கடவுளின் மகன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Son of God
கடவுளின் மகன்
விளம்பரப் படம்
இயக்குனர் கிறிஸ்தோபர் ஸ்பென்சர்
தயாரிப்பாளர் ரோமா டவுனி
மாற்கு பர்னெட்
மூலக்கதை ”விவிலியம்” என்ற தலைப்பில் ஒளிபரப்பான தொலைக்காட்சி சிறு தொடர்
திரைக்கதை ரிச்சர்டு பெட்செர்
கிறிஸ்தோபர் ஸ்பென்சர்
காலின் ஸ்வாஷ்
நிக் யங்
கதைசொல்லி கீத் டேவிட்
இசையமைப்பு ஹான்ஸ் சிம்மெர்
லோர்ன் பால்ஃப்
லீசா கெரார்டு
நடிப்பு தியகோ மோர்காதோ
ரோமா டவுனி
டார்வின் ஷா
ஒளிப்பதிவு ராப் கோல்டி
படத்தொகுப்பு ராபர்ட் ஹால்
கலையகம் லைட்வொர்க்கர்ஸ் மீடியா
விநியோகம் 20ஆம் நூற்றாண்டு ஃபாக்ஸ்
வெளியீடு பெப்ரவரி 28, 2014 (2014-02-28)
கால நீளம் 138 நிமிடங்கள்
நாடு ஐக்கிய அமெரிக்க நாடுகள்
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $22 மில்லியன்
மொத்த வருவாய் $9,400,000[1]

கடவுளின் மகன் (Son of God) என்பது இயேசு கிறித்துவின் வாழ்க்கை, போதனை, துன்பங்கள், சாவு, உயிர்த்தெழுதல் போன்ற கூறுகளை உள்ளடக்கி, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 2014இல் வெளியான ஒரு திரைப்படம் ஆகும். இது “விவிலியம்” என்ற பெயரில் ஒளிபரப்பான 10 பகுதிகள் அடங்கிய தொலைக்காட்சி குறுந்தொடரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

அத்தொடரை உருவாக்கியவர்கள் மாற்கு பர்னெட் (Mark Burnett) மற்றும் ரோமா டவுனி (Roma Downey) ஆவர். “கடவுளின் மகன்” திரைப்படத்தில் முந்திய தொலைக்காட்சித் தொடரிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளும், அப்போது ஒளிபரப்பாமல் விடப்பட்ட பகுதிகளும் அடங்கும்.[2]

படத்தின் கருப்பொருள்[தொகு]

கடவுளின் மகன் திரைப்படத்தில் இயேசு கிறித்துவின் பிறப்பிலிருந்து, அவர் சிலுவையில் இறந்து கல்லறையில் அடக்கப்பட்ட பின் மீண்டும் உயிர்பெற்றெழுந்து விண்ணேற்றம் அடைந்தது வரையிலான நிகழ்வுகள் எடுத்துக் கூறப்படுகின்றன.[2]

நடிகர்கள்[தொகு]

கதை விளக்கம்[தொகு]

”கடவுளின் மகன்” படத்தில் ஏற்கனவே ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடரிலிருந்து பல காட்சிகளும் அப்போது ஒளிபரப்பாமல் விடப்பட்ட காட்சிகளும் உள்ளடங்கும்.[2][3] இரத்தம் சிந்தல் காட்சி, வன்முறைக் காட்சிகள் உள்ளதால் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்குப் பெற்றோர் வழிகாட்டல் தேவை என்று தரம் இடப்பட்ட இப்படம் 2014, பெப்ருவரி 28ஆம் நாள் வெளிவந்தது.[4][5][6].

ஏற்கனவே ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடரில் சாத்தான் வரும் காட்சி இருந்தது. ஆனால் திரைப்படத்தில் அக்காட்சி காட்டப்படவில்லை. இதற்குக் காரணம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைப் போன்று சாத்தான் தோற்றமளிக்கிறது என்று வழக்கமாக ஒபாமாவை எதிர்த்து விமரிசிக்கும் கிளென் பெக் (Glenn Beck) என்பவர் கூறியது ஆகும்.[7][8][9]

வரவேற்பு[தொகு]

வசூல்[தொகு]

படம் வெளியான முதல் இரவு $1.2 மில்லியன் வட அமெரிக்க திரையரங்குகளில் வசூலானது. நுழைவுச் சீட்டுகள் முன்பதிவாகவே விற்கப்பட்டிருந்தன.[10] முதல் வார இறுதியில் வட அமெரிக்காவில் மட்டும் மொத்தம் $27.5 மில்லியன் வசூலாகும் என்று கணிக்கின்றனர்.[11]

விமர்சனங்கள்[தொகு]

ஏற்கனவே இயேசு கிறித்துவில் நம்பிக்கை கொண்ட மக்கள் இப்படத்தைப் பார்ப்பதன் மூலம் தமது நம்பிக்கையில் உறுதி பெறுவார்கள் என்றும், நற்செய்தி நூல்களில் கூறப்படுகின்ற இயேசுவின் வரலாற்றை இப்படம் நன்முறையில் காட்டுகிறது என்றும் விமர்சகர் கூறுகின்றனர்.

