கணபதி கணேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கணபதி கணேசன்
பிறப்புமார்ச் 3, 1955
யாழ்ப்பாணம் திருநெல்வேலி
இறப்புநவம்பர் 13, 2002
யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

சி்ந்தனையாளர் கணபதி கணேசன் (மார்ச் 3, 1955 - நவம்பர் 13, 2002) தமிழ் இதழியல் உலகில் நன்கு அறியப்பட்டவர். இலங்கை, தமிழ்நாடு, மலேசியா நாடுகளில் இதழாசிரியராகப் பணியாற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவரின் இயற்பெயர் கணபதி கணேசலிங்கம். யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் பிறந்தவர். தொடக்கக் கல்வி முதல் உயர்க்கல்வி வரை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பயின்றார்.

1970ஆம் ஆண்டிலிருந்து கணபதி கணேசன், மதுரா என்ற புனைப் பெயரில் ஈழநாடு, தினகரன், சிரித்திரன், செவ்வந்தி, வீரகேசரி, போன்ற இலங்கை இதழ்களிலும் மலேசியாவில் வாழ்ந்த காலத்தில் இதயம், மலேசிய நண்பன், மக்களோசை போன்ற இதழ்களிலும் எழுதி வந்தார்.

1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளிவந்த மேகம் என்ற சிறு இதழ் ஒன்றின் ஆசிரியராக இருந்தார். தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் 'மக்கள் பாதை மலர்கிறது', 'பொங்கும் தமிழமுது' போன்ற இதழ்களின் ஆசிரியராக பணியாற்றினார். 1998 ஆம் ஆண்டு மலேசியாவில் வெளிவரத் தொடங்கிய செம்பருத்தி மாத இதழின் பொறுப்பாசிரியராக பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டார். மலேசியத் தமிழர்களின் வாழ்வியல் உரிமைகள் குறித்து புள்ளி விவரங்களுடன் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார்.

அவர் மூன்று கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். அவரின் இறுதி கவிதை நூல் 'குருதி பூத்த வெள்ளரசு' உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் வெளியிடாக வெளி வந்துள்ளது.

ஈழத் தமிழர், தமிழ் நாட்டுத் தமிழர் என அனைவரின் எழுச்சிக்காகவும் எழுதினார். 13-11-2002 அன்று அவரின் உயிர் தமிழகத்திலேயே பிரிந்தது. யாழ்ப்பாணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

வெளி இணைப்புகள்[தொகு]

செம்பருத்தி இணையத்தளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணபதி_கணேசன்&oldid=2145304" இருந்து மீள்விக்கப்பட்டது