கணினி பார்வை நோய்க்குறி
கணினி பார்வை நோய்க்குறி (Computer vision syndrome) என்பது ஒரு கணினி அல்லது பிற காட்சி சாதனத்தினைக் கண்களால் நீண்ட நேரம், இடையூறு இல்லாமல் ஒருமுகப்படுத்துவதாலும், நெருக்கமான பொருளின் மீது கவனம் செலுத்தத் தேவையான நிலையான பதற்றத்திலிருந்து கண் தசைகள் மீள முடியாமல் போவதாலும் ஏற்படும் ஒரு நிலை.
அறிகுறிகள்
[தொகு]கணினி பார்வை நோய்க்குறியின் சில அறிகுறிகளில் தலைவலி, மங்கலான பார்வை, கழுத்து வலி, சோர்வு, கண் சிரமம்,[1] உலர்ந்த கண்கள், எரிச்சலூட்டும் கண்கள், இரட்டை பார்வை, தலைச்சுற்றல், பாலியோபியா, கண்களை மீண்டும் கவனம் செலுத்துவதில் சிரமம் ஆகியவை அடங்கும். இந்த அறிகுறிகள் முறையற்ற ஒளி நிலைமைகளால் (அதாவது கண்ணைக் கூசும்)[2][3] வலுவான நீல நிற பின்னொளிகள், அல்லது பிரகாசமான மேல்நிலை விளக்குகள்) அல்லது கண்களைக் கடந்து செல்லும் காற்றினால் (எ.கா. மேல்நிலை துவாரங்கள், விசிறியிலிருந்து நேரடிக் காற்று) மேலும் மோசமாகலாம்.
சிகிச்சை
[தொகு]கணினி பார்வை நோய்க்குறியின் தீவிரத்தன்மைக்குக் கண்ணில் உள்ள ஆஸ்தெனோபிக் (கண் திரிபு) அறிகுறிகள் காரணமாகும். கண்களும், அதன் தசைகளுக்கும் சரியான ஓய்வு கொடுப்பதன் மூலம், தொடர்புடைய கண் அழுத்தத்தைப் போக்க பரிந்துரைக்கப்படுகிறது. நாள்பட்ட கண் அழுத்தத்தை அனுபவிக்கும் நபர்களின் அவதானிப்புகள், போதுமான தூக்கம் வருவதாகக் கூறும் பெரும்பாலான மக்கள் உண்மையில் இல்லை என்பதைக் காட்டுகிறது. இது, அவர்களுக்கே தெரியாமல், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் கண் அழுத்தத்தை உருவாக்குகிறது. இத்தகைய நோயாளிகள் ஏழு முதல் எட்டு மணி நேரம் தொடர்ந்த தூக்கத்தைக் கொண்டிருந்தால், தூக்கத்தின் காரணமாக அவர்களின் கண் தசைகள் மீட்கப்பட்டிருக்கும். இதனால் கண்களில் விகாரம் உருவாகாது.
கணினி பணியாளர்கள் கணினி பார்ப்பதிலிருந்து அடிக்கடி ஓய்வு எடுத்து தொலைதூரப் பொருட்களைப் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.[4] வழக்கமாகப் பரிந்துரைக்கப்படும் அணுகுமுறை, கண்களை அவ்வப்போது சிமிட்டுவது (இது கண்ணீர்ப் படலத்தை நிரப்ப உதவுகிறது), தொலைதூரப் பொருளை அல்லது வானத்தை ஜன்னலுக்கு வெளியே பார்ப்பது. இவ்வாறு செய்வதன் மூலம் கசைக்குச்சித்தசைகள் ஓய்வு பெறுகின்றன.[5] இது தொடர்பாக ஒரு கவர்ச்சியான சொற்றொடர் ஒன்று உள்ளது; "20-20-20 விதி": [6] ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 வினாடிகளுக்கு 20 அடி (6 மீட்டர்) தொலைவில் உள்ள ஒரு பொருளின் மீது கண்களை ஒருமுகப்படுத்தவும் என்பதே இந்த விதியாகும். கண் மருத்துவர், பார்வை அளவியலாளரின் பரிந்துரையின் அடிப்படையில் ஒரு நபர் பின்பற்றுவதற்கு வசதியான தூரத்தையும் காலக்கெடுவையும் இது வழங்குகிறது.
பல கணினி, திறன்பேசிகளின் பயன்பாடுகள் கணினி காணொளி வண்ண வெப்பநிலையைச் சரிசெய்கிறது. குறிப்பாக இரவில் திரையிலிருந்து வெளிப்படும் நீல ஒளியின் அளவைக் குறைக்கிறது.
