கடாய் பனீர்

கடாய் பனீர்[1][2][3][4] (Kadai paneer) என்பது, பனீர் மற்றும் குடைமிளகாயை, புதிதாக அரைக்கப்பட்ட மசாலாப்பொருள் கொண்ட பொடியுடன் சேர்த்து சமைத்துத் தயாரிக்கப்படும் ஓர் இந்திய உணவாகும். கடாய் எனப்படுவது ஒரு சமையற்கலன் ஆகும். இது ச்மைக்கும் பொருள்களை வறுப்பதற்கு பயன்படுகிறது. துருப்பிடிக்காத எஃகு , செம்பு மற்றும் ஒட்டாத மேற்பரப்புகளால், வட்டமாகவும் தட்டையான அடிப்பகுதியுடனும் அல்லது பாரம்பரியப் பொருட்களாலும் செய்யப்படலாம். இதன்மூலம் செய்யப்படும் உணவு சுவையாக இருக்கும். பனீர் என்பது பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பிரபலமான இந்தியப் பாலாடைக்கட்டி வகை ஆகும். இது புரதம் மற்றும் கால்சியம் சத்துகள் நிறைந்த உணவாகும். சைவ உணவு உண்பவர்களுக்கு ஓர் உணவாகும். வழக்கமாக வெண்ணெய் தடவிய நான் உரொட்டி, பராத்தா, ரொட்டி, சீரகச் சாதம் அல்லது ஆவியில் சமைத்த நீள் அரிசியான பாசுமதி அரிசி சாதத்துடன் பரிமாறப்படுகிறது.
இது இரண்டு வகைகளாக உள்ளது:[3] கிரேவி வடிவம்[5] மற்றும் உலர் வடிவம்.[6]


மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Express recipes: How to make Kadhai Paneer in six easy steps". The Indian Express en. 2015-03-27. Retrieved 2023-06-06.
- ↑ "Shahi Paneer, Kadai Paneer And More: 5 Classic Paneer Curry Recipes That You Must Try". NDTV Food. Retrieved 2023-06-06.
- 1 2 Swasthi (2022-11-01). "Kadai Paneer Recipe (Dry & Gravy)". Swasthi's Recipes. Retrieved 2023-06-06.
- ↑ "Kadai Paneer: Soft, Delicious and Creamy Restaurant Style Paneer". Slurrp. Retrieved 2023-06-06.
- ↑ Kitchen, Hebbars (2021-03-03). "kadai paneer recipe | karahi paneer | how to make kadai paneer gravy". Hebbar's Kitchen. Retrieved 2023-06-06.
- ↑ Anand, Raks (2011-10-10). "Kadai paneer recipe, How to make kadai paneer". Raks Kitchen. Retrieved 2023-06-06.
