கணேச வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணேச வம்சம்
1416–1436
தலைநகரம்பண்டைய கௌட நகரம் ( பெரும் பகுதி தற்கால மேற்கு வங்காளத்தின், மால்டா மாவட்டம் மற்றும் சிறு பகுதி வங்காள தேசத்தின் சபாய் நவாப்கஞ்ச் மாவட்டம்)
சமயம்
இந்து சமயம்
பின்னர் இசுலாம்
அரசாங்கம்முடியாட்சி
• 1414–1415 & 1416–1418 (இரண்டாம் முறை)
மன்னர் இராஜா கணேசன்
• 1415–1416 & 1418–1433
ஜலாலுத்தீன் முகமது ஷா
• 1433–1435
சம்சுதீன் அகமது ஷா
வரலாறு 
• தொடக்கம்
1416
• முடிவு
1436
முந்தையது
பின்னையது
இலியாஸ் சாகி வம்சம்
இலியாஸ் சாகி வம்சம்

கணேச வம்சம் (Ganesha dynasty), கிபி 1414-இல் இராஜா கணேசன் வங்காளத்தில் நிறுவினார். இவ்வம்சத்தவர்களின் தலைநகரமாக கௌட நகரம் இருந்தது. இம்வம்சத்தினர் வங்காளப் பகுதிகளை கிபி 1414 முதல் 1435 முடிய 21 ஆண்டுகள் ஆண்டனர். இவ்வம்சத்தை நிறுவிய முதல் மன்னர் இராஜா கணேசன், இந்து சமயத்தினராக இருப்பினும், இவரது வழித்தோன்றல்கள் இசுலாமியத்திற்கு மாறி வங்காள சுல்தானகத்தை ஆண்டனர்.

வரலாறு[தொகு]

வங்காள சுல்தானகத்தில் குழப்பமான சூழ்நிலை எழுந்த நேரத்தில், இராஜா கணேசன் என்பவர், இசுலாமிய சூபி ஞானி குதுப் அல் ஆலாம் என்வரின் ஆசியுடன், கிபி 1414-இல் இலியாஸ் சாகி வம்சத்தின் வங்காள சுல்தான் முதலாம் அலாவுதீன் பிரூஸ் ஷாவை கொன்று, கணேச வம்சத்தை நிறுவினார். இராஜா கணேசன் தனது மகன் ஜாதுவை, 1415-இல் இசுலாமிய சமயத்திற்கு மாற்றி ஜலாலுத்தீன் முகமது ஷா என பெயர் மாற்றம் செய்வித்து, ஆட்சியை அவனிடம் வழங்கினார்.[1] 1435-இல் கணேசன் வம்சத்தின் மன்னர் சம்சுதீன் அகமது ஷாவை வென்று மீண்டும் இலியாஸ் சாகி வம்சத்தினர் ஆட்சியை நிறுவினர்.

கணேசன் வம்ச ஆட்சியாளர்கள் (1414-1435)[தொகு]

பெயர் ஆட்சிக் காலம் குறிப்புகள்
இராஜா கணேசன் 1414–1415
ஜலாலுத்தீன் முகமது ஷா 1415–1416 இராஜா கணேசனின் மகன், பின்னர் இசுலாமை தழுவினார்
இராஜா கணேசன் 1416–1418 இரண்டாம் முறை
ஜலாலுத்தீன் முகமது ஷா 1418–1433 இரண்டாம் முறை
சம்சுத்தீன் அகமது ஷா 1433–1435

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Biographical encyclopedia of Sufis By N. Hanif, pg.320

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணேச_வம்சம்&oldid=3877032" இலிருந்து மீள்விக்கப்பட்டது