கடுகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கடுகி[தொகு]

    சுண்டைக்காய்க்கு மலைச்சுண்டை, கடுகி என்ற பெயர்களும் உண்டு . இது, பெரும்பாலும் மலைகளில் பயிராகும் செடியாகும். ஆனைச்சுண்டை , என வேறொரு வகையும் உண்டு. சுண்டைச்செடியில் அங்கொன்றும் , இங்கொன்றும் முட்கள் காணப்படும். பச்சை நிராக காய்கள் கொத்து கொத்தாகக் காணப்படுகின்றன. சுண்டைக்காயின் சுவை கசப்பு. இதனுடைய தன்மை வெப்பம் உள்ளதாகும். இதனுடைய காய் , வற்றல், வேர் ஆகிய எல்லாமே பயன்படுகின்றன. இது நெஞ்சில் உள்ள கோழையை அகற்றிவிடும். சுண்டைக்காய் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. இது பசியை தூண்டுவதில் சிறப்புடையது. சுண்டைக்காய் வற்றலை புசித்து வந்தால் வயிறு ஊதல், வயிற்று வலி, தீக்குற்றத்திலுண்டான ஏப்பம் ஆகியவை போகும். நெஞ்சில் தங்கிய கர்வம், நுண்புழுவால் உண்டான சுவையின்மை, வயிற்றுப்புழு, மூலம் ஆகியவை ஒழிந்துவிடும்.
Solanum torvum
Solanum torvum 2.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு: மெய்யிருவித்திலையி
துணைவகுப்பு: Asteridae
வரிசை: கத்தரி வரிசை
குடும்பம்: கத்தரிக் குடும்பம்
பேரினம்: கத்தரிப் பேரினம்
இனம்: S. torvum
இருசொற் பெயரீடு
Solanum torvum
    சுண்டைக்காயில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. சுண்டைக்காய் வற்றல் குழம்பு உண்டால் சுடலையை முற்றிலும் அகற்றிவிடும். சுண்டைக்காய் வற்றலை சமைத்தோ அல்லது வறுத்தோ சாப்பிட்டால் வறட்டு இருமல், சுரம், வயிற்றில் பூச்சிகள் , ஆஸ்துமா ஆகியவை விலகும். பச்சைக் காயைத் தட்டி பருப்புடன் கலந்து வேகா வைத்து சாம்பாராகவும் சாப்பிடலாம். சுண்டைக்காயை போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரில் போட்டு , கொஞ்சம் உப்பைக் கலந்து காயவைத்து நன்கு உலர்த்தி எடுத்துக் கொண்டு பயன்படுத்தலாம். வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு , வெயிலில் காயவைத்து எடுத்த சுண்டைலே தேவையான அளவுக்குப் போட்டு வறுத்து , அதை சாதத்தில் கலந்து பிசைந்து சாப்பிடலாம். சளி, இருமலுக்கு மிகவும் நல்லது.
    சுண்டைக்காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு லேசாக வருது உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை , வெந்தயம் ஆகியவைகளை அளவுடன் கூட்டி சிறிது வறுத்துத் துவட்டலாக செய்து சோற்றுடன் கலந்து உண்ண மூலவியாதி, அக்னி மந்தம், அஜீரணம் ஆகியவை தீரும் . குடலில் சேரும் கழிவுகளை சுண்டைக்காய் சுத்தமாக அகற்றி விடுகிறது.

[1][2] [3]

 1. மேற்கோள்கள் :
 2. 1.தாராபுரம் சுருணி மகன். (2014) . குடலை சுத்தம் செய்யும் சுண்டைக்காய் . கல்கண்டு இதழ் , பக்: 12-13
 3. 2.Mooligai Marmam” by Sirumanavur Munusami Mudaliar, Published: 1899
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடுகி&oldid=2377190" இருந்து மீள்விக்கப்பட்டது