கணேசு ராக்
கணேசு ராக் (Ganesh Rakh) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த ஒரு மகப்பேறு மருத்துவர் ஆவார். புனே அடப்சர் பகுதியில் உள்ள தன் மெடிகேர் மருத்துவமனையில்[1] 2012- ஆம் ஆண்டு முதல், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் (முல்கி வாச்சவ் அபியான்)’ என்ற முழக்கத்துடன், பெண் குழந்தைகள் பிறந்தால் இலவசமாக பிரசவம் பார்க்கும் ஓர் இயக்கத்தை நடத்தி வருகிறார்.[2] தீக்காயங்கள், அமில வீச்சுகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச சிகிச்சையும், பெண் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்தியும் தொண்டு செய்து வருகிறார்.[3]
[4]== பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் == பெண் குழந்தை காப்போம் திட்டத்தின்படி இவரது மருத்துவமனையில் பிறக்கும் பெண் குழந்தைகளின் பிரசவ கட்டணம் இலவசமாக்கப்பட்டுள்ளது. திட்டத்தை ஆரம்பித்த ஒன்பது ஆண்டுகளில் இவரது மருத்துவமனையில் 2,000 பெண் குழந்தைகளுக்கு பிரசவ கட்டணத்தை இலவசமாக்கியுள்ளார். மேலும் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் படித்தவர்களிடம் தொடர்புகொண்டு, இத்திட்டம் குறித்து எடுத்துச் சொல்லி பெண் குழந்தைகளை வெறுக்கும் பெற்றோருக்குத் தேவையான ஆலோசனைகள் கொடுக்கும்படி அழைப்பும் விடுத்து வருகிறார். சட்டவிரோத கருக்கலைப்பு மற்றும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிதல் போன்ற காரியத்தில் ஈடுபட வேண்டாம் என்ற கருத்தை முன்னெடுத்து தொடர்ந்து இயங்கி வருகிறார்.
மகாராட்டிர மாநிலத்தில் மட்டும் பெண் குழந்தைகளுக்கு ஆதரவான இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இவருடன் இணைந்துள்ளனர். மகாராட்டிரம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க ‘பெண் குழந் தைகள் காப்போம்’ பிரசாரம் தொடங்கி நடைபெறுகிறது. சத்தீசுகர், சார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், ராசத்தான், தெலங்கானா, பஞ்சாப், அரியானா, குசராத், புதுடெல்லி போன்ற மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் துணையோடு விழிப்புணர்வு பிரசாரம், ஆலோசனைகள் வழங்கல் போன்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன. இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் இதுவரை 4 லட்சம் மருத்துவர்களும் 13,000 தொண்டு நிறுவனங்களும், 25,000 தன்னார்வலர்களும் சேர்ந்துள்ளனர். இந்தியா மட்டுமன்றி ஆப்பிரிக்க நாடான சாம்பியாவிலும் இத்திட்டத்தை கணேசு ராக் முன்னெடுத்துள்ளார்.[5][6]
பிறப்பு[தொகு]
கூலி தொழிலாளியான ஆதிநாத் மற்றும் வீட்டு வேலை செய்யும் சிந்து ஆகியோரின் மகனாக கணேசு ராக் பிறந்தார். இளமையில் கல்வி கற்க மிகவும் போராடினார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "'Save The Girl Child Campaign' at Medicare Hospital in Pune." இம் மூலத்தில் இருந்து 2021-11-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211113010118/https://english.mathrubhumi.com/health/your-doctor/deliver-a-girl-and-leave-hospital-for-free-pune-doc-s-noble-initiative-english-news-1.843206/save-the-girl-child-campaign-at-medicare-hospital-1.843217.
- ↑ "Ganesh Rakh: The doctor who delivers India's girls for free" (in en-GB). 2016-01-31. https://www.bbc.com/news/world-asia-india-35379231.
- ↑ IANS (2017-01-03). "Pune doctor's 'Save Girl Child' campaign completes five years". https://www.business-standard.com/article/news-ians/pune-doctor-s-save-girl-child-campaign-completes-five-years-117010300954_1.html.
- ↑ "இன்ப அதிர்ச்சி தரும் மருத்துவர்". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2021/nov/28/pleasantly-stunning-doctor-3743665.html. பார்த்த நாள்: 3 December 2021.
- ↑ மு.ஐயம்பெருமாள். "பெண் குழந்தை பிறந்தால் பிரசவ கட்டணம் இலவசம்! - புனே டாக்டரின் அக்கறை" (in ta). https://www.vikatan.com/government-and-politics/medicine/pune-doctor-ganesh-rakh.
- ↑ "Pune doc becomes messiah for baby girls, Big B calls him ‘real hero’" (in en). 2016-01-12. https://indianexpress.com/article/cities/pune/pune-doc-becomes-messiah-for-baby-girls-big-b-calls-him-real-hero/.