கணினி பார்வை நோய்த் தொகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணினி பார்வை நோய்த் தொகுப்பு அல்லது கணினி பார்வை இணைப்போக்கு நீண்ட நேரம் கணினித் திரையில் பார்வையைக் குவிப்பதன் விளைவாக ஏற்படும் தற்காலிக கண் நோய் ஆகும். இந்த நோயின் அறிகுறிகள் தலைவலி, மங்கலான பார்வை, கழுத்து வலி, கண்கள் சிவத்தல், கண் சோர்வு, கண்ணயர்ச்சி, உலர்ந்த கண்கள், இரட்டை பார்வை, ஒரே பொருள் பல பிம்பங்களாக தோன்றுதல் மற்றும் பார்வையை மீண்டும் நிலைப்படுத்தும் போது தோன்றும் சிரமம் (refocusing ) என்பனவாகும். இந்த அறிகுறிகள் முறையற்ற கண்கள் கூசும் ஒளியமைப்பு [1] மற்றும் பிரகாசமான மேல்நிலை விளக்கு அல்லது வேகமாக வந்து கண்களில் மோதும் காற்று (எ.கா. மேல்நிலை விசிறிகள், நேரடியாக மின்விசிறியிலிருந்து அடிக்கும் காற்று) போன்றவற்றால் மேலும் மோசமடைகிறது.

பரவல்[தொகு]

தொழில் சார்ந்த பாதுகாப்பு மற்றும் தேசிய சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, கணினி பார்வை நோய்த் தொகுப்பு அல்லது கணினி பார்வை இணைப்போக்கு 90 சதவிகிதம் கணினியை மூன்று மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரம் பயன்படுத்தும் பயனர்களைப் பாதிக்கிறது [2][3]

சிகிச்சை[தொகு]

உலர் கண் (dry eyes) என்பது கணினி பார்வை நோய்த் தொகுப்பு அல்லது கணினி பார்வை இணைப்போக்கு சிகிச்சையில் ஒரு முக்கிய அறிகுறியாக உள்ளது. செயற்கை-கண்ணீர் கரைசல்களை பயன்படுத்தி இந்த நோயின் அறிகுறியான உலர் கண் விளைவுகளை குறைக்கலாம்.

கண்ணில் தோன்றும் விழிசசோர்வு அல்லது பார்வைக் களைப்பு (Asthenopic) அறிகுறிகள் இந்த நோய் தாக்கத்தின் அளவைக் காட்டுகின்றன. கண்கள் மற்றும் இவற்றின் தசைகளுக்குக் கிடைக்கும் சரியான மற்றும் அவசியமான ஒய்வு குறிப்பிட்ட ஒருவர் தன கண்ணயர்ச்சியிலிருந்து விடுபட உதவும்.

பயனர்கள் கணினிகளில் வேலை செய்யும் போது கண்களுக்கு ஓய்வு கொடுப்பது பற்றிய விழிப்புணர்வை பல்வேறு கவர்ச்சியான சொற்றொடர்களைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்வதன் மூலம் ஏற்படுத்த வேண்டும். வழக்கமான அணுகுமுறை என்னவெனில் கண்களை அடிக்கடி சிமிட்டும் பயிற்சி கண்களில் கண்ணீர் நிரப்ப உதவுகிறது. கண்களை பாதி மூடிகொண்டு விழியினை சாளரத்துக்கு வெளியே இருக்கும் ஒரு தொலைதூர பொருள் மீதோ அல்லது வானத்தின் மீதோ பதியச்செய்யும் போது சிலியரி தசைகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. :[4] ஒவ்வொரு 20 நிமிடங்கள், 20 வினாடிகள் 20 அடி (6 மீட்டர்) தூரத்தில் உள்ள ஒரு பொருளின் மீது கண்கள் பார்வை செலுத்துவது என்ற செய்தியை பரப்ப உதவும் கவர்ச்சியான சொற்றொடர்களில் ஒன்று இது. இந்த சொற்றொடர் 20-20-20 விதி எனப்படும். இந்த பயிற்சி ஒரு நபருக்கு, பார்வைத்திறன் சோதனை நுட்பர் (optometrist) மற்றும் கண் மருத்துவர் அறிவுரையைப் பின்பற்ற ஒரு வசதியான தூரத்தையும் வேண்டிய கால அளவையும் தருகிறது. இது முடியவில்லையெனில் நோயாளி குறைந்தது ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அவருடைய கண்களை 20 விநாடிகள் மூட வேண்டும். இந்தப் பயிற்சி கூட முன்பு சொன்ன பலன்களை விளைவிக்கும்.

குறைந்துவிட்ட பார்வையை குவிக்கும் திறனை அதிகரிக்க பிளஸ் அளவீட்டில் (+1.00 முதல் +1.50 வரையிலான) கண் கண்ணாடிகள் அணிந்து மட்டுப்படுத்தலாம். இந்த கண்ணாடி அணிவதன மூலம் நோயாளிகளுக்கு அருகில் உள்ள பொருட்கள் மீது கவனம் செலுத்தும் திறனை மீட்க உதவுகிறது. பிற தொழில்களில் ஈடுபட்டிருப்போர் - குறிப்பாக தையல் கலைஞர்கள் எம்பிராய்டரி போன்ற நுட்பமான பணிகளில் கவனம் செலுத்தும்போது இந்த கண்ணாடிகளை அணிவதன் மூலம் பெரும் பயனடைய முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Izquierdo, Natalio J.; Townsend, William. "Computer Vision Syndrome". Medscape Reference: Drugs, Diseases & Procedures. WebMD LLC. பார்க்கப்பட்ட நாள் 27 February 2012.
  2. Becoming a Squinter Nation, Wall St. Journal, August 17, 2010
  3. CVS - The Syndrome, not the Store March 31, 2011 By Maj. Anthony J. Jarecke, Tri-Service Vision Conservation and Readiness Program
  4. Prevention By Mayo Clinic staff

வெளி இணைப்பு[தொகு]