கண்டறி முறை
கண்டறி முறை (Heuristic) என்பது ஆசிரியர் துணை இல்லாமல் செய்தறிதல் மூலம் அறிவியல் கருத்துகளை மாணவர்கள் தெரிந்து கொள்வது ஆகும்.. லண்டனில் உள்ள சிட்டி கில்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய வேதியியல் பேராசிரியர் எச். இ. ஆம்ஸ்ட்ராங் என்பவரால் கண்டறியப்பட்டது.'Heuristic' என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து பெற்றது இதற்குப் பொருள் 'கண்டறிவது'(To discover), இம்முறையில் மாணவர்கள் அறிவியல் நிகழ்வுகளை தாங்களாகவே கண்டறிய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கருத்துப்படி 'அறிவியல் உண்மைகளையும், தத்துவங்களையும் முன் கூட்டியே அறிவிக்காமல், ஆராய்ச்சியாளர்களின் நிலையில் மாணவர்களை வைத்து அறிவியல் உண்மைகளை கண்டுபிடிக்க, அவர்களை சொந்த முயற்சிகளை மேற்கொள்ளச் செய்து உண்மைகளை கண்டறியச்செய்வதுவே' கண்டறி முறையாகும்.[1]
நோக்கங்கள்
[தொகு]இம்முறையின் மூலம் மாணவன்
- அறிவியல் யுத்தியைப் பயன்படுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பான்.
- சோதனைக் கருவிகளைச் சேகரிப்பான்.
- சோதனைகளை நிகழ்த்திக் காட்டுவான்.
- சோதனை முடிவுகளை எடுத்துரைப்பான்.
- புதிய கருத்துகளை கண்டறியும் அறிவைப் பெறுவான்.
- சுயமாக சிந்திப்பான்.
- தகவல்களை சேகரித்து அவற்றிலிருந்து உண்மைகளை கண்டறிவான்.[2][3]
படிநிலைகள்
[தொகு]1. திட்டமிடுதல் (Planning)
அ.நோக்கங்களை உருவாக்குதல்.
ஆ.பிரச்சனைகளை கண்டறிதல்.
இ. பிரச்சனைக்கு ஓரளவிற்கு சரியானத்தீர்வை கண்டறிதல்.
2. நிகழ்த்துதல் (Execution)
அ. சரியான முடிவைக் காண புலனறிதல், கண்டறிதல், உற்றுநோக்கல்.
ஆ. உற்றுநோக்கியதை பதிவு செய்தல்.
3. முடிவுக்கு வருதல் (Conclusion)
அ. பொதுமை கருத்தை உருவாக்கி முடிவுக்கு வருதல்.
ஆ. பிரச்சனைக்கு சரியான தீர்வை கண்டறிதல்.
நன்மைகள்
[தொகு]இம்முறையில் உண்மைகளை அறிந்து கொள்ள மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையும், திறனாய்வு செய்யும் முறையும் வலியுறுத்தப்படுகின்றன. மாணவர்கள் தங்கள் உழைப்பிலேயே நம்பிக்கை வைத்து, தன்னம்பிக்கை பெறுகின்றனர். இம்முறையில் பெற்ற அனுபவம் நேரிடையாக அமைவதால், இம்முறையை பின்பற்றி அறிந்த உண்மைகள் நிலைபெற்று உள்ளன. உற்றுநோக்கி அறியும் பண்பு, செய்திகளைச் சேகரிக்கும் பழக்கம், விடாமுயற்சி முதலிய நற்பண்புகள் வளருகின்றன.
குறைபாடுகள்
[தொகு]இம்முறையில் மாணவர்கள் தாங்களாகவே அறிவியல் அறிஞரின் நிலையில் இருந்து கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைப்பது நடக்காத செயல் ஆகும். அந்நிலையை அடைவதற்கு போதிய மன வளர்ச்சியும், மனப்பக்குவமும் இல்லை.
- 'கண்டுபிடிப்பு' என்ற சொல்லுக்கே சில நேரங்களில் இழுக்கு ஏற்படலாம், சாதாரண உண்மைகள் கூட மாபெரும் கண்டுபிடிப்பு என்ற நிலை ஏற்படும்.
- எல்லாச் செய்திகளையும் கண்டுபிடித்தே அறிய வேண்டுமானால், செய்திகளை அறிய காலதாமதம் ஏற்படும்.
- இம்முறை வெற்றியடைய ஆராய்ச்சி மனப்பான்மையுள்ள ஆசிரியரும், நுண்ணறிவு மிக அதிகமாகப் படைத்த மாணவர்களுமே தேவைப்படுவர்.
- இம்முறையில் பயிற்சி அளிக்க வேண்டுமாயின், மிகக்குறைந்த மாணவர்களைக் கொண்டு வகுப்புகள் செயல்பட வேண்டும்.
- ஒவ்வொரு செய்தியை அறியவும் சோதனை செய்தல் வேண்டும் என வலியுறுத்தப்படுவதால், ஆய்வகம் இல்லாமல் அறிவியல் அறிவு வளராது என்ற கருத்தும், ஆய்வுக்கூடமே அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படை என்ற தவறான கருத்தும் ஏற்பட்டுவிடும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Myers, David G., (2010). Social psychology (Tenth ed.). New York, NY. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780073370668. இணையக் கணினி நூலக மைய எண் 667213323.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) CS1 maint: location missing publisher (link) CS1 maint: multiple names: authors list (link) - ↑ Pearl, Judea (1983). Heuristics: Intelligent Search Strategies for Computer Problem Solving. New York, Addison-Wesley, p. vii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-201-05594-8
- ↑ Emiliano, Ippoliti (2015). Heuristic Reasoning: Studies in Applied Philosophy, Epistemology and Rational Ethics. Switzerland: Springer International Publishing. pp. 1–2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-09159-4.
- ↑ http://www.studylecturenotes.com/curriculum-instructions/heuristic-method-of-teaching-meaning-advantages-disadvantages