உலர் கண் என்பது கணினி பார்வை நோய்க்குறி சிகிச்சையில் இலக்காகக் கொண்ட ஒரு அறிகுறியாகும். அதிகப்படியான செயற்கைக் கண்ணீர் தீர்வுகளின் பயன்பாடு கணினி பார்வை நோய்க்குறியில் உலர் கண்ணின் விளைவுகளைக் குறைக்கலாம். செயற்கைக் கண்ணீர் தீர்வுகளைப் பயன்படுத்துவதற்கு முன், வறண்ட கண் பிரச்சனைக்கான உண்மையான காரணமா (கண்ணீர் திரவ மட்டம் பரிசோதனை மூலம் அளவிடப்படுகிறது)[7] அல்லது உலர் கண்ணின் உண்மையான அறிகுறிகள் எதுவும் இல்லையா என்பதைச் சரிபார்க்க வேண்டும். கணினி பார்வை நோய்க்குறி காரணமாக வறண்ட கண்கள் ஈரப்பத அறை கண்ணாடிகள் அல்லது ஈரப்பதமூட்டி இயந்திரங்களைப் பயன்படுத்திச் சிகிச்சையளிக்கப்படலாம். செயற்கையாக வறண்ட காற்றுடன் கூடிய அலுவலக இடங்கள் கணினி பார்வை நோய்க்குறியை மோசமாக்கும். இதில் மேசைக்கணினி அல்லது அறை ஈரப்பதமூட்டி கண்கள் ஆரோக்கியமான ஈரப்பதத்தை வைத்திருக்க உதவும்.
இரவில், கணினி பார்வை நோய்க்குறி மோசமாக அமையும். கணினியில் இரவில் வேலை செய்யும் போது இருண்ட பயனர் இடைமுகத்தைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது.[8] பயனர் இடைமுகத்தைக் கருமையாக்கப் பல உலாவி மற்றும் செயல்பாட்டு அமைப்புகள் அல்லது துணை நிரல்கள் உள்ளன.
2017ஆம் ஆண்டு சீரற்ற கட்டுப்பாட்டுச் சோதனையானது, அதிகத் திரை நேரம் பயன்படுத்தும் நபர்களுக்கு விழிப்புள்ளிச் கரோட்டினாய்டு துணைப்பயன்பாட்டினை (லுடீன், ஜீயாக்சாண்டின், மீசோசெக்சாண்டின்) மதிப்பீடு செய்தது. துணைப்பயன்பாட்டு குழுவில் சுய-அறிக்கை தலைவலி, கண் சோர்வு, கண் சோர்வு, தூக்க புகார்களில் புள்ளிவிவரங்கள் குறிப்பிடத்தக்க குறைப்பைக் கொண்டிருந்தது. ஆனால் கழுத்து திரிபு அல்லது மங்கலான பார்வையில் எந்தக் குறைவும் இல்லை.[9]
2021ஆம் ஆண்டின் மதிப்பாய்வு கணினி பார்வை நோய்க்குறிக்கான சிகிச்சைகள் பரிந்துரைக்கப்பட்டது. கண் அழுத்தத்தைக் குறைக்க இரு அல்லது பல குவியக் கண்ணாடிகளுக்கு மாறுதல் அல்லது நீல ஒளியைத் தடுக்கும் கண்ணாடிகளைப் பயன்படுத்துதல் ஓரளவு பயன்பாட்டினைக் கொண்டிருந்ததற்கான ஆதரவினைத் தந்தது. இதே மதிப்பாய்வு கணினி பார்வை நோய்க்குறியினை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு முறையாக ஒமேகா-3 கொழுப்பு அமில" பயன்பாடு குறைவாக உள்ளதாகத் தெரிவித்தது.[10]
கண்கண்ணாடிகள்
[தொகு]ஒரு சிறிய கூடுதல்-திறன் (+1.00 முதல் +1.50 வரை) எதிர் இணைக் கண்கண்ணாடிகளை அணிவதன் மூலம் கவனம் செலுத்தும் திறன் குறைகிறது. இந்தக் கண்கண்ணாடிகளை அணிவது இத்தகைய நோயாளிகள் அருகிலுள்ள பொருள்களில் கவனம் செலுத்தும் திறனை மீண்டும் பெற உதவுகிறது. சித்திரத்தையலில் ஈடுபடும் தையல்காரர்கள் போன்ற பிற தொழில்களில் ஈடுபடுபவர்கள் இதே போன்ற அறிகுறிகளை உணரலாம். இவர்களுக்கு இந்தக் கண்ணாடி உதவலாம்.
