கணித கருத்துப்பரிமாற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கணித கருத்துப் பரிமாற்றம்[தொகு]

வகுப்பறை செயல்பாடுகளை கற்போாின் தேவைகளுக்கு ஏற்ப கற்பித்தல் செயலை மேற்கொள்ளவும்,கற்றல் அடைவினை மதிப்பீடு செய்யவும் உதவுவது கணித கருத்துப் பரிமாற்றம்.

கணித கருத்துப் பரிமாற்றத்தின் அவசியம்[தொகு]

 • மாணவர்களின் கற்றல் இடற்பாடுகளை, பிழைகளை இனங்கண்டு கற்றல் செயல்பாடுகளை அமைத்தல்
 • கற்ற கருத்துக்களை நினைவுகூர்ந்து பயன்படுத்த செயல்பாடுகளை அமைத்தல்
 • குறை நீக்கும் நடவடிக்கைக்காக கற்றல் - கற்பித்தல் கருவிகளை தயாரித்து பயன்படுத்துதல்
 • தொடர் மதிப்பீடு செய்வதற்கான செயல்பாடுகளை தயாரித்தல்

கணித கருத்துப் பாரிமாற்றத்தின் படிநிலைகள்[தொகு]

 • தகவல்/கருத்துக்களை சேகரித்தல் (Gathering)
 • ஒருங்கிணைத்தல் (Organizing)
 • கருத்துப் பகிர்வு (Sharing)

தகவல்/கருத்துக்களை சேகரித்தல் (Gathering)[தொகு]

 1. கருத்து சேகரிக்க மேற்கொள்ள வேண்டிய செயல்களை தீர்மானித்தல்
 2. கருத்து சேகரிக்க திட்டமிடுதல்
 3. படித்தல், உற்றுநோக்கல் மற்றும் கவனித்தல் திறன்களைப் பயன்படுத்தி கணிதக் கருத்துக்களை படம், வரைபடம், மாதிரிகள், சொல்லாடல், குறியீடுகள் மூலம் வெளக்கொணர்தல்
 4. பொருத்தமான மற்றும் எளிதில் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தை தெரிவுச் செய்தல்

ஒருங்கிணைத்தல் (Organizing)[தொகு]

சேகரித்த கணிதக் கருத்து சார்ந்த விவரங்களை சீரமைக்கவும், மொழியாக்கம் செய்யவும் கலந்தாலோசித்து பின் கருத்துத் தொகுப்பினை உருவாக்குதலே ஒருங்கிணைத்தல் ஆகும்.

கருத்துப் பகிர்வு (Sharing)[தொகு]

சேகரித்தக் கருத்துக்களை தொகுத்தபின் கணித மாெழி மூலமாக தங்கள் கருத்துக்களை தெரிவித்துக்கொள்வதற்கு கருத்துப் பகிர்வு வாய்ப்பளிக்கிறது. கருத்துக்களை திறம்படத் தெரிவிப்பதால் கணித சிந்தனை தூண்டப்படுகிறது.

கணித கருத்துப் பரிமாற்ற மதிப்பீடு[தொகு]

 1. ஆசிரியரால் மதி்ப்பீடு செய்தல்
 2. சரிபார்ப்புப் பட்டியல் மூலம் மதிப்பீடு செய்தல்
 3. சுய மதிப்பீடு செய்தல்

கணித கருத்துப் பரிமாற்றத்தின் வகைகள்[தொகு]

 1. வாய்மொழிக் கருத்துப் பரிமாற்றம்
 2. எழுத்துவழிக் கருத்துப் பரிமாற்றம்
 3. சைகைவழிக் கருத்துப் பரிமாற்றம்
 4. காட்சிப்படுத்துதல் வழி கருத்துப் பரிமாற்றம்

வாய்மொழிக் கருத்துப் பரிமாற்றம்[தொகு]

கதை கூறுதல், கேள்வி கேட்டல் மற்றும் பதிலளித்தல், கட்டமைப்புடன் கூடிய மற்றும் கட்டமைப்பற்ற நேர்க்காணல், குழு விவாதம் மற்றும் ஒப்படைப்புகளை வாசித்ததல் ஆகிய நிகழ்வுகளின் மூலம் வாய்மொழிக் கருத்துப் பரிமாற்றம் நடைபெறும்.

எழுத்துவழிக் கருத்துப் பரிமாற்றம்[தொகு]

பயிற்சிக் கணக்குகள் செய்தல், வெட்டியொட்டற் புத்தகம் தயாரித்தல்,ஒரு மடிப்புடைய அட்டைகள் தயாரித்தல், செயல்திட்டம் மேற்கொள்ளல் மற்றும் எழுத்துத் தேர்வு எழுதுதல் மூலம் எழுத்துவழி கருத்துப் பரிமாற்றம் நடைபெறும்.

சைகைவழிக் கருத்துப் பரிமாற்றம்[தொகு]

சைகை மூலம் கருத்துக்களை பரிமாற கணிதக் குறியீடுகள் வழிவகுக்கும்

காட்சிப்படுத்துதல் வழி கருத்துப் பரிமாற்றம்[தொகு]

கருத்துக்களை படக்காட்சியில் பதிவு செய்து, அதன் மூலம் கருத்துப் பரிமாற்றம் நிகழ்வது மணவர்கள் மனதில் நன்கு பதியும்

கணித கருத்து பரிமாற்ற தடைகள்[தொகு]

கணித கருத்து பரிமாற்றத்தின் ஆக்கக் கூறுகள்[தொகு]