கட்டுமாவடி
தோற்றம்
கட்டுமாவடி | |
|---|---|
கட்டுமாவடி, புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 10°07′42″N 79°13′26″E / 10.1283°N 79.2240°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| ஏற்றம் | 25.17 m (82.58 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 614630 |
| புறநகர்ப் பகுதிகள் | மணமேல்குடி, கிருஷ்ணாஜிப்பட்டினம் |
| மக்களவைத் தொகுதி | இராமநாதபுரம் |
| சட்டமன்றத் தொகுதி | அறந்தாங்கி |
கட்டுமாவடி என்பது தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] இது கடலோரத்திலுள்ள ஒரு மீனவக் கிராமமாகும்.[2]
அமைவிடம்
[தொகு]கட்டுமாவடி கடல் மட்டத்திலிருந்து சுமார் 25.17 மீ. உயரத்தில், (10°07′42″N 79°13′26″E / 10.1283°N 79.2240°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமையப் பெற்றுள்ளது.
விவரங்கள்
[தொகு]கட்டுமாவடியில் பெரிய மீன்சந்தை ஒன்று உள்ளது. இப்பகுதியில் நாட்டுப் படகுகள் மூலம் பிடிக்கப்படும் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு இறால் நிறுவனங்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள் செயல்பாட்டிலுள்ளன.[3]
சமயம்
[தொகு]இந்துக் கோயில்கள்
[தொகு]இராமநாதசுவாமி கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று இங்கு கட்டப்பட்டுள்ளது.[4]
அரசியல்
[தொகு]கட்டுமாவடி பகுதியானது, அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "KATTUMAVADI Village in PUDUKKOTTAI". www.etamilnadu.org. Retrieved 2025-05-25.
- ↑ தினத்தந்தி (2022-12-10). "'மாண்டஸ்' புயல் எதிரொலி: மீனவ கிராமங்களில் கடல் சீற்றம்" (in ta). https://www.dailythanthi.com/News/State/storm-mantus-reverberates-sea-rages-in-fishing-villages-854686.
- ↑ தினத்தந்தி (2023-01-16). "கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்". www.dailythanthi.com. Retrieved 2025-05-25.
- ↑ "கட்டுமாவடி ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்". www.dinakaran.com (in ஆங்கிலம்). Retrieved 2025-05-25.
- ↑ "Kattumavadi Village , Manalmelkudi Block , Pudukkottai District". www.onefivenine.com. Retrieved 2025-05-25.