உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டைக்கூத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டைக்கூத்து, கொச்சி
டி. எம். கிருஷ்ணாவின் கர்நாடக இசையுடன் கட்டைக்கூத்துக் காணொளி

கட்டைகூத்து (Kattaikkuttu), கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடத்தப்படும் நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றாகும்.[1] இது கூத்து வகைகளில் சார்ந்தது. இது தெருக்கூத்துப் போன்றதே. கட்டைக்கூத்து பாரம்பரியமாக ஆண்களால் நடத்தப்படுகிறது. இது பாடல், நடனம் மற்றும் நடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. கட்டைக்கூத்தில் சுமார் பதினைந்து கலைஞர்கள் பங்கேற்பார்கள். இக்கூத்தின் போது ஆர்மோனியம், செந்தா, குஜா போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்படும். இக்கூத்தின் உரையாடல்கள் நகைச்சுவையுடன் கூடியவை. கட்டைக்கூத்துடன் நடனமும் இணைந்துள்ளது.

கீழ்கண்ட விழாக்களின் போது கட்டைக்கூத்து நடத்தப்படுகிறது.

  1. பெண் தெய்வத் திருவிழாக்கள் (எடுத்துக்காட்டு திரௌபதி அம்மன் கோயில்)
  2. கிராமப்புற மாரியம்மன், அங்காளம்மன் மற்றும் பகவதியம்மன் கோயில் திருவிழாக்கள்
  3. இறப்புச் சடங்கின் போது
  4. பண்பாட்டுத் திருவிழாக்களின் போது

[2] கட்டைகூத்து என்பது இரவு முழுவதும் நடைபெறும் கூத்து ஆகும். கிராமப்புறங்களில் கட்டைக்கூத்து இரவு 10 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை நடத்தப்படுகிறது.[3]

வரலாறு

[தொகு]

கட்டைகூத்துக் கலைஞர்கள் அடர்த்தியான ஒப்பனைகள் வழியாக கதாபாத்திரங்களின் தோற்றத்தை ஆடை ஆபரணங்கள் வழியாக விளங்க வைப்பார்கள். அந்த ஆபரணங்கள் எடை குறைவாக இருக்கவேண்டும் என்பதற்காக தோள்களிலே எடை குறைவான கல்யாண முருங்கை மரத்திலான புஜக கட்டைகள், அதே மரத்தில் செய்யப்பட்ட கிரீடம் போன்றவற்றை அணிந்து கொண்டு கூத்து ஆடப்படுகிறது. இதுவே இக்கூத்து கட்டைக் கூத்து என்று அழைக்கப்பட காரணமாகும்.[4] கூத்து என்றால் நாடகம். பார்வையாளர்கள் நடிகர்களின் ஆடைகள், கிரீடங்கள் மற்றும் ஒப்பனை மூலம் புராண, இதிகாச கதாபாத்திரங்களை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.[2]கட்டைக்கூத்தில் பொதுவாக மகாபாரதக் கதை மாந்தர்களின் கதைகள்[5], அரிசந்திரன்-சந்திரமதி கதை, வள்ளித் திருமணம் போன்ற இதிகாச, புராணக் கதைகள் இயல், இசை, நாடகத்துடன் நடித்துக் காண்பிக்கப்படுகிறது.[6]

1990 நவம்பரில் ஆபத்தில் சிக்கிய கட்டைக் கூத்தை காப்பாற்றுவதற்காக 2002 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் ராஜகோபால் மற்றும் அவரது நெதர்லாந்து மனைவி அன்னா எம்டே ஆகியோரால் தமிழ்நாடு கட்டைக்கூத்து கலை வளர்ச்சி முன்னேற்ற சங்கம் உருவாக்கப்பட்டது. கலைத்திறன் கொண்ட ஏழைக் குழந்தைகளைக் கண்டறிந்து பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது ஐந்து வயது முதல் 15 வயது வரையிலான சுமார் முப்பது குழந்தைகள் இக்குழுவில் உள்ளனர். குருகுல முறையில் கலைப் படிப்புகள் நடைபெறுகிறது. தற்காப்பு கலைகள், பொம்மலாட்டம், நடன வடிவங்கள் மற்றும் கதை எழுதுதல் ஆகியவை முறையான கல்வியுடன் இச்சங்கத்தில் கிடைக்கின்றன. கட்டைக்கூத்துக் கலை பரந்த மற்றும் பலதரப்பட்ட பார்வையாளர்களை சென்றடையும் பொருட்டு, மார்ச் 2020ல் இக்குருகுலப் பள்ளி மூடப்பட்டது.

