உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டடம் நகர்த்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் சாலை விரிவாக்கத்தின் காரணமாக இடம் நகர்த்தப்படும் ஒரு கோயில்

கட்டடம் நகர்த்தல் (structure relocation) என்பது ஒரு கட்டடம் உள்ள இடத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட இருந்தாலோ அல்லது அந்த இடத்தில் மதிப்புமிக்க வேறு கட்டடம் கட்டுதல் போன்ற நோக்கத்துக்காக கட்டடத்தை இடிக்காமல் அருகில் உள்ள வேறு இடத்திற்கு நகர்த்தி வைத்தல் ஆகும்.

நகர்த்தும் விதம்

[தொகு]

கட்டத்தை நகர்த்த தனியாக சில நிறுவனங்கள் உள்ளன அந்த நிறுவன அதிகாரிகள் முதலில் கட்டடத்தை ஆய்வு செய்கின்றனர். கட்டடத்தை மாற்ற வேண்டிய இடத்தில் புதியதாக கடகால் போடப்படுகிறது. கட்டடத்தின் மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, புதைசாக்கடை இணைப்பு போன்றவை துண்டிக்கப்படுகின்றன, பிறகு கட்டடத்தின், நான்கு புறமும் பள்ளம் தோண்டப்படுகிறது. பின், பள்ளத்தில் ஜாக்கியை வைத்து, கட்டடத்தை ஜாக்கியின் உதவியால் உயர்துகின்றனர். கீழே இரும்பு பட்டைகள் அமைத்து பட்டைகள் மேல்சக்கரங்கள் கட்டடத்தை தாங்குவதுபோல் அமைக்கப்படுகிறது, சக்கரம் மூலம் கட்டடம் படுக்கவைக்கப்பட்ட ஜாக்கிகளின் உதவியால் சிறிது சிறிதாக நகர்த்தப்படுகிறது. இதன்மூலம் தேவையான தொலைவு கட்டடம் இடம் பெயர்கிறது. இதனால், கட்டடத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கூறுகின்றனர்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டடம்_நகர்த்தல்&oldid=1913957" இலிருந்து மீள்விக்கப்பட்டது