கடோபநிஷத் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கடோபநிஷத்
நூல் பெயர்:கடோபநிஷத்
ஆசிரியர்(கள்):ஸ்ரீ உமாஷக்தி
வகை:ஆன்மீகம்
துறை:ஆன்மீகக் கருத்துக்கள்
இடம்:வரம் பதிப்பகம்,
நியூ ஹாரிஜன் மீடியா பி. லிட்.,
எண்: 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்பேட்டை
சென்னை -600 018.
மொழி:தமிழ்
பக்கங்கள்:160
பதிப்பகர்:வரம் பதிப்பகம்
பதிப்பு:ஆகஸ்ட்2007
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

வாழ்க்கையின் முடிவு மரணம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதற்குப் பின்பும் வாழ்க்கையின் தனிப்பட்ட தொடர்ச்சி ஒன்றும் இருக்கிறது என்கிறது இந்து சமயம். கடோபநிஷத் எனும் பெயரில் விளக்கப்பட்டுள்ள இந்நூல் (ISBN 978-81-8368-426-2) 160 பக்கங்களுடன் இந்திய மதிப்பில் ரூபாய் 70 எனும் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

நூலாசிரியர்[தொகு]

நூலாசிரியர் ஸ்ரீ உமாஷக்தி குறித்த குறிப்புகள் இந்நூலில் தரப்படவில்லை.

பொருளடக்கம்[தொகு]

இந்நூல் பகுதி 1, பகுதி 2 என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பகுதி1[தொகு]

 1. ஒரு கேள்வியின் விஸ்வரூபம்
 2. ஆழமான விஷயங்களைப் பேசும் அழகு உபநிஷதங்கள்
 3. விசித்திர யாகம்! வினோத நிபந்தனை
 4. எமனுக்கு ஒரு தானம்
 5. எமன் தந்த வரங்கள்
 6. மரண ரகசியம்
 7. எல்லாம் மாயை

-எனும் தலைப்புகளில் வாஜசிரவஜர் எனும் வேதியர் ஒருவர் "விஸ்வஜித்" எனும் யாகம் நடத்துகிறார். இந்த யாகத்தை அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த அவருடைய மகன் நசிகேதன் அடிக்கடி கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருந்த நிலையில் அவனுடைய தொல்லை பொறுக்க முடியாமல் அவனை எமனுக்குத் தானமாக வழங்குவதாக கூறிவிடுகிறான். இதன்படி நசிகேதன் எமனுலகம் செல்கிறான். அங்கு எமனைச் சந்திக்க முடியாமல் மூன்று நாட்கள் இருக்கிறான். நான்காவது நாள் எமன் வர அவன் மூன்று நாட்கள் காத்திருந்தது அறிந்து வருந்துகிறான். அதற்கு ஈடாக எமன் அந்தச் சிறுவனுக்கு மூன்று வரங்கள் தருவதாகக் கூறுகிறார். சிறுவன் நசிகேதன் முதல் வரமாக பூவுலகிற்கு முன்பிருந்தது போல் செல்ல வேண்டும் என்றும், இரண்டாவது வரமாக சொர்க்கம் குறித்தும், மூன்றாவது வரமாக மரண ரகசியத்தையும் கேட்டு அறிகிறான். இதுதான் கட உபநிஷதம் என்று முதல் பகுதியில் முழுமையான கதை வடிவில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பகுதி 2[தொகு]

 1. வாழ்க்கை ருசிப்பதற்கே
 2. மனத்தில் குதிக்கும் குரங்கு
 3. மனத்துக்கு ஒரு சாட்டை
 4. ஆத்மாவின் சட்டைகள்
 5. உடலை ஆராதிப்போம்
 6. உயிரே, உயிரே...
 7. மனம் எனும் மாயக் கண்ணாடி
 8. மணல் புத்தி
 9. தளும்பி வழியும் எண்ணங்கள்
 10. நான்தான் ஆன்மா!
 11. பற்றை விடு...ஆசையை அல்ல!
 12. இதுதான் பாதை, இதுதான் பயணம்!
 13. மரணம் என்பது அரைப்புள்ளி
 14. குரு தொலைத்த சாவி
 15. காற்றும் கடவுளும்
 16. அடிமைகளின் அடிமை
 17. வாசலுக்கு வரும் வரங்கள்!
 18. துகள்களும், தூசிகளும்!
 19. மரணத்தைச் ஜெயிப்போம்!
 20. நிலா நிழல்!
 21. நாம், நாமாக இருப்போம்!

-எனும் 21 தலைப்புகளில் மனித வாழ்க்கையை எப்படி வாழ்வது என குட்டிக் கதைகள் மற்றும் ஆன்மீகக் கருத்துக்களுடனும் விளக்கப்பட்டிருக்கிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடோபநிஷத்_(நூல்)&oldid=2696443" இருந்து மீள்விக்கப்பட்டது