கணித வரைக்கோட்டுப் படங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கணித வரைக்கோட்டுப் படங்கள் என்பது குறிப்பிட்ட கருத்தினை எளிதாக, விரைவாக,துல்லியமாக, கொடுக்கப்பட்ட,அட்டவணை எண் உருக்களின் தொகுப்பை அல்லது தொடர்பினை விளக்கும் துணைக் க்ருவியாகும். பயன்படுத்துவோருக்கு ஆர்வத்தை எற்படுத்தி எளிதில் புரிந்து கொள்ள உதவும்.

கணித வரைக்கோட்டுப் படங்களின் வகைகள்[தொகு]

தூண் வரைபடம்[தொகு]

தூண் வரைபடம் என்பது தொடர்புடைய இரு அளவுகளை எக்ஸ், ஒய்,அச்சுகளில் நிறுத்தி கொடுக்கப்பட்ட அளவுகளிருந்து வரையப்படும் வரைபடமாகும்.கிடைமட்ட,செங்குத்து கோடுகளில் வரையலாம்.

நேர்க்கோட்டு வரைபடம்[தொகு]

நேர்க்கோட்டு வரைபடம் தொடர்புடைய இரு அளவுகளை எக்ஸ்,ஒய் அச்சுகளில் நிறுத்தி பல புள்ளிகளைக் குறித்து இணைக்கும் கோடாகும்.

வட்ட வரைபடம்[தொகு]

வட்ட வரைபடம் கொடுக்கப்பட்ட விவரங்களை ,வட்ட கோணப்ப்குதிகளாக மாற்றி ,ஒரு முழு வட்டத்தில் குறித்துக் காட்டும் வரைபடம் ஆகும்.

பட வரைபடம்[தொகு]

பட வரைபடம் புள்ளித் தொகுப்பியல் விவரங்களை எண்களாக அளிக்காமல் எண்களுடன் அந்தந்த எண்களுக்கு ஏற்ற வகையில் படங்களையும் இணைத்துக் காட்டுவது பட வரைபடமாகும்.

கணித வரைக் கோடடுப் படத்தின் பயன்கள்[தொகு]

  • அனைவரும் எளிதில் ,விரைவாக , அறிய முடியும்.
  • ஒப்பிட்டு காணவும், வேறுபடுத்தி பார்க்கவும் முடியும்
  • தானே கற்க முடியும்.
  • அதிக செய்திகளை அறிய முடியும்,
  • மொழி தெரியாதவர்களும் செய்திகளை அறிய முடியும்.

மேற்கோள்[தொகு]

[1]

  1. கற்றலுக்கான தொழில்நுட்பம். தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்.. 2008. பக். 33.