தமிழ்நாடு கட்டைக்கூத்து கலை வளர்ச்சி முன்னேற்றச் சங்கம், ரமோன் மக்சேசே விருது பாடகர் டி. எம். கிருஷ்ணா தலைமையில் கர்நாடகக் கட்டைக்கூத்து சங்கம்[7] என்ற பெயரில் பல நிகழ்ச்சிகளை நடத்தியபோது கட்டைக்கூத்து கலை வடிவம் மிகவும் கவனத்தைப் பெற்றது.

2018ஆம் ஆண்டில் கொச்சி முசிரிஸ் பைனாலே மற்றும் டி.எம். கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி சங்கீதா சிவகுமார் ஆகியோர் தமிழ்நாடு கட்டைக்கூத்து கலை முன்னேற்ற சங்கத்துடன் இணைந்து இந்த கலையை நிகழ்த்தினர். டி. எம். கிருஷ்ணா நடத்திய கட்டைக்கூத்தில், மகாபாரத காவியத்தில் சூதாட்டத்தின் போது துரியோதனனிடம் நாட்டையும், சகோதரர்களையும், தன்னையும் இழந்த நேரத்தில், திரௌபதியை அரசவையில் இழுத்து வந்து சேலையை உருவி அவமானம் செய்ய நினைத்த துச்சாதனன் விழைந்த போது, திரௌபதி இருகைகளை மேலே தூக்கி கிருஷ்ணரிடம் அபயம் அடைந்ததால்[3], சேலைகள் வளர்ந்து திரௌபதி மானம் காக்கப்பட்டாள். இக்கூத்தில் டி. எம். கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி சங்கீதா சிவகுமார் பாடியுள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jackie Assayag (1999). The Resources of history: Tradition, narration and nation in South Asia. École française d'Extrême-Orient. ISBN 978-2-85539-607-1.
  2. 2.0 2.1 Bruin, Hanne M de (1999). Kattaikkuttu: The flexibility of a south Indian theatre tradition. E. Forsten. pp. 85–99. ISBN 978-90-6980-103-2. கணினி நூலகம் 42312297.
  3. Bruin, Hanne M de (1999). Kattaikkuttu: The flexibility of a south Indian theatre tradition. E. Forsten. pp. 111–113. ISBN 978-90-6980-103-2. கணினி நூலகம் 42312297.
  4. மக்கள் மனம் கவர்ந்த மனமோகனம்
  5. Bruin, Hanne M. de (1998). Karna Moksham or Karna's Death: A Play by Pukalentippulavar. du Département d'Indologie. 
  6. Bruin, Hanne M de (1999). Kattaikkuttu: The flexibility of a south Indian theatre tradition. E. Forsten. pp. 113–124. ISBN 978-90-6980-103-2. கணினி நூலகம் 42312297.
  7. Bruin, Hanne M. de (2000). "Naming a theatre in Tamil Nadu". Asian Theatre Journal 17 (1): 98–122. doi:10.1353/atj.2000.0001. 

மேலும் படிக்க

[தொகு]

Frasca, Richard Armando (1990). Theatre of the Mahabharata: terukkuttu Performances in South India. University of Hawaii Press. ISBN 978-0-8248-1290-4. கணினி நூலகம் 21147946.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டைக்கூத்து&oldid=4200232" இலிருந்து மீள்விக்கப்பட்டது