கணிக்கும் எந்திரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கணிப்பான்

கணிக்கும் எந்திரங்கள் என்பன கணிதத்தின் அடிப்படைச் செயல்பாடுகளைச் செய்ய உதவும் இயந்திரங்களாகும். பிலெய்ஷ் பாஸ்கல் என்னும் பிரெஞ்சுக் கணித அறிஞர் 1642-ல் முதன் முதலில் எந்திரம் மூலம் கூட்டல் கணக்குகளைச் செய்ய முயன்றார். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் முதலிய எல்லாக் கணக்குகளையும் செய்யும் எந்திரம் 1939-ல் அமெரிக்காவில் செய்யப்பட்டது. பின்னர் சதவீதங்கள், வர்க்க மூலங்கள் இவற்றைக் கணக்கிடும் எந்திரங்களும் செய்யப்பட்டன. கணிக்கும் எந்திரங்கள் இன்று பல அளவுகளில் உள்ளன. தீப்பெட்டி அளவு சிறிதாக இருக்கும் எந்திரங்கள் பொத்தான் மின்கலத்தால் இயங்குகின்றன. ஓர் அறையைப் போலப் பெரிதாக உள்ள எந்திரங்களும் இருக்கின்றன. இவற்றுக்கு "கணினி" (Computer) என்று பெயர். ஒருவர் பத்து ஆண்டுகளில் செய்துமுடிக்கக் கூடிய சிக்கலான கணக்குகளை இந்த எந்திரம் ஒரு மணி நேரத்தில் செய்து முடித்துவிடும் ! பெரும் வணிக நிறுவனங்களும், வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும், புள்ளியியல் துறையைச் சார்ந்த அலுவலகங்களும் கணினிகளைப் பயன்படுத்துகின்றன. விண்வெளிக்கலங்களின் முழுப் போக்கையும் நிருணயித்து நடத்தவும் கணினி எந்திரங்களே பெரிதும் உதவுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]