கணித்தமிழ்ச் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கணித்தமிழ் சங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கணித்தமிழ்ச் சங்கம் என்பது கணிப்பொறிப் பயன்பாடுகள், பல்லூடகம், இணையம் மற்றும் வேறெந்த மின்னணு ஊடகத்திலும், கணித்தமிழ் பயன்பாட்டுத் தளத்தில் பணியாற்றி வரும் தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள், தமிழ் எழுத்துருப் படைப்பாளிகள், பயன்பாட்டுக் கருவிகளை உருவாக்குபவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர் பெருமக்களின் பொதுவான நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்படும் ஒர் அமைப்பாகும். இதன் தலைவராக கணினி இயல் வல்லுனரும், கணினி தொடர்பான பல தமிழ் நூல்களை எழுதியவருமான மா. ஆண்டோ பீட்டர் என்பவர் இருந்து வந்தார். இவரது மறைவுக்குப் பின்பு சொ. ஆனந்தன் என்பவர் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுப் பொறுப்பேற்றுள்ளார்.

நோக்கங்கள்[தொகு]

  • கணிப்பொறிப் பயன்பாடுகள், பல்லூடகம், இணையம் மற்றும் வேறெந்த மின்னணு ஊடகத்திலும் கணித்தமிழ் பயன்பாட்டுத் தளத்தில் பணியாற்றி வரும் தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள், தமிழ் எழுத்துருப் படைப்பாளிகள், பயன்பாட்டுக் கருவிகளை உருவாக்குபவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர் பெருமக்களின் பொதுவான நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்படுவது.
  • சங்க உறுப்பினர்கள் தமிழ் மென்பொருள் உருவாக்கி கணிணியில் தமிழின் பயன்பாட்டைப் பரவலாக்குவதற்கு உதவி செய்வதும் வசதிகளை நல்குவதும்.
  • சங்க உறுப்பினர்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள, இனிமேல் உருவாக்கவிருக்கும் தமிழ் மென்பொருள்களையும், செயல்வரைவுகளையும் பற்றிய தகவலை, ஏனைய உறுப்பினர்களும், உலகமெங்குமுள்ள தமிழ்பேசும் சமுதாயமும் அறிந்துகொள்ளச் செய்யும்பொருட்டு அவற்றைச் சங்கத்தில் பதிவு செய்து கொள்ள வாய்பளிப்பது.
  • சங்க உறுப்பினர்களின் உருவாக்கப் பணிக்குத் தொடர்புடைய மென்பொருள் கருவிகளும், செயல்வரைவுகளும் அடங்கிய நூலகத்தை உருவாக்குவது.
  • சங்க உறுப்பினர்களின் உருவாக்கப் பணிகளுக்குத் தேவையான புத்தகங்களையும், வழிகாட்டு நூல்களையும், கொண்ட நூலகத்தை ஏற்படுத்துவது.
  • விசைப் பலகை வடிவாக்கம், குறியீட்டு நெறிமுறைகள், தமிழ்த் திரை வடிவமைப்பு, கணித்தமிழ்ச் சொல்லகராதி, மொழிபெயர்ப்பு மற்றும் ஒலிபெயர்ப்பு ஆகியவற்றைத் தரப்படுத்துவது.
  • கணித்தமிழ் மென்பொருள் உருவாக்கம், தரப்படுத்துதல், வளர்ச்சி நிதி வழங்கல், அரசின் உறுதிச் சான்றளிப்பு, தயாரிப்பாளரின் அறிந்தேற்பு, பதிப்புரிமைப் பாதுகாப்பு - ஆகியவை தொடர்பான, உறுப்பினர்களின் பொதுவான நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு, அனைவரும் ஓருங்கிணைந்த அமைப்பாக, அரசுத்துறைகளுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது.
  • கணித்தமிழ் வளர்ச்சியில் தொடர்புடைய தொழில்துறையுடன் தொடர்ச்சியான தகவல் தொடர்புக்கும் கூட்டு நடவடிக்கைக்கும் உதவும் பொருட்டு, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வது.
  • கணித்தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களிடைடே சிறந்த தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு உலகம் முழுவதிலுமுள்ள கணித்தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள் அனைவரையும் ஓரு குடையின் கீழ் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்வது.
  • மென்பொருள்/வன்பொருள் தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களுடன், பன்மொழி மென்பொருள் உருவாக்கத்தில் உள்ள சிக்கல்களைக் கலந்துபேசி, சங்க உறுப்பினர்களின் தயாரிப்புகளை அவர்களின் மூலமாக சான்றளிப்புப் பெற முயல்வது.
  • ஒரு பொதுவான இணையத் தளத்தில் மின்வணிகம் முலமாக சங்க உறுப்பினர்களின் படைப்புகளை விற்பனை செய்ய உதவி செய்வது.
  • இந்திய மொழிகள் மென்பொருள் உருவாக்க சங்கம், நாஸ்காம் போன்ற ஒத்த அமைப்புகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது.
  • சங்க உறுப்பினர்களிடையே ஒருமைப்பாட்டையும் நல்லுறவையும் ஏற்படுத்தி, உலகமெங்கும் தமிழ்பேசும் சமுதாயத்தினரிடையே சங்க ஒருமையை முன்னிறுத்திக் காட்டுவது.
  • சங்க உறுப்பினர்களின் பொதுவான நலன்களுக்கு உகந்த வேறெந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வது.

மேற்கண்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத் தேவைப்படுகின்ற, உதவுகின்ற மற்ற பல முயற்சிகளையும் மேற்கொள்வது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கணித்தமிழ் சங்க நோக்கங்கள்". web.archive.org. Archived from the original on 2016-03-19. பார்க்கப்பட்ட நாள் 2 ஆகத்து 2021.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணித்தமிழ்ச்_சங்கம்&oldid=3485431" இலிருந்து மீள்விக்கப்பட்டது