கணையத் திட்டுகள்
கணையத் திட்டுகள் (pancreatic islets) அல்லது இலாங்கர்கான்சுத் திட்டுக்கள் (islets of Langerhans) நீள்வட்ட வடிவில் உள்ள இன்சுலினைச் சுரக்கும் இழைய்யத் தொகுப்புக்கள்.இவை கணையத்தில் எங்கும் திட்டு திட்டாகப் பரவியுள்ளன. குறிப்பாக கணையத்தின் தலைப்பகுதியை காட்டிலும் உடல், வால் பகுதிகளில் அதிகம் உள்ளது. மனித உடலில் 1 முதல் 2 மில்லியனளீழையத் திட்டுக்கள் இருக்கின்றன. இவை கணையத்தின் மொத்த எடையில் 1 முதல் 2 % எடையிலலமைகின்றன. கணையத் திசுக்களிலேயே அதிக இரத்த ஓட்டம் உள்ள திசுப் பகுதியாக இவை கருதப்படுகின்றன. ஆனால் இவற்றின் சுரப்புக்கள் மற்ற நாளம்மில்லா சுரப்பிக்களைப் போல இரத்த ஓட்டத்தில் கலக்கவிடாமல் கல்லீரல் களக் குருதியோட்டத்தில் கலக்கவிடுகிறது.
நிறமியேற்றத்தினைக் கொண்டு இதன் உயிரணுக்களை நான்கு வகைகளாக பிரிப்பர். அவை: 'ஏ', 'பி', 'டி', "எப்" என்பன ஆகும். 'ஏ', 'பி', 'டி' உயிரணுக்கள் ஆல்பா, பீட்டா, காமா உயிரணுக்கள் என அழைக்கப்டுகிறன.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Pancreas at the Human Protein Atlas