36 பங்கேற்பாளர்களைக் கொண்ட பசிபிக் பல்கலைக்கழக ஆராய்ச்சி ஆய்வில், கண்களில் எரிச்சல் அல்லது எரிதல், கண்ணீர் அல்லது நீர் வழிதல், வறண்ட கண்கள், சோர்வான கண்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் கண்டறியப்பட்டன. இவை ஒவ்வொன்றும் அம்பர் நிற வில்லைகள், மருந்துப்போலி வில்லைகள் மூலம் மேம்படுத்தப்பட்டன.[11] ஆனால் 2008-இல் மேற்கொள்ளப்பட்ட பின்தொடர்தல் ஆய்வில், இதே குழு முதல் ஆய்வின் முடிவுகளை மீண்டும் உருவாக்க முடியவில்லை.
வில்லைகள் தொடர்பான துறையால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, நீல ஒளி-வடிகட்டுதல் வில்லைகள் ஒளி உமிழ்வுகளின் குறிப்பிட்ட அம்சங்களைக் குறைக்கிறது எனத் தெரியவந்தது. ஒளிநச்சேற்றத்தினை 10.6% முதல் 23.6% வரை குறைக்கிறது.[12] கூடுதலாக, மெலட்டோனின் ஒடுக்கம் 5.8% முதல் 15.0% வரையும் கண்ணின் இருளுக்குத் தக்க உணர்திறன் 2.4% முதல் 9.6% வரை குறைக்கப்பட்டது. இந்தச் சோதனையில் பங்கேற்றவர்களில் 70%க்கும் அதிகமானவர்களால் இந்த மாற்றங்களைக் கண்டறிய முடியவில்லை. தொழில்நுட்பத்தின் விரிவாக்கம் அதிகமான தனிநபர்கள் கணினிகள், தொலைக்காட்சிகளைப் பயன்படுத்துவதற்கு வழிவகுத்தது. இது நீல ஒளியின் ஒட்டுமொத்த வெளிப்பாட்டை அதிகரிக்கிறது. எவ்வாறாயினும், இரட்டை குருட்டுச் சோதனைகள் மின்னணு திரைகளிலிருந்து நீல ஒளியால் ஏற்படும் எண்ணிமக் கண் அழுத்தத்திற்கு நீல ஒளி வடிகட்டி வில்லைகள் பயன்படுத்துவதை ஆதரித்து எந்த ஆதாரத்தையும் ஆய்வுகள் காட்டவில்லை.[13][14][10]
அம்பர்-நிறங்கொண்ட வில்லைகள் நாடொறு இசைவினைப் பாதிப்பதாகவும், தாமதமான தூக்க நிலைக் கோளாற்றுக்குச் சிகிச்சையளிப்பதாகவும் உள்ளது.[15][16]
நோய் பாதிப்பு
[தொகு]தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான அமெரிக்கத் தேசிய நிறுவனத்தின் கூற்றுப்படி, கணினியில் ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் அல்லது அதற்கு மேல் செலவிடும் 90% மக்களைக் கணினி பார்வை நோய்க்குறி பாதிக்கிறது.[17]
மலேசியாவில் மற்றொரு ஆய்வு 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 795 பல்கலைக்கழக மாணவர்களிடம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவர்களில் 89.9 சதவிகிதத்தினர் கணினி பார்வை நோய்க்குறிக்கான கண் சோர்வுடன் தலைவலியையும் அனுபவித்ததாகத் தெரிவித்தனர்.[18]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Porcar, E.; Pons, A. M.; Lorente, A. (2016). "Visual and ocular effects from the use of flat-panel displays". International Journal of Ophthalmology 9 (6): 881–885. doi:10.18240/ijo.2016.06.16. பன்னாட்டுத் தர தொடர் எண்:2222-3959. பப்மெட்:27366692.
- ↑ Izquierdo, Natalio J.; Townsend, William. "Computer Vision Syndrome". Medscape Reference: Drugs, Diseases & Procedures. WebMD LLC. Retrieved 27 February 2012.
- ↑ "Computer Vision Syndrome Affects Millions". 2016-05-30. Archived from the original on 2018-02-10. Retrieved 2018-04-09.
- ↑ Toomingas, A.; Hagberg, M.; Heiden, M.; Richter, H.; Westergren, K. E.; Tornqvist, E. Wigaeus (1 January 2014). "Risk factors, incidence and persistence of symptoms from the eyes among professional computer users". Work (Reading, Mass.) 47 (3): 291–301. doi:10.3233/WOR-131778. பப்மெட்:24284674.
- ↑ Randolph, SA (July 2017). "Computer Vision Syndrome.". Workplace Health & Safety 65 (7): 328. doi:10.1177/2165079917712727. பப்மெட்:28628753.
