கணையப் பல்புரதக்கூறு
தோற்றம்
(கணையப் புரதக்கூறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| கணையப் பல்புரதக்கூறு | |
|---|---|
| அடையாளம் காட்டிகள் | |
| குறியீடு | PPY |
| Entrez | 5539 |
| HUGO | 9327 |
| மனிதனில் இணையவழி மென்டலியன் மரபுரிமை | 167780 |
| RefSeq | NM_002722 |
| UniProt | P01298 |
| வேறு தரவுகள் | |
| இருக்கை | Chr. 17 p11.1-qter |

கணையப் பல்புரதக்கூறு (Pancreatic polypeptide, (PP)) என்னும் புரதக்கூறு முதன்மையாக கணையத்தின் தலைப் பகுதியிலுள்ள கணையப் பல்புரதக்கூறு சுரப்பு செல்களிலிருந்து (PP cell) சுரக்கப்படுகிறது. முப்பத்தியாறு அமினோ அமிலங்களைக் கொண்ட இப்பல்புரதக்கூற்றின் மூலக்கூறு எடை அண்ணளவாக 4200 டால்டன்களாகும்[1].
கணையத்தின் வெளிச்சுரப்பு, உட்சுரப்புகளை சுயக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே கணையப் பல்புரதக்கூற்றின் பணியாகும். இரையக குடலியச் சுரப்புகள், கல்லீரல் கிளைக்கோசன் அளவுகள் ஆகியவற்றின் மீதும் இதன் தாக்கங்கள் உண்டு.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lonovics J, Devitt P, Watson LC, Rayford PL, Thompson JC (1981 Oct). "Pancreatic polypeptide". Arch Surg. 116 (10): 1256–64. பப்மெட்:7025798. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/7025798.