உள்ளடக்கத்துக்குச் செல்

கடிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடிகை ஒலிப்பு) என்னும் சொல் ‘கடி’ என்னும் உரிச்சொல் அடியிலிருந்து தோன்றியது. அது சங்ககாலத்தில் காப்புமாலையையும், இனிப்புச்சுவை உணவையும் உணர்த்தப் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக, கடிகைமாலை என்பது உருத்திராச்சக் கொட்டை கோத்த மாலை. சைவத் துறவிகளின் அணிகலன்களில் ஒன்று. (கடுக்காய் எனல் சாலாது)

காப்புமாலை

  • நான்மணிக்கடிகை என்பது நான்கு வகை பணிகள் கோக்கப்பட்ட மாலை. இந்த மாலை போல் நான்கு நான்கு கருத்துகள் கோக்கப்பட்ட மாலைகளைக் கொண்ட நூல் நான்மணிக்கடிகை.
  • மழையில் விழும் பனிக்கட்டிக் கடுக்கைகளை ஒருத்தி கழங்கு விளையாட உதவும் மாக் கடுக்கை எனக் குறிப்பிடுகிறாள்.[1]
  • ஆடவர் அணியிம் மயில்தோகை மாலை [2]
  • பசுக்களின் கழுத்தில் கட்டப்படும் மணிமாலை. [3]
  • ஒருத்தி நீல மணிமாலை வல்லிகை அணிந்திருந்தாள். [4]
  • பிற்காலத்தில் காப்பு தரும் எழுத்துக்கள் என வைத்துக்கொண்டு எழுதப்பட்ட பாட்டியல் வகை நூல் கடிகை வெண்பா

இன்சுவைக் குழம்புணவு

  • பாயச உணவு [5]
  • கடிகை என்பது வெல்லக்கட்டி, கரும்புச் சாற்றுக் கட்டி. [6]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. வீயும் வியப்புறவின் வீழ்துளியால் மாக்கடுக்கை
    நீயும் பிறரொடும்காண் நீடாதே - ஆயும்
    கழலாகிப் பொன்வட்டாய்த் தாராய் மடலாய்க்
    குழலாகிக் கோல்சுரியாய்க் கூர்ந்து. (திணைமாலை நூற்றைம்பது - 98)
  2. நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை தொடையமைப் பீலி பொலிந்த கடிகை - அகம் 119-12
  3. தனிமணி இரட்டும் தாளுடைக் கடிகை … முனை ஆ - அகம் 35-3
  4. நீல மணிக்கடிகை வல்லிகை – கலித்தொகை 96-10
  5. மதுரை அந்தியங்காடியில் விற்கப்பட்ட உணவுவகைகளில் ஒன்று அமிழ்தம் போன்று இனிக்கும் சேறு. அமிழ்து இயன்றன்ன தீஞ்சேற்றுக் கடிகை - மதுரைக்காஞ்சி 532
  6. அவள் பல்லில் ஊறும் சுவைநீர் 'கரும்பின் காலெறி கடிகைக் கண் அயின்று அன்ன வால் எயிறு ஊறிய வசையில் தீநீர்க் … குறுமகள்' - குறுந்தொகை 267
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடிகை&oldid=3023260" இலிருந்து மீள்விக்கப்பட்டது