கட்ச் லாகுனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டைட்டனின் வடதுருவ கடல்கள் மற்றும் ஏரிகள் அகச்சிவப்புக்கு அருகில் தெரியும் கேசினி ஆய்வுக்கலத்தின் தோற்றம்

கட்ச் லாகுனா (Kutch Lacuna) என்பது டைட்டனில் காணப்படும் பெரிய இடைவிட்டுத் தோன்றும் ஒரு ஏரியாகும் [1]. 88,4 ° ,மற்றும் 217 ° மே என்ற அடையாள ஆள்கூறுகளில் [2] டைட்டனின் மேற்பரப்பில் 175 கிலோமீட்டர் நீளமாக இந்த ஏரி அமைந்துள்ளது. திரவ ஈத்தேனும் மீத்தேனும் சேர்ந்து இந்த ஏரியை உருவாக்கியுள்ளன [3]. கேசினி-இயுகென் புறவெளி தேட்டக்கலம் டைட்டனில் கட்ச் லாகுனாவைக் கண்டறிந்தது. இடைவிட்டுத் தோன்றும் ஏரிக்கான அறிகுறிகள் தெரிந்ததால், இந்திய-பாக்கித்தான் எல்லையில் கிரேட் இரான் ஆஃப் கட்ச், சதுப்புநிலம் [4] கண்டறியப்பட்ட பின்னர் 2013 ஆம் ஆண்டு இந்த ஏரிக்கு கட்ச் லாகுனா என்று பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kutch Lacuna at USGS.gov.
  2. Planetary names
  3. Athéna Coustenis, F. W. Taylor Titan: Exploring an Earthlike World. (World Scientific, 2008) pp. 154–155. ISBN 978-981-270-501-3.
  4. Five New Names Approved for Use on Titan
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்ச்_லாகுனா&oldid=2748163" இருந்து மீள்விக்கப்பட்டது