கணித வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கணித வரலாறு

பாடத் தலைப்போடு அதன் வளர்ச்சியினையும் அத்தலைப்பை அறிமுகப்படுத்திய கணித மேதைகளின் வாழ்க்கை வரலாற்றையும் முன்னுரையாகக் கொடுத்து மாணவர்களை கணித பாடத்தின்பால் ஈர்க்க இயலும். கணிதவியலானது அறிவை வளர்ப்பதோடு கற்பவாின் வாழ்க்கை நெறிமுறைகளையும் செம்மைபடுத்தும் என்பது உண்மை.

கணித வளர்ச்சி:[தொகு]

உலக நாடுகள் அனைத்தும் கணித வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திருந்தாலும் சில குறிப்பிட்ட நாடுகளே சிறப்பாக துணைபுாிந்துள்ளன.

பாபிலோனியர்கள்[தொகு]

Babylonian tablet listing pythagorean triples

மெசபடோமியா பகுதியில் (இன்றைய ஈராக்) வாழ்ந்த மக்கள் பாபிலோனியர்கள். கி.மு. 539 ஆம் ஆண்டு சுமோியர்களின் இடைப்பட்ட காலம் பாபிலோனியர்களின் காலம் என கருதப்படுகிறது. 1850 ஆம் ஆண்டு வரை பூமிக்கடியில் புதையுண்டு கிடந்தத 400 களிமண் தகடுகள் கண்டெடுக்கப்பட்டன. பாபிலோனியர்கள் களிமண்ணில் எண்களை பதித்து தகடுகளை உருவாக்கினர். கி.மு.1800 முதல் 1600 வரை உள்ள காலகட்டத்தில் தான் அதிகமான களிமண் தகடுகள் கிடைத்துள்ளன. பின்னங்கள் இயற்கணிதம், இருபடி சமன்பாகள், பிதாகரஸ் தேற்றம், திாிகோணமிதி சார்புகள் குறித்த கணித தகவல்கள் இத்தகடுகளில் குறிப்பிடப்பட்டிருந்துதன.

Geometry problem on a clay tablet belonging to a school for scribes; Susa, first half of the 2nd millennium BCE

பாபிலோனியர்கள் 60 ஐ அடிப்படையாகக் கொண்டஎண்முறையை பயன்படுத்தினர். பாபிலோனிய எண் முறையில் இருந்து தான் இன்று நாம் பயன்படுத்தும் 1 நிமிடத்திற்க 60 நொடி, 1 மணிக்கு 60 நிமிடம், வட்டத்தின் கோண அளவு 3600 (60X6) ஆகியவை பழக்கத்தில் வந்தன. 60-ன் வகுத்திகளான 1, 2, 3, 4, 5, 6, 10, 12, 15, 20 மற்றும் 30 ஆகியவற்றை பயன்படுத்தி பின்ன வடிவ கணக்குகள் மற்றும் இடமதிப்புகளைக் கையாண்டனர். எனவே மெசபடோபியா கணிதத்தை பாபிலோனியர்கள் காலம் என குறிப்பிடுகிறோம். பாபிலோனியர்கள், எண்களின் அடிப்படை செயலுக்கு முன்பே கணக்கிடப்பட்ட வாய்ப்பாட்டை பயன்படுத்தினார்.

பரப்பளவு, கன அளவு காண பாபிலோனியர்கள் பொது விதிகளை பயன்படுத்தினார். மேலும் அவர்கள் கணித கருத்துக்களையும் கண்டுபிடித்தனர். அவை வற்றத்தின் சுற்றளவு அவை வட்டத்தின் சுற்றளவு = 3 முறை வட்டத்தின் விட்டம்.

வட்டத்தின் பரப்பளவு = 1/2(சுற்றளவு)2. இங்கு ன் மதிப்பு 3 என பயன்படுத்தினர். உருளையின் கனஅளவு = அடிப்பக்கப்பதரப்பு X உயரம் முதலியன ஆகும்.

எகிப்தியர்கள்:[தொகு]

பாபிரஸ் கையெடழுத்துப் பிரதிகள் மூலமாகவும், கல்வெட்டுகள் மூலமாகவும், பழம்பெரும் சின்னங்களின் மூலமாகவும் எகிப்தியர்களின் கணித அறிவைப்பற்றிய பல சான்றுகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. எகிப்திய கணிதமானது எகிப்திய மொழியில் எழுதப்பட்டது. ஏற்கனவே கிரேக்க மொழியில் இருந்த கருத்துகள் ஹெலனிஸ்டிக் காலத்தில் இருந்து எகிப்திய மொழிக்கு மாற்றப்பட்டது. இதனால் எகிப்திய கணிதமானது கிரேக்க மற்றும் பாபிலோனிய கணிதத்துடன் இணைத்து உருவாகி அது ஹெலனிஸ்டிக் கணிதமானது.

image of Problem 14 from the Moscow Mathematical Papyrus. The problem includes a diagram indicating the dimensions of the truncated pyramid.

எகிப்து மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை எண்கணிதத்தையும், வழவ கணிதத்தையும், ஏற்படுத்திக் கொண்டனர். இவர்கள் முழு எண்களையும் பின்னங்களையும் கூட்டுவதற்கும், கழிப்பதற்கும் அறிந்திருந்தனர். அவர்களின் வணிக சம்பந்தமான கணக்குகளைத் தீர்க்க பெருக்கலையும், வகுத்தலையும் கையாண்டனர். ஒவ்வோர் ஆண்டும் நைல் நதியின் வெள்ளப் பெருக்கெடுப்பிற்குப் பின் நைல் நிதியின் பள்ளத்தாக்குகளின் நிலப்பரப்பை அளந்து வாி விதித்தனர். இந்நிகழ்வு தான் வடிவ கணிதத்தின் பிறப்பிடமாக அமைந்தது.

எகிப்தியர்களின் எண்கள் 10 அடிமான எண்கள் ஆகும்.

மேற்கோள்[தொகு]

[[https://en.m.wikipedia.org/wiki/History_ of_mathematics]] கணித வரலாறு

  • Boyer, C.B. (1991) [1989], A History of Mathematics (2nd ed.), New York: Wiley, ISBN 0-471-54397-7
  • Katz, Victor J. (1998), A History of Mathematics: An Introduction (2nd ed.), Addison-Wesley, ISBN 978-0-321-01618-8
  • Katz, Victor J. (2007), The Mathematics of Egypt, Mesopotamia, China, India, and Islam: A Sourcebook, Princeton, NJ: Princeton University Press, ISBN 0-691-11485-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணித_வரலாறு&oldid=2371071" இருந்து மீள்விக்கப்பட்டது