கட்டகக்கவின் பொறியியல்

கட்டகக்கவின் பொறியியல் (Architectural engineering), என்பது கட்டகங்களின் திட்டமிடல், வடிவமைப்பு, கட்டுமானம், பேணிக்காத்தல் ஆகிய செயல்முறைகளுக்கான தொழில்நுட்பக் கூறுகளையும் பலதுறை அணுகுமுறையையும் பயிலும் பொறியியல் புலமாகும். இங்குக் கட்டகம் என்பது கட்டிடம் மட்டுமல்லாத பிற அகச்சூழல் சார்ந்த பிற பொறியியல் அமைப்புகளையும் உள்ளடக்குகிறது. இவற்றில் ஆற்றல் பேணுதல், மின்திறன் அமைப்புகள், ஒளியூட்டும் அமைப்புகள், நீர்வரத்து அமைப்புகள், தீயணைப்பு அமைப்புகள், ஒலிநுட்ப அமைப்புகள், கிடை, குத்து போக்குவரத்து அமைப்புகள், கட்டிட உள்ளமைப்புகள், கட்டிட உறுப்புகள், பொருள்களின் நட்த்தைகளும் இயல்புகளும், கட்டுமான மேலாண்மை ஆகியனவும் அடங்கும்.[1][2]
பசுமை வளிமத்தைக் குறைத்தலில் இருந்து மீள்தகவுக் கட்டிடங்களின் கட்டுமானம் வரையில், 21 ஆம் நூற்றாண்டின் பல மாபெரும் அறைகூவல்களைச் சந்திக்கும் முன்னணியில் கட்டகக்கவின் பொறியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் கட்டிட வடிவமைப்புக்கு மிக அண்மிய அறிவியல் அறிவையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகின்றனர். கட்டக்க்கவின் பொறியியல் வேகமான தொழில்நுட்ப முன்னேற்றஙளின் விளைவாக 20 ஆம் நூற்றாண்டில் உருவாகிய மிகவும் புதிய உரிமம் தரப்படும் பொறியியல் புலமாகும். கட்டகக்கவின் பொறியாளர்கள் இன்றைய உலகின் இருபெரும் வரலாற்று வாய்ப்புகள் உள்ள முன்னணியில் செயலாற்றுகின்றனர். அவையாவன, (1) வேகமாக முன்னேறும் கணினித் தொழில்நுட்பம், (2) நீடிப்புதிறக் கோளை உருவாக்கவேண்டிய தேவையால் எழும் இணைபுரட்சி என்பனவாகும்.[3] வடிவமைப்புக் களையான கட்டக்க்கவினியலில் இருந்து வேறுபட்ட கட்டக்க்கவின் பொறியியல், கட்டிட நடைமுறையில் அமையும் பொறியியல், கட்டுமானம் ஆகியவற்றின் கலையும் அறிவியலும் ஆகும்.[4]
தொடர்புள்ள பொறியியல், வடிவமைப்புப் புலங்கள்[தொகு]
கட்டமைப்புப் பொறியியல்[தொகு]
கட்டமைப்புப் பொறியியல் கட்டிடங்கள், பாலங்கள், கருவிக் கட்டவைகள் கோபுரங்கள், சுவர்கள் போன்ற கட்டுமானச் சூழல்களைப் பகுப்பாய்வு செய்து வடிவமைப்பில் ஈடுபடுகிறது. கட்டிடங்களில் மட்டுமே பகுப்பய்வும் வடிவமைப்பும் மேற்கொள்ளும் பொறியாளர்கள் "கட்டிடப் பொறியாளர்கள்" எனப்படுகின்றனர். கட்டமைப்புப் பொறியாளர்கள் பொருள்வலிமை, கட்டமைப்பு பகுப்பாய்வு, கட்டிட எடை, வாழ்வோர், உட்பொருட்கள் உள்ளிட்ட கட்டகச் சுமைகளை முன்கணித்தல், காற்று, மழை, பனிப்பெய்வு, நிலநடுக்கச் சுமைகள் போன்ற அருஞ்சூழல் நிகழ்வுகள் கட்டமைப்புகளின் நிலநடுக்க வடிவமைப்பு ஆகியவற்றில் ஆழ்புலமை பெற்றிருக்க வேண்டும். நிலநடுக்கம் உள்ளிட்ட வடிவமைப்பும் கட்டுமானமும் நிலநடுக்கப் பொறியியல் எனப்படுகிறது. கட்டகக்கவின் பொறியாளர்கள் தம் வடிவமைப்பில் கட்டமைப்பை ஒரு கூறாகக் கருதுகின்றனர்; பொறியியல் வல்லுனருடனும் கட்டகக்கவினியலாளருடனும் இணைந்து மேற்கொள்ளும் கட்டமைப்புப் புலம் கட்டகக்கவின் பொறியியலாகும்.
