கட்ச் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்ச் அருங்காட்சியகம், புஜ்
Kutch museum building
Museum building gate
நிறுவப்பட்டது1 சூலை 1877 (1877-07-01)
அமைவிடம்அமிர்சர் ஏரிக்கு அருகில், புஜ், குஜராத், இந்தியா
ஆள்கூற்று23°14′55″N 69°39′59″E / 23.24861°N 69.66639°E / 23.24861; 69.66639ஆள்கூறுகள்: 23°14′55″N 69°39′59″E / 23.24861°N 69.66639°E / 23.24861; 69.66639
வகைஉள்ளூர் அருங்காட்சிகம், , வரலாற்று அருங்காட்சியகம், கலை அருங்காட்சியகம்

கட்ச் அருங்காட்சியகம் (Kutch Museum) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கச் நகரில் உள்ள புஜ் நகரில் ஹமிர்சர் ஏரிக்கு எதிரே அமைந்துள்ள அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகம் குஜராத் மாநிலத்தின் மிகவும் பழமையான அருங்காட்சியகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது .

வரலாறு[தொகு]

கட்ச் அருங்காட்சியகம் ஆரம்பத்தில், கட்ச் மாநிலத்தின் மகாராவ் ஆக இருந்த மூன்றாம் கெங்கார்ஜி [1] என்பவரால் ஒரு கலைப் பள்ளியின் ஒரு பகுதியாக நிறுவப்பட்டது. இது 1 ஜூலை 1877 ஆம் நாளன்று நிறுவப்பட்டது. [2] [3] [4] [5] [6] இந்த அருங்காட்சியகம் முன்பு ஃபெர்குசன் அருங்காட்சியகம் என்று அழைக்கப்பட்டது .

பிப்ரவரி 19, 1884 ஆம் நாளன்று மூன்றாம் மகாராவ் கெங்கார்ஜி திருமணம் செய்துகொண்டபோது, பல புதிய பொருட்கள் அன்பளிப்பாகப் பெறப்பட்டன. அவற்றைக் காட்சிப்படுத்தும் நோக்கிற்காக ஒரு புதிய கட்டிடம் தேவைப்பட்டது. ஆகவே, 1884 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் நாளன்று தற்போதைய அருங்காட்சியகக் கட்டிடத்திற்கு அப்போதைய பம்பாய் ஆளுநராக இருந்த சர் ஜேம்ஸ் பெர்குசன், என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் அந்த அருங்காட்சியகத்திற்கு அவர் பெயரிலேயே ஃபெர்குசன் அருங்காட்சியகம் என்று பெயர் சூட்டப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இந்த கட்டிடத்தைக் கட்டுவதற்கு அப்போது ரூ.32,000 செலவானது. இத்தாலிய கோதிக் பாணியில் கட்டப்பட்ட இந்த அருங்காட்சியகம், நாசர் பாக் தோட்டத்திற்கு எதிரே உள்ள ஹமீர்சர் ஏரியின் கரையில் உள்ள அழகிய சூழலில் அமைந்துள்ளது. [2] இது மாநில பொறியியலாளராக இருந்த மெக் லெலண்ட் [5] என்பவரால் வடிவமைக்கப்பட்டது ஆகும். உள்ளூரில் இருந்த மிஸ்டிரிஸ் ஆப் கச்சைச் சேர்ந்த [7] கட்டிடப் பணியாளர்களால் கட்டப்பட்டது. இது மாநில கெய்தuhf [8] இருந்த ஜெய்ராம் ருடா கஜ்தரின் மேற்பார்வையில் கட்டப்பட்டது. [9] [10] 1948 ஆம் ஆண்டு வரை இந்த அருங்காட்சியகம் கச்சின் மகாராவோவின் தனிப்பட்ட பாதுகாப்பு காட்சியகமாக செயல்பட்டு வந்தது, அவர் அதை தனது தனிப்பட்ட விருந்தினர்களுக்கு மட்டுமே காட்டினார். அந்த நாட்களில் முக்கியமான சமயம் தொடர்பான நிகழ்வுகளை நடத்தும்போது மட்டுமே இந்த அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிடும் நிலை இருந்தது. அப்போது மட்டுமே அது அவர்களுக்கு திறந்து வைக்கப்பட்டது.

சேகரிப்புகள்[தொகு]

இந்த அருங்காட்சியகத்தில் கி.பி. 1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சத்ரபதி கல்வெட்டுகளின் மிகப்பெரிய தொகுப்பு உள்ளது. காவ்தாவில் உள்ள அந்தாவ் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமை வாய்ந்த ஆறு சத்ரபதி கல்வெட்டுகள் இந்த அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை முதலில் லஷ்டி என்று அழைக்கப்படுகின்ற மலையடிவாரத்தில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டன. முதலாம் ருத்ரதமன் காலத்தில் அவை அமைக்கப்பட்டன. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரே குஜராத்தி அபிர் கல்வெட்டும் இங்கே காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. அழிந்துபோன கட்ச் எழுத்தின் மாதிரிகளும் (தற்போது கச்சி மொழி பெரும்பாலும் குஜராத்தி எழுத்தில் எழுதப்படுகிறது) இங்கு உள்ளன. மேலும் 1948 ஆம் ஆண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த கோரிஸ் எனப்படுகின்ற கட்ச் பகுதியின் உள்ளூர் நாணயங்கள் உள்ளிட்ட நாணயங்களின் சேகரிப்பும் இங்கு காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. [2] [4] [5]

