கணக்கீட்டு ஆய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கணக்கீட்டு ஆய்வு என்பது பொருளாதார செயல்முறை நிகழ்வுகளின் விளைவுகள் மற்றும் பொருளாதார நிகழ்வுகளின் அறிக்கை தகவல்கள் விளைவுகள் என்பவற்றை உள்ளடக்கியது. இந்த ஆய்வானது நிதி கணக்கியல் முகாமைத்துவ, கணக்கியல் தணிக்கை மற்றும் வரிவிதிப்பு உட்பட்ட பரந்த ஆராய்ச்சிப் பகுதிகளை உள்ளடக்கியது.

கணக்கீட்டு கல்வி சம்பந்தமான ஆய்வானது கணக்கியல் துறையின் அனைத்து அம்சங்களையும் அறிவியல் முறைமையின் மூலம் ஆராய்ச்சியின் போது பயிற்சிக் கணக்காளர்கள், தமது வாடிக்கையாளர்கள் அல்லது குழு சம்பந்தமான பிரச்சினைகளை தீர்க்க கவனம் செலுத்துகின்றது. கணக்கீட்டு ஆராய்ச்சியானது கணக்கீட்டு பயன்பாடுகளில் அதிக பங்களிப்பை செய்கின்றது. எனினும் கணக்கீட்டு கல்வி முறைகளில் கடந்த தசாப்தங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கணக்கியலானது கணக்கீட்டு கல்வி மற்றும் கணக்கீட்டு பயன்பாடுகள் எனும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

== முன்னோட்டம் ==

கல்வி ஆராச்சியாளர்கள் மற்றும் கணக்கீட்டு பயிலுனர்கள் மூலம் கணக்கீட்டு ஆய்வானது மேற்கொள்ளப்படுகின்றது. கணக்கீட்டு துறையின் அனைத்து பகுதிகளில் உள்ள பிரச்சினைகளை விஞ்ஞான முறைமையின் மூலம் மதிப்பீடு செய்கின்றது . இவ் ஆய்வானது நிதி தகவல் இ சோதனைகள் மற்றும் கணணி பாவனைகள் உட்பட பல்வேறு சான்றுகளை பயன்படுத்துகின்றது.

கணக்கீட்டு பயிலுனர்கள் ஆய்வானது வாடிக்கையாளர்கள் அல்லது குழு சம்பந்தமான பிரச்சினைகளை உடனடி தீர்வு காண்பதற்காக கவனம் செலுத்துகின்றது . உதாரனமாக புதிய வாடிக்கையாளர் வரி சட்ட தாக்கங்கள்இஅசாதாரண நிதி வழங்கல் நடவடிக்கை அறிக்கைஇ புதிய கணக்கு அல்லது தணிக்கை தர நிலைகள் என்பவற்றை உள்ளடக்கியது .

கணக்கீட்டு ஆய்வானது கணக்கீட்டு நிறுவனங்கள் மூலமாகவும் மேற்கொள்ளப்படுகின்றது. உதராணமாக சர்வதேச கணக்கியல் தரநிலைகள் வாரியமனது சில ஆராய்ச்சி திட்டங்களில் உள்ள பிரச்சினைகளை ஆராய்கின்றது . இந்த ஆராச்சியின் முடிவாக பிரச்சினையின் முடிவை மேற் கொள்ள கூடியதாக அமையும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணக்கீட்டு_ஆய்வு&oldid=1645093" இருந்து மீள்விக்கப்பட்டது