- ↑ Brody, Jane E. (May 31, 2016). "Millions at risk of computer vision syndrome". ET Healthworld. Archived from the original on October 8, 2017. Retrieved October 7, 2017.
- ↑ Mainstone, J. C.; Bruce, A. S.; Golding, T. R. (June 1996). "Tear meniscus measurement in the diagnosis of dry eye". Current Eye Research 15 (6): 653–661. doi:10.3109/02713689609008906. பன்னாட்டுத் தர தொடர் எண்:0271-3683. பப்மெட்:8670769. https://pubmed.ncbi.nlm.nih.gov/8670769/.
- ↑ "Dark Mode vs. Light Mode: The Great Debate" (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-08-09. Retrieved 2024-02-14.
- ↑ Stringham, James; Stringham, Nicole; O’Brien, Kevin (2017). "Macular Carotenoid Supplementation Improves Visual Performance, Sleep Quality, and Adverse Physical Symptoms in Those with High Screen Time Exposure". Foods 6 (7): 47. doi:10.3390/foods6070047. பன்னாட்டுத் தர தொடர் எண்:2304-8158. பப்மெட்:28661438.
- ↑ 10.0 10.1 Singh, Sumeer; McGuinness, Myra B.; Anderson, Andrew J.; Downie, Laura E. (October 2022). "Interventions for the Management of Computer Vision Syndrome". Ophthalmology 129 (10): 1192–1215. doi:10.1016/j.ophtha.2022.05.009. பப்மெட்:35597519.
- ↑ Kundart, James; John R. Hayes; Yu-Chi Tai; Jim Sheedy (2007). "Gunnar Optiks Study: Accommodation and Symptoms (2007)". Pacific University Oregon: Common Knowledge. http://commons.pacificu.edu/verg/2/. பார்த்த நாள்: 2012-07-28.
- ↑ Tsz Wing leung; Roger Wing-hong Li; Chea-su Kee (2017). "Blue-Light Filtering Spectacle Lenses: Optical and Clinical Performances". PLOS ONE 12 (1): e0169114. doi:10.1371/journal.pone.0169114. பப்மெட்:28045969. Bibcode: 2017PLoSO..1269114L.
- ↑ M, Rosenfield; RT, Li; NT, Kirsch (2020). "A double-blind test of blue-blocking filters on symptoms of digital eye strain". Work (Reading, Mass.) 65 (2): 343–348. doi:10.3233/WOR-203086. பப்மெட்:32007978. https://pubmed.ncbi.nlm.nih.gov/32007978/.
- ↑ Singh, Sumeer; Downie, Laura; Anderson, Andrew (2021). "Do Blue-blocking Lenses Reduce Eye Strain From Extended Screen Time? A Double-Masked Randomized Controlled Trial". American Journal of Ophthalmology 226: 243–251. doi:10.1016/j.ajo.2021.02.010. பப்மெட்:33587901. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0002939421000726.
- ↑ Esaki, Yuichi; Kitajima, Tsuyoshi; Ito, Yasuhiro; Koike, Shigefumi; Nakao, Yasumi; Tsuchiya, Akiko; Hirose, Marina; Iwata, Nakao (9 April 2018). "Wearing blue light-blocking glasses in the evening advances circadian rhythms in the patients with delayed sleep phase disorder: An open-label trial". Chronobiology International 33 (8): 1037–1044. doi:10.1080/07420528.2016.1194289. பப்மெட்:27322730.
- ↑ Burkhart, Kimberly; Phelps, James R. (1 December 2009). "Amber lenses to block blue light and improve sleep: a randomized trial". Chronobiology International 26 (8): 1602–1612. doi:10.3109/07420520903523719. பப்மெட்:20030543.
- ↑ Becoming a Squinter Nation பரணிடப்பட்டது 2017-04-05 at the வந்தவழி இயந்திரம், Wall St. Journal, August 17, 2010
- ↑ Reddy, Chandrasekhara; Low (2013). "Computer vision syndrome: a study of knowledge and practices in university students". Neoalese Journal of Ophthalmology 5 (2): 161–8. doi:10.3126/nepjoph.v5i2.8707. பப்மெட்:24172549.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Computer Vision Syndrome (CVS)". American Optometric Association. 2017.
- Yan, Zheng; Hu, Liang; Chen, Hao; Lu, Han (September 2008). "Computer Vision Syndrome: A widely spreading but largely unknown epidemic among users". Computers in Human Behavior 24 (5): 2026–2042. doi:10.1016/j.chb.2007.09.004. https://www.sciencedirect.com/science/article/pii/S0747563207001501.