என்றாலும், இப்படம் அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை என்றும், சிந்தனையைக் கிளறுகின்ற விதத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளவில்லை என்றும் சிலர் குறை கூறுகின்றனர். எருசலேம் நகர் காட்சிகள் பிரமாதமாக இல்லை, இயேசு தண்ணீர்மீது நடத்தல் போன்ற காட்சிகள் கவர்ச்சியாக இல்லை என்றும் சிலர் விமர்சிக்கின்றனர்.

ஒரு சில காட்சிகள் கலையழகு நிறைந்த விதத்தில் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இயேசு அன்னை மரியாவின் மடியில் வளர்த்தப்பட்ட காட்சியானது மைக்கலாஞ்சலோவின் தாயும் சேயும் என்ற புகழ்மிக்க பளிங்குச் சிலையைக் கண்முன் கொண்டுவருகிறது. இயேசு பற்றி நற்செய்தி நூல்கள் தருகின்ற தகவல்களும் இயேசு உலகுக்கு வழங்கிய செய்தியும் மிகத் தெளிவாக, அழுத்தமாக எடுத்துக் கூறப்படுகின்றன.[12][13][14][15][16][17]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Son of God". பாக்சு ஆபிசு மோசோ. அமேசான்.காம். பார்த்த நாள் March 1, 2014.
  2. 2.0 2.1 2.2 Littleton, Cynthia (September 12, 2013). "‘The Bible’ Producers Resurrect Jesus for Expanded ‘Son of God’ Film". Variety. http://variety.com/2013/film/news/fox-to-distribute-son-of-god-feature-from-bible-pair-1200608999/. 
  3. Kits, Borys (September 12, 2013). "20th Century Fox to Distribute Jesus Christ Movie 'Son of God'". The Hollywood Reporter. http://www.hollywoodreporter.com/news/20th-century-fox-distribute-jesus-628306. 
  4. "20th Century Fox to Release Roma Downey and Mark Burnett's 'Son of God'". ComingSoon.net (October 15, 2013). பார்த்த நாள் October 15, 2013.
  5. "Resurgence Conference Live" (November 6, 2013).
  6. "Son of God (2014)". Internet Movie Database. அமேசான்.காம். பார்த்த நாள் March 1, 2014.
  7. http://www.hollywoodreporter.com/news/bible-producers-cut-satan-scenes-680781
  8. "Anyone else think the Devil in #TheBible Sunday on HIstory Channel looks exactly like That Guy?". @glennbeck. Twitter. பார்த்த நாள் February 28, 2014.
  9. "Why does the devil in 'The Bible' look exactly like President Obama?". Daily Mail. February 28, 2014. http://www.dailymail.co.uk/news/article-2295082/Why-does-devil-The-Bible-look-exactly-like-President-Obama.html. பார்த்த நாள்: 16 April 2013. 
  10. McNary, Dave (February 28, 2014). "Box Office: ‘Son of God’ Launches Strongly at Late-Night Shows". Variety. பார்த்த நாள் February 28, 2014.
  11. Subers, Ray (February 28, 2014). "Forecast: 'Non-Stop,' 'Son of God' to End 'LEGO's Reign This Weekend". Box Office Mojo. அமேசான்.காம். பார்த்த நாள் February 28, 2014.
  12. "Son of God - Rotten Tomatoes". Rotten Tomatoes. Flixster. பார்த்த நாள் February 28, 2014.
  13. "Son of God Reviews". Metacritic. CBS Interactive. பார்த்த நாள் March 1, 2014.
  14. Minow, Nell. "Son of God - Movie Mom". Beliefnet. பார்த்த நாள் February 28, 2014.
  15. Slotek, Jim (February 27, 2014). "'Son of God' review: A satisfying Christ story". Toronto Sun. பார்த்த நாள் February 28, 2014.
  16. Kenigsberg, Ben (February 27, 2014). "History Channel’s The Bible is cut into an equally chintzy film, Son Of God". The A.V. Club. பார்த்த நாள் February 28, 2014.
  17. Berry, Dave (February 28, 2014). "Son of God, reviewed: Detail-skimming Biblical epic preaches to the converted". The National Post. பார்த்த நாள் March 1, 2014.

வெளி இணைப்புகள்[தொகு]