கணபதி அக்ரஹாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணபதி அக்கிரகாரம் (Ganapathi Agraharam) இந்தியாவின் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். காவேரி நதிக்கு நடுவில் ஓடும் இடமாகவும், வேளாண் நிலப்பரப்பின் எழில் மிகுஅழகுடனும் இந்தச் சிற்றூர் திகழ்கிறது. இவ்வூரில் அமைந்த புகழ்பெற்ற மகா கணபதி கோயிலின் பெயரால் கணபதி அக்கிரகாரம் அழைக்கப்படுகிறது.

கணபதி அக்கிரகாரத்தில் உள்ள கோயில்கள்[தொகு]

இங்கே ஒரு புகழ்பெற்ற மகா கணபதி (விநாயகர்) கோயில் உள்ளது. இக்கோவிலின் மூலவர் சிலை அகத்திய முனிவரால் நிறுவப்பட்டு, கௌதம மகரிஷியால் வணங்கப்பட்டு வந்ததாகும். இக்கோயிலின் தெய்வமான கணேசர் மக்களால் மிகவும் சக்தி வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். இந்த ஊரில் ஒரு சிவன் கோயில், சிறீ வரதராஜ பெருமாள் கோயில், திரௌபதி அம்மன் கோயில், அய்யனார் கோயில் ஆகியவை உள்ளன.

தெருக்களும் இடங்களும்[தொகு]

கணபதி அக்கிரகாரம் ஓர் ஊராட்சி அமைப்பாகும். இவ்வூர் வடக்கு தெரு, மேற்குத் தெரு என இருதெருக்களைக் கொண்டுள்ளன. தெற்கு, வடக்குத் தெருக்கள் இணையும் மூலையில் மகா கணபதி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு அருகாமையில் சிறீ வரதராஜ பெருமாள் கோயில், தேர் முட்டு, பரந்த வயல்வெளிகள் ஆகியன அமைந்துள்ளன. தெற்கு, வடக்கு தெரு வீடுகள் இரண்டும் அக்கிரகாரப் பாணியில் கட்டமைக்கப்பட்டிருக்கும்.

திருவிழாக்களும் நிகழ்ச்சிகளும்[தொகு]

இப்பகுதியில் விநாயகர் சதுர்த்தி முக்கிய நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகா கணபதிக்கு வழிபாடு செய்து அவருடைய தெய்வீக அருளைப் பெறுவதற்கு கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி ஒரு பெரிய பண்டிகையாக விநாயகர் சதுர்த்திக்கு முன்பிருந்தே தொடங்கப்படுகிறது. இவ்விழாவின்பொழுது, பல இடங்களில் இருந்தும் திரளான மக்கள் பூசையிலும் வழிபாட்டிலும் கலந்து கொள்வதற்கென ஆண்டுதோறும் வருகிறார்கள். திருவிழாவில் ஒவ்வொரு நாளும் 4 வேதமும் வாசிப்பதற்கென வேத குருக்கள் வரவழைக்கப்படுகின்றனர். இக்கோயிலின் கோடைத் திருவிழா, "பங்குனி விழா" அல்லது "பால்குடம் விழா" அல்லது "ஆண்டு விழா" என்று அழைக்கப்பட்டு ராஜகோபூரத்தின் ஆண்டுநிறைவு விழாவாக கொண்டாடப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு தொடங்கி, "பவித்ரா உட்சணம்" ஒவ்வொரு ஆண்டும் மகா கணபதிக்கு நிகழ்த்தப்பட்டு வருகிறது. 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி அது நடத்தப்பட்டது. 2010 இல் பவித்ரா உத்சவம் நவம்பர் 8 முதல் 11 வரை நடந்தது. ஜூன் 29, 2012 அன்று இத்தலத்திற்கு மகா குடமுழுக்கு நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 20,000 பேர் பங்கேற்று மகா கணபதியின் அருளைப் பெற்றனர்.

மேலும் இந்த கிராமத்தில் உள்ளவர்கள் விநாயகருக்கென தத்தம் வீடுகளில் தனி பூசை எதுவும் செய்வதில்லை, ஏனெனில் அவர்கள் மகா கணபதி ஆலயத்தில் வசித்து வருவதாக உண்மையுடன் நம்புகிறார்கள். விநாயகர் சதுர்த்தியின்பொழுது அக்கிரகாரத்தைச் சார்ந்தவர்கள் மோதகம் என்னும் கொழுக்கட்டையைச் செய்து, விநாயகர் திருக்கோயிலுக்குச் சென்று படைக்கின்றனர். இந்தியா முழுவதும் மற்ற இடங்களில் செய்வது போல் இங்கு களிமண்ணால் விநாயகர் சிலை உருவாக்கி வீட்டில் பூசை நடத்தும் வழக்கம் இவ்வூரில் இல்லை.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணபதி_அக்ரஹாரம்&oldid=3731123" இலிருந்து மீள்விக்கப்பட்டது