கடல் மாலை திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கடல் மாலை திட்டம்
கடல் மாலை திட்டம்
सागर माला परियोजना
நாடுஇந்தியா
Prime Ministerநரேந்திர மோடி
Ministryஇந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
Key peopleநிதின் கட்காரி
Established31 சூலை 2015; 4 ஆண்டுகள் முன்னர் (2015-07-31)
Status: Active

கடல் மாலை திட்டம் (Sagar Mala project) இந்தியத் துறைமுகங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி அமைப்பதே கடல் மாலைத் திட்டத்தின் நோக்கமாகும். இதனால் நாட்டின் கடற்கரை பகுதிகளில் தொழில் மற்றும் போக்குவரத்து வசதிகள் மேம்படும்.[1] ,பழைய மீன்பிடி துறைமுகங்களையும், வணிக துறைமுகங்களையும் மேம்படுத்தும் திட்டத்திற்காக இந்திய அரசு 70,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய தீர்மானித்துள்ளது.[2]

பயன்கள் : 1, உள்நாட்டு நதிநீர் போக்குவரத்து சார் பலன்கள்.

2, சாலை போக்குவரத்து பெருமளவு தவிக்க படும், பயன்பாட்டு எரிபொருள் சிக்கனம்

3, சர்வ தேச அளவில் வாணிபம் சிறக்கும் மற்றும் உள்நாட்டு வாணிபம் எளிமை படுத்தபடும்.

4, நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு மாற்றும் தற்சார்பு கொள்கை பெருமளவு நிறைவேற்றபட்டு செயல்வேகம் கொள்ளும்

பின்னனி[தொகு]

இந்தியாவில் 12 துறைமுகங்களையும், 1208 தீவுகளையும் மேம்படுத்தும், இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்ட[3], கடல் மாலைத் திட்டத்திற்கு 25 மார்ச் 2015இல் இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.[4] தேசிய சாகர் மாலை உயர்மட்ட குழுவில் (NSAC) இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர், இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும் மத்திய அரசின் துறைகளுக்கான அமைச்சர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் அல்லது மாநில துறைமுக அமைச்சர்கள் உறுப்பினர்களாக இருப்பர்.[5][6]

இந்திய அரசு, சாகர்மாலை வளர்ச்சி நிறுவனத்தை (Sagarmala Development Company) 20 சூலை 2016இல் 1,000 கோடி ரூபாய் மூலதனத்துடன் துவக்கியது. இந்திய அரசு தனது பங்காக சாகர் மாலை வளர்ச்சி நிறுவனத்தில் முதலில் 90 கோடி ரூபாய் பங்கு முதலீடு செய்துள்ளது.[7]

உத்தேச துறைமுகங்கள்[தொகு]

சாகர் மாலை திட்டத்தின் கீழ் ஆறு பெருந்துறைமுகங்கள் நிறுவ திட்டமிடப்ப்பட்டுள்ளது. அவைகள்:

மாநிலம் இடம் துறைமுகம்
கேரளம் விழிஞம் விழிஞம் பன்னாட்டுத் துறைமுகம்
தமிழ்நாடு குளச்சல் குளச்சல் இனயம் துறைமுகம்
மகாராட்டிரா வாத்வான் வாத்வான் துறைமுகம்
கர்நாடகா தடடி தடடி துறைமுகம்
ஆந்திரப் பிரதேசம் மச்சிலிப்பட்டினம் மச்சிலிப்பட்டினம் துறைமுகம்
மேற்கு வங்காளம் சாகர் தீவு சாகர் தீவு துறைமுகம்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_மாலை_திட்டம்&oldid=2649956" இருந்து மீள்விக்கப்பட்டது