இந்த அருங்காட்சியகத்தில் கிட்டத்தட்ட 11 பிரிவுகள் காணப்படுகின்றன. தொல்பொருள் பிரிவில் சிந்து முத்திரைகள் உள்ளன. பல்வேறு வகையான கல் துண்டுகளும் உள்ளன. கட்ச் பகுதியைச் சேர்ந்த வெவ்வேறு தொழில்களைக் காட்டும் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நாக்பானி, மோர்ச்சாங் உள்ளிட்ட பல செவ்வியல் இசைக்கருவிகள் உள்ளிட்ட பல பொருள்கள் இங்கு காட்சியில் உள்ளன.

அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி பழங்குடியினர் பண்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, அப்பிரிவில் பழங்கால கலைப்பொருட்கள், நாட்டுப்புற கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் மற்றும் பழங்குடி மக்களைப் பற்றிய தகவல்கள் பலவற்றைக் காணலாம். இந்த அருங்காட்சியகத்தில் எம்பிராய்டரி, ஓவியங்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகள், சிற்பம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகத்தால் ஆன பொருள்கள் உள்ளிட்ட பல காட்சிப்பொருள்கள் உள்ளன. [4]

இந்த அருங்காட்சியகத்தில் பரவலாக, ஒரு படத்தொகுப்பு, ஒரு மானுடவியல் பிரிவு, ஒரு தொல்பொருள் பிரிவு, ஜவுளி, ஆயுதங்கள், இசைக்கருவிகள், ஒரு கப்பல் பிரிவு ஆகியவை உள்ளன. மேலும் பதனம் செய்யப்பட்ட விலங்குகள் காட்சியில் உள்ளன. [3]

அருங்காட்சியகத்தின் தரை தளத்தில், மைய அறையில், ' ஐராவத் உள்ளது. 'ஐராவத்' என்பது ஏழு தந்தங்களைக் கொண்ட வெள்ளை யானை ஆகும். அது மரத்தால் அழகாக செதுக்கப்பட்டு அமைந்துள்ளது. தீர்த்தங்கரின் வழிபாட்டிற்காக 18 ஆம் நூற்றாண்டில் மாண்ட்வி என்னுமிடத்தில் 'ஐராவத்' தயாரிக்கப்பட்டது. அதன் உடலின் எஞ்சிய பகுதிகளில் பூக்களால் வரையப்பட்டுள்ளன. "அருங்காட்சியகப் புதையல்கள் " என்ற அஞ்சல் தொடரின் கீழ் இந்த 'ஐராவத்தை' சித்தரிக்கின்ற வகையில் இந்திய அரசு 1978 ஆம் ஆண்டில் ஒரு சிறப்பு அஞ்சல் முத்திரையை வெளியிட்டது. [2] [5] [11]

குஜராத்தின் மிகப் பழமையான அருங்காட்சியகம் என்ற பெருமை உடைய கட்ச் அருங்காட்சியகம் 2010 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் ஆன்லைன் மெய்நிகர் அருங்காட்சியகமாக மாறிய பெருமையினைப் பெற்ற அருங்காட்சியகமாகும். [12]

மேலும் காண்க[தொகு]

காட்சிக்கூடம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. "Khengarji III", Wikipedia (ஆங்கிலம்), 2019-06-07, 2019-12-31 அன்று பார்க்கப்பட்டது
 2. 2.0 2.1 2.2 2.3 Kutch Museum
 3. 3.0 3.1 "Kutch Museum". 2018-08-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-12-31 அன்று பார்க்கப்பட்டது.
 4. 4.0 4.1 4.2 Kutch Museum பரணிடப்பட்டது 25 செப்டம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம்
 5. 5.0 5.1 5.2 5.3 Kutch Museum, Bhuj[தொடர்பிழந்த இணைப்பு]
 6. Kutch Museum
 7. Kshatriya, Jignesh. "MEGHATROPIQUES IGS-1D PRODUCT FROM ROSA". Geophysical Product. 2019-12-31 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Gaidher", Wikipedia (ஆங்கிலம்), 2015-12-02, 2019-12-31 அன்று பார்க்கப்பட்டது
 9. Kutch Gurjar Kshatriyas : A brief History & Glory : by Raja Pawan Jethwa, Calcutta, 2007 Page:63 Jairam Ruda Gajdhar of Mistri community was the Gaidher of the State during reign of Pragmulji II and part of reign Khengwarji Bawa, when Prag Mahal, Alfred High School, Fergusson Museum, embankment of Hamirsar Lake, etc. were constructed.
 10. Nanji Bapa ni Nondhpothi Author : Nanji Gavindji Taunk compiled by Dharsi J. Taunk, Jamshedpur, Published at Vadodara : pp:03
 11. A 25 paisa stamp was issued on 27 July 1978 under the `Treasures of Museum' series on Kutch Museum. Jainism in Philataly
 12. Kutch museum's virtual reality