உள்ளடக்கத்துக்குச் செல்

கடியன்லென

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடியன்லென

கடியன்லென
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - கண்டி
அமைவிடம் 7°01′01″N 80°34′59″E / 7.017°N 80.583°E / 7.017; 80.583
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 974 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

கடியன்லென (Kadiyanlena தமிழில் சிலவேளைகளில் கடியஞ்சேனை) இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது பத்தனை, நாவலப்பிட்டி பெருந்தெருவில் நாவலப்பிட்டி நகரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நிர்வாகம் பஸ்பாகே கோரளை பிரதேச செயலாளர் பிரிவாலும்[1] உள்ளூராட்சி பஸ்பாகே கோரளை பிரதேச சபையாலும் மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் தேயிலைப் பெருந்தோட்டங்கள் அதிகளவில் அமைந்துள்ளன. இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலைத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். நகரம் கண்டி-நுவரெலியா மாவட்ட எல்லையில் கண்டி பக்கமாக அமைந்துள்ளது. நகருக்கருகில் கெட்டபுலா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 20". பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2024.


இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா
நகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன
சிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை

7°1′N 80°35′E / 7.017°N 80.583°E / 7.017; 80.583

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடியன்லென&oldid=4116347" இலிருந்து மீள்விக்கப்பட்டது