கணிதத்துக்கான நெம்மர்ஸ் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதத்துக்கான நெம்மர்ஸ் பரிசு (Nemmers Prize in Mathematics) என்பது அமெரிக்காவில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழகத்திலிருந்து கணிதத்துக்காக வழங்கப்படும் பரிசு ஆகும். தொடக்கத்தில் இப்பரிசு கூட்டுப் பரிசாக வழங்கப்பட்டது. இக்கூட்டுப்பரிசை எமினெர்ஸ் சகோதரர்களிடம் இருந்து பெறப்பட்ட 14 மில்லியன் டாலர் நன்கொடையின் ஒரு பகுதியாக பொருளாதாரத்திலும் எர்வின் ப்ளைன் நெம்மர்ஸ் பரிசு வழங்கப்பட்டது. எமினெர்ஸ் சகோதரர்கள் நோபல் பரிசைப் போன்று மதிப்பு மிக்கதாக கருதப்படும் ஒரு விருதை உருவாக்கியுள்ளனர். விருதுகளின் அளவை அதிகரிக்க அவர்களின் வருமானத்தின் பெரும்பகுதியை வழங்கினர். இவ்விருதானது கணிதத்தில் சிறந்து விளங்கும் கணிதவியலாளர்களுக்கு ஐக்கிய மாகாணங்களில் வழங்கப்படும் மிகப்பெரிய பரிசாகக் கருதப்படுகிறது.[1]

தற்போது இவ்விருதிற்கு உதவித்தொகையாக 2,00,000 டாலர் வழங்கப்படுகிறது. மேலும் பரிசுபெற்றவர்கள் வடமேற்கு பல்கலைக்கழகத்தில் தங்கி பயன்பெற்று வருகின்றனர்.[2]

விருது பெற்றவர்கள்[தொகு]

 • 2016 - ஜானோஸ் கொல்லர்
 • 2014 - மைக்கேல் ஜே ஹாப்கின்ஸ்
 • 2012 - இன்கிரிட் டெளபீச்சீஸ்
 • 2010 - டெரன்ஸ் தாவ்
 • 2008 - சைமன் டொனாட்சன்
 • 2006 - ராபர்ட் லாங்லாண்ட்ஸ்
 • 2004 - மைக்கேல் க்ரோமேங்
 • 2002 - யாக்கோவ் ஜி.சினாய்
 • 2000 - எட்வர்ட் விப்டன்
 • 1998 - ஜான் எச். கான்வே
 • 1996 - ஜோசப் பி கெல்லர்
 • 1994 - யூரி ஐ மானின்

மேற்கோள்கள்[தொகு]