எந்திர, மின், குழாய் அமைப்பு (எமிகு-MEP)[தொகு]
கட்டிட வடிவமைப்புப் புலங்களில் இடுபடும் எந்திரப் பொறியாளரும் மின்பொறியாளரும் எந்திர, மின், குழாய் அமைப்புப் பொறியாளராக ஒருங்கிணைவாக்க் கூறப்படுகிறார்கள். இந்த ஒருங்கிணைந்த புலம், ஐக்கிய இராச்சியத்திலும் கனடாவிலும் ஆத்திரேலியாவிலும் கட்டிடச் சேவைப் பொறியியல் எனவும் வழங்குகிறது.[5] எந்திரப் பொறியாளர்கள் பெரிதும் வெப்பமூட்டல், காற்றோட்ட ஏற்பாடு, கற்றுப்பதனம், குழாய் அமைத்தல் மழை வடிப்புத் தடஅமைப்புகள் ஆகியவற்ரின் வடிவமைப்பிலும் மேற்பார்வையிலும் ஈடுபடுவர். குழாய் அமைப்பவர்கள் தீயணைப்பு ஏற்பாடுகளையும் வடிவமைத்து மேற்பார்வையிடுவர். பெரிய திட்ட்ங்களில் தீயணைப்புப் பொறியாளர்களே இப்பணியை மேற்கொள்வர். மின்பொறியாளர்கள் கட்டிட மின்வழங்கல், தொலைத்தொடர்பு, தீ எச்சரிப்பு மணி, சைகை அனுப்பல், மின்னல்பாதுகாப்பு, கட்டுபாட்டுப் பொறியியல், கட்டகக்கவின் சார்ந்த ஒளியமைப்புகள் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கின்றனர்.
ஐக்கிய அமெரிக்கவில் கட்டகக்கவின் பொறியாளர்[தொகு]
ஐக்கிய அமெரிக்காவின் பல ஆட்சிப் பிரிவுகளில் கட்டகக்கவின் பொறியாளர் உரிமம்பெற்ற தொழில்முறைப் பொறியாளர் ஆவார்.[6] வழக்கமாக, இளவல் பட்டம் பெற்ற கட்டகக்கவின் பொறியாளர் முழு கட்டிட வடிப்பில் அல்லது கட்டிடம்சார் கட்டமைப்புப் புலம், எந்திரப்புலம், அல்லது மின்புலம் ஆகியவற்றில் கட்டகக்கவின் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சி தரப்படுகிறார்.
மேலும்காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Architectural engineer". McGraw-Hill Dictionary of Scientific & Technical Terms, 6E. 200. https://encyclopedia2.thefreedictionary.com/Architectural+engineer.
- ↑ "Architectural Engineering Institute (AEI)". https://www.asce.org/architectural-engineering/architectural-engineering-institute/.
- ↑ "What is Architectural Engineering?". The University of Texas at Austin. https://www.caee.utexas.edu/architectural/whatisarche.
- ↑ Definition of architectural engineering, Merriam Webster Dictionary. https://www.merriam-webster.com/dictionary/architectural%20engineering
- ↑ "Building Services Engineers Bring Buildings to Life". http://www.cibse.org/Building-Services/What-s-so-special-about-Building-Services-Engineer/Building-Services-Engineers-Bring-Buildings-to-Lif.
- ↑ "Licensure". NCEES இம் மூலத்தில் இருந்து 2012-11-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121101230715/https://ncees.org/Licensure.php. பார்த்த நாள்: 2013-10-20.