ஒலவம் ஓங்கில்களுடன் ( குளோபிசெபலா மேக்ரோரிஞ்சஸ் ) ஒத்துழைத்து வாழ்கின்றன. மேலும் இரண்டு இனங்களும் கணவாய்களை உணவாக கொள்கின்றன. இந்த இனங்கள் இரவில் கூட்டாக கணவாய்களை வேட்டையாடுகின்றன. மீனவர்கள் தங்கள் படகுகளைச் சுற்றி இவை உணவுண்பதைக் கண்டனர்.[10] இவர்கள் மற்ற கடற்பாலூட்டிகளுடன் சேர்ந்து சுற்றுகின்றன. இவை அலையில் சறுக்கி சில்லியெடுத்து விளையாடும் பழக்கம் கொண்டவை.
கண்டா ஓங்கில்கள் ஒரு சமூகமாக அமைப்பைக் கொண்டுள்ளன.[11] இந்த ஓங்கில் கூட்டத்தில் பொதுவாக 10 முதல் 51 வரையிலானவை உள்ளன. ஆனால் சில நேரங்களில் இவை சில ஆயிரமாக திரள்வதும் உண்டு. இந்த பெரிய குழுவினுள் சிறிய, நிலையான துணைக்குழுக்கள் இருக்கும். இந்த குழுக்கள் வயது அல்லது பாலினத்தில் ஒத்ததாக இருக்கும்.[12] கண்டா ஓங்கில்கள் தங்கள் குழுக்களுக்கு விசுவாசமாக இருக்கின்றன. நீண்ட கால பிணைப்பை வயது வந்த ஆண் ஓங்கில்கள் கொண்டுள்ளன. இளம் மீன்கள் குறைந்த நம்பகத்தன்மையை கொண்டவையாக உள்ளவையாகவும், குழுக்களை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளவையாகவும் உள்ளன. தாய் ஓங்கில்கள் மற்றும் குட்டிகளின் குழுவில் தாய் மீன்கள் அதிக பாசத்தைக் காட்டுகிறன.[11] ஆனால், இந்த குட்டிகள் வெளியேறிய பிறகும் இந்த பெண் ஓங்கில்கள் ஒன்றாக இருக்குமா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
நடத்தை
[தொகு]சமூக நடத்தை
[தொகு]கண்டா ஓங்கில்கள் தங்கள் இரையான தலைக்காலிகளை வெட்ட பற்களை பயன்படுத்தத்த தேவையில்லை. இந்த இனங்கள் இனச்சேர்க்கைக்கான மோதல்களில் தங்கள் ஆயுதங்களாக பற்களை பயன்படுத்துகின்றன.[5]
இனப்பெருக்கம்
[தொகு]இவை 2.4 ஆண்டு இடைவெளியில், கருத்தரித்து 13-14 மாதம் கர்பமாக இருந்து ஒரே ஒரு குட்டியை ஈனுகின்றன. பெண் ஓங்கில்கள் 8-10 வயதிலும், ஆண் ஓங்கில்கள் 10-12 வயதிலும் பாலியல் முதிர்ச்சியடைகின்றன. இதில் கண்டறியப்பட்ட வயது துதிர்ந்த ஓங்கில் 39.6 வயதை எட்டியது ஆகும்.[4]
காண்ட ஓங்கில்கள் யப்பான் மற்றும் அமெரிக்காவில் வெற்றிகரமாக சிறைபிடிக்கப்பட்டன. அவை வழக்கமான போத்தல் மூக்கு ஓங்கில்கள் அல்லது ஓர்க்கா திமிலங்கள் போன்றவையாக இல்லை என்றாலும். கலப்பின காண்டா ஓங்கில்-போத்தல் மூக்கு ஓங்கில்கள் சிறைப்பிடிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.[சான்று தேவை]
மனித தொடர்புகள்
[தொகு]மற்ற ஓங்கில்கள் மற்றும் கடல் விலங்குகளைப் போலவே, இந்த ஓங்கில்களும் உலகம் முழுவதும் கடல் வலைகளில் சிக்கியதற்கான ஆவணங்கள் உள்ளன.[3] இவற்றில் பல சம்பவங்கள் மரணத்திற்கு வழிவகுத்தன.[12] இவற்றில் சில இறப்புக்கு திமிங்கில வேட்டைகளும் காரணமாக இருந்தன. நெகிழியை உட்கொண்ட பல ஓங்கில்களையும் மாசு பாதித்துள்ளது. இந்த விலங்குகளின் மாதிரிகள் அவற்றின் திசுக்களில் மாசுகளால் ஏற்பட்ட பாதிப்புகளைக் காட்டுகிறது.[3]
குறிப்புகள்
[தொகு]- ↑ Mead, J.G.; Brownell, R. L. Jr. (2005). "Order Cetacea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 723–743. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மைய எண் 62265494.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - ↑ Taylor, B.L.; Baird, R.; Barlow, J.; Dawson, S.M.; Ford, J.; Mead, J.G.; Notarbartolo di Sciara, G.; Wade, P. et al. (2012). "Grampus griseus". IUCN Red List of Threatened Species 2012: e.T9461A17386190. doi:10.2305/IUCN.UK.2012.RLTS.T9461A17386190.en. https://www.iucnredlist.org/species/9461/17386190.
- ↑ 3.0 3.1 3.2 Baird, Robin (2008). Encyclopedia of Marine Mammale 2nd edition. Academic Press. pp. 975–976. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780123735539.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Baird, Robin W. (2009). Perrin, William F.; Wursig, Bernd; Thewissen, J. G. M. (eds.). Encyclopedia of Marine Mammals (2nd ed.). Burlington Ma.: Academic Press. p. 975. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-373553-9. Archived from the original on 9 November 2009.
- ↑ 5.0 5.1 MacLeod, Colin D. (January 1998). "Intraspecific scarring in odontocete cetaceans: an indicator of male 'quality' in aggressive social interactions?". Journal of Zoology 244 (1): 71–77. doi:10.1111/j.1469-7998.1998.tb00008.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0952-8369.
- ↑ "Grampus griseus – Risso's dolphin". Animal Diversity Web.
- ↑ American Cetacean Society Fact Sheet – Risso's Dolphin பரணிடப்பட்டது 11 சூலை 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Risso's Dolphin.
- ↑ First stranding record of a Risso’s Dolphin (Grampus griseus) in the Marmara Sea, Turkey பரணிடப்பட்டது 2017-10-20 at the வந்தவழி இயந்திரம் (pdf).
- ↑ Shane, Susan H. (1995). "Behavior patterns of pilot whales and Risso's dolphins off Santa Catalina Island, California". Aquatic Mammals 21 (3): 195–197. https://aquaticmammalsjournal.org/share/AquaticMammalsIssueArchives/1995/AquaticMammals_21-03/21-03_Shane.pdf.
- ↑ 11.0 11.1 Hartman, K. L.; Visser, F.; Hendriks, A. J.E. (14 March 2008). "Social structure of Risso's dolphins (Grampus griseus) at the Azores: a stratified community based on highly associated social units". Canadian Journal of Zoology 86 (4): 294–306. doi:10.1139/Z07-138. பன்னாட்டுத் தர தொடர் எண்:0008-4301.
- ↑ 12.0 12.1 "Risso's dolphin, Open Waters, Marine mammals, Grampus griseus at the Monterey Bay Aquarium". montereybayaquarium.org. பார்க்கப்பட்ட நாள் 27 April 2018.