கட்டுப்பாட்டுக் கோல்
Appearance

கட்டுப்பாட்டுக் கோல் (Control rod) என்பது அணுக்கரு உலைகளில் யுரேனியம், புளுட்டோனியம் ஆகியவற்றின் அணுக்கருப் பிளவை நேரடியாகக் கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாகும். பொதுவாக இது ஒரு கோலாகவோ அல்லது ஒரு குழாய் போலவோ அமைந்து, உலையில் மேலும் கீழும் நகரும் வண்ணம் அமைந்து இருக்கும். குழாயாக உள்ள போது உருக்கு அல்லது அலுமினியத்தால் ஆனதாக உள்ளது. இக்குழாயில் போரான், காட்மியம், அல்லது நியூட்ரான்களை அதிகம் ஏற்கும் பொருள்கள் நிரப்பப்பட்டிருக்கும். இது தொடர் வினையினையை கட்டுப்படுத்துவதால் கட்டுப்பாட்டுக் கோல் எனப்படுகிறது.[1][2][3]
உசாத்துணை
[தொகு]Dictionary of science-ELBS.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ytterbium (n.gamma) data with Japanese or Russian database
- ↑ Sairam K, Vishwanadh B, Sonber JK, et al. Competition between densification and microstructure development during spark plasma sintering of B4C–Eu2O3. J Am Ceram Soc. 2017;00:1–11. https://doi.org/10.1111/jace.15376
- ↑ Anthony Monterrosa; Anagha Iyengar; Alan Huynh; Chanddeep Madaan (2012). "Boron Use and Control in PWRs and FHRs" (PDF).