கணக்கம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணக்கம்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635207

கணக்கம்பட்டி (KANAKKAMPATTI) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

மக்கள்வகைப்பாடு[தொகு]

படப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது ஊத்தங்கரையில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவிலும் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 373 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 1,531 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 801, பெண்களின் எண்ணிக்கை 730 என உள்ளது.[2]


கணக்கம்பட்டி கிராமத்தில் அதிகமாக யாதவ சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றார்கள். இந்த கிராமத்தில் மா, வாழை, நெல் சாகுபடி மற்றும் இதர பயிர் வகைகள் சாகுபடி செய்யப்படுகிறது. ராகி, சாமை, பச்சைப்பயிறு, உளுந்து, நரிப்பயிறு, கொள்ளு, தட்டைப்பயிறு, அவரை, துவரை போன்ற தானிய வகைகளும் பயிரிடப்படுகின்றது.


படப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் ஒரு உயர்நிலைப் பள்ளியும், ஒரு தொடக்கப் பள்ளியும் அமைந்துள்ளது. கணக்கம்பட்டி கிராமம் கோவில்கள் சூழப்பட்ட ஒரு கிராமம் ஆகும். வடகிழக்கே குட்டை மாரியம்மனும், தென்கிழக்கு முனியப்பனும், வடக்கே வேடியப்பனும், மேற்கே செல்லியம்மனும் மற்றும் அக்குமாரியம்மனும்,தென்மேற்கு விநாயகப் பெருமானும், தெற்கு மாரியம்மனும், ஊரின் மையப்பகுதியில் பஜனை கோயில் என்றழைக்கப்படுகின்ற ஸ்ரீகிருஷ்ண பெருமாள் கோயலும் அமைந்துள்ளது.


இந்த கிராமத்தில் கோவில்கள், பள்ளிகள், நியாயவிலை கடை, பகுதி நேரம் நடமாடும் மருத்துவமனை, அங்கன்வாடி பள்ளி போன்ற அனைத்து அத்தியாவசிய வசதிகள் கொண்ட தன்னிறைவு பெற்ற கிராமம் ஆகும்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணக்கம்பட்டி&oldid=3106914" இலிருந்து மீள்விக்கப்பட்டது