உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டூரு நாராயணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டூரு நாராயணா (Katuru Narayana) ஓர் இந்திய இராக்கெட் விஞ்ஞானியும் சதீசு தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநரும் ஆவார்.[1] இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் இரண்டு ஏவுதள மையங்களில் சதீசு தவான் விண்வெளி மையமும் ஒன்றாகும். நாரயணா 1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இந்தப் பதவியை வகித்தார்[2] அதன் பின்னர் இவர் இரண்டு இந்திய விண்வெளித் திட்டங்களான முனைய துணைக்கோள் ஏவுகலம் மற்றும் புவியிசைவுத் துணைக்கோள் ஏவு ஊர்தி ஆகியவற்றிற்கான திட்ட தயார்நிலை மறு ஆய்வுக் குழுவின் இணைத் தலைவராக பணியாற்றினார்.[3]

நாரயணா சிறீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் கௌரவ முனைவர் பட்டம் பெற்றார்.[4] அறிவியல் மற்றும் பொறியியலில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2002 ஆம் ஆண்டில் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருதை இவருக்கு வழங்கியது.[5]

இதையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Overview of Indian Space Program". Eventful. 2016. Retrieved August 22, 2016.
  2. "Geek Night: RocketScience". Meet Up. 2016. Retrieved August 22, 2016.
  3. "New Board Elected". Project Management Institute, India. 2016. Archived from the original on மே 10, 2017. Retrieved August 22, 2016.
  4. "SVU convocation tomorrow". தி இந்து. August 18, 2006. Retrieved August 22, 2016.
  5. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2013. Archived from the original (PDF) on October 15, 2015. Retrieved August 20, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டூரு_நாராயணா&oldid=4169272" இலிருந்து மீள்விக்கப்பட்டது