கட்டிடக்கலைப் பாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டிடக்கலைப் பாணி என்பது பெரும்பாலும் அமைப்பு அடிப்படையில், வடிவம், தொழில்நுட்பம், கட்டிடப் பொருட்கள் போன்றவற்றின் அடிப்படையில், கட்டிடக்கலையை வகைப்படுத்தும் முறையைக் குறிக்கின்றது. எனினும் இது கட்டிடக்கலையை முழுமையாக விளங்கிக்கொள்வதற்கு ஏற்ற ஒரு வழியல்ல. பொதுவாகப் பாணி பற்றிய எண்ணக்கரு கட்டிடக்கலையின் படிமுறை வளர்ச்சி, அதன் வரலாறு என்பனபற்றிய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதென்பதுடன், சில அம்சங்களில் பாணியென்பது வரலாற்றுடன் ஒத்த இயல்புடையதாகவும் அமைகின்றது. எனினும் அவை கட்டிடக்கலை தொடர்பான சிறிது வேறுபட்ட அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. எடுத்துக்காட்டாக கோதிக் கட்டிடக்கலையை (Gothic Architecture) வரலாற்று அடிப்படையில் நோக்கும்போது, அது அந்தக் கட்டிடக்கலையின் உருவாக்கத்துக்கு காரணமான எல்லாப் பண்பாட்டுச் சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்கிறது. அதே சமயம் "கோதிக்" கட்டிடக்கலைப் பாணியெனும்போது அது அக்கட்டிடக்கலையின் சில சிறப்பியல்புகளை மட்டுமே கருத்தில் கொள்கிறது.

கட்டிடக்கலைப் பாணிகள் சிலவற்றின் பட்டியலைக் கீழே காணலாம்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டிடக்கலைப்_பாணி&oldid=2220773" இலிருந்து மீள்விக்கப்பட்டது