கணினி ஆய்வகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூயார்க்கில் உள்ள கணினி ஆய்வகம்

கணினி ஆய்வகம் (Computer lab) என்பது வரையறுக்கப்பட்ட சமூகத்திற்கு கணினி சேவைகள் வழங்கப்படும் இடமாகும். இவை பொதுவாக பொது நூலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களாக இருக்கலாம். [1] பொதுவாக, கணினிகளுக்கான அணுகலைத் தக்கவைக்க பயனர்கள் ஒரு குறிப்பிட்ட பயனர் கொள்கையைப் பின்பற்ற வேண்டும். அதாவது தகவல் பாதுகாப்புகளை சட்ட விரோதமான முறையில் அனுகலில் ஈடுபடக் கூடாது போன்றவை. [1] கணினி ஆய்வகங்கள் பெரும்பாலும் நேர வரம்புகளுக்கு உட்பட்டவை, இதன் மூலம் பரவலான எண்ணிக்கையில் மக்கள் ஆய்வகத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. பொதுவாக அணுகலுக்கு தனிப்பட்ட உள்நுழைவு சான்றுகள் தேவைப்படுவது. [1] இது பயனரின் செயல்பாடுகளைக் கண்காணிக்க நிறுவனங்களை அனுமதிக்கிறது. கணினி ஆய்வகங்களில் உள்ள கணினிகள் பொதுவாக இணைய அணுகல், படிம வருடி மற்றும் கணினி அச்சுப்பொறி பொருத்தப்பட்டிருக்கும் மற்றும் பொதுவாக வரிசைகளில் அமைக்கப்பட்டிருக்கும். இது விரிவுரை அல்லது விளக்கக்காட்சிகளை எளிதாக்குவதற்கும், [2] சிறு குழு வேலைகளை எளிதாக்குவதற்கும் வேலை நிலையத்திற்கு ஒத்த பார்வையை வழங்குவதாகும். [3] சில கல்வி நிறுவனங்களுக்கு, மாணவர்களின் மடிக்கணினிகளுக்குப்[4] தனியாக கணினி ஆய்வகங்கள் உள்ளன. இருப்பினும், தனிநபர் கணினிகளில் எளிதில் அணுக முடியாத சிறப்பு மென்பொருள் அல்லது வன்பொருள் தேவைப்படும் பயன்பாடுகளில் கணினி ஆய்வகங்கள் பயன்படுகின்றன. [3]

ஏற்பாடுகள்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 McCampbell, Atefeh S; Liedlich, Fred (1996). "Ethics and the Student Computer Lab". Journal of Business Ethics 15 (8): 897–900. doi:10.1007/BF00381857. https://archive.org/details/sim_journal-of-business-ethics_1996-08_15_8/page/897. 
  2. van den Blink, Claire C. "Uses of Labs and Learning Spaces". Educause Review. Educause Review. பார்க்கப்பட்ட நாள் 4 November 2015.
  3. 3.0 3.1 Hawkins, Brian; Oblinger, Diana G. "The Myth about the Need for Public Computer Labs". Educause Review. Educause Review. பார்க்கப்பட்ட நாள் 4 November 2015.
  4. MacPhee, Larry. "Learning Spaces: A Tutorial". Educause Review. Educause Review. பார்க்கப்பட்ட நாள் 11 November 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணினி_ஆய்வகம்&oldid=3890993" இலிருந்து மீள்விக்கப்பட்டது