கணிதத்தில் பெண்களுக்கான சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணிதத்தில் பெண்களுக்கான சங்கம்
உருவாக்கம்1971
வகைதொழில்முறை நிறுவனம்
தலைமையகம்பிராவிடென்ஸ்
உறுப்பினர்கள்
5200
தலைவர்
காத்தரின் லியோனார்ட்
வலைத்தளம்awm-math.org

கணிதத்தில் பெண்களுக்கான சங்கம் (Association for Women in Mathematics) என்பது ஒரு தொழில்முறை சமூகமாகும். இதன் நோக்கம் பெண்களையும் சிறுமிகளையும் படிக்கவும் கணித அறிவியலில் முனைப்பான வாழ்க்கையைப் பெறவும் ஊக்குவிப்பதாகும். மேலும், கணிதத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சம வாய்ப்பு மற்றும் சமமாக நடத்தப்படுவதையும் முன்னெடுத்தலுமாகும். இது அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் 1971 நிறுவப்பட்டது. இச் சங்கமானது கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் மற்றும் கணித சங்கங்கள் போன்ற 250 க்கும் மேற்பட்ட நிறுவன உறுப்பினர்கள் உட்பட தோராயமாக 5200 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இது கணித அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வழிகாட்டியாக பல திட்டங்கள் மற்றும் பட்டறைகளை வழங்குகிறது. இதன் பெரும்பாலான பணிகள் கூட்டாட்சி மானியங்கள் மூலம் ஆதரிக்கப்படுகின்றன.

வரலாறு[தொகு]

சங்கம் 1971 இல் பெண் கணிதவியலாளர்களின் சங்கமாக நிறுவப்பட்டது. ஆனால் உடனடியாக பெயர் மாற்றப்பட்டது. [1]

இதன் கூட்டுக் கணிதக் கூட்டங்கள் வருடாந்திரக் கூட்டமாக நடத்தப்படுகிறது. 2011 இல், இதன் நாற்பதாவது-ஆண்டு கொண்டாட்டத்தின் போது ஒரு இருபதாண்டு ஆராய்ச்சி வெளியீட்டை ஆரம்பித்தது. [2]

செய்தி மடல்[தொகு]

கணிதத்தில் பெண்களுக்கான சங்கம் தனது செய்தி மடலையும் கொண்டுள்ளது. இதழ் தொடங்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, முதல் இதழ் மே 1971 இல் வெளியிடப்பட்டது. சங்கத்தின் அனைத்து வழக்கமான உறுப்பினர்களும் செய்திமடலின் அனைத்து நகல்களை தங்களுக்கு அனுப்புமாறு கோரலாம். செய்திமடல் இப்போது திறந்த அணுகலில் உள்ளது. மேலும் சங்கத்தின் இணையதளத்தில் இருந்து சமீபத்திய அல்லது கடந்தகால வெளியீடுகளையும் எவரும் படிக்கலாம் அல்லது பதிவிறக்கம் செய்யலாம்.

சான்றுகள்[தொகு]

  1. "A Brief History of the Association for Women in Mathematics (from Notices): How it was". Association for Women in Mathematics. 2019-02-02 அன்று பார்க்கப்பட்டது.
  2. "40 Years and Counting: 2011 is AWM's 40th Anniversary Year!". Association for Women in Mathematics. Association for Women in Mathematics. 2 February 2019 அன்று பார்க்கப்பட்டது.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]