கணிதம் கற்பித்தல் -விதி வரு முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணக்கு பாடத்தில் வருகின்ற உண்மைகளையும், சூத்திரங்களையும், விதிகளையும், கருத்துகளையும் எடுத்த எடுப்பில் கூறாமல் முதலில் சில எடுத்துக் காட்டுகளைக் கூறிப் பின்னர் முடிவில் பொதுவான சூத்திரங்கள், உண்மைகள், விதிகள் முதலானவற்றை மாணவர்கள் தாமே கண்டறிந்து கொள்கின்ற வகையிலே அமைத்து செயல்படுத்தும் கற்பித்தல் முறையை விதி வரு முறை என்கிறனர்.

இம்முறையின் சிறப்பு
  1. . பருப்பொருள் மூலமாகக் கருப்பொருளை மாணவர்கள் விளங்கிக் கொள்கின்றனர்.
  2. . தெரிந்த கருத்துகளை வைத்துக்கொண்டு தெரியாத கருத்துகளை அறிந்து கொள்கின்றனர்.
  3. . எளிய கருத்துகளில் தொடங்கிச் சிக்கலான கருத்துகளைப் புரிந்து கொள்கின்றனர். இது உளவியல் அடிப்படையில் அமைக்கப்பட்ட கற்பித்தல் முறையாகும்.