கடல் நுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடற்கரை நோக்கித் தள்ளப்படும் கடல்நுரை

கடல் நுரை (Sea foam), பெருங்கடல் நுரை, கடற்கரை நுரை என்பது உயர் கரிமப் பொருள் செறிவுள்ள கடல்நீர் அலைப்பின்போது உருவாகும் நுரை வகையாகும். இதில் புரதம், கொழுப்பு, கட்டை கலந்திருக்கும். இவை கடற்கரைச் சேய்மைப் பாசிப் பெருக்கத்தால் உருவாகின்றன.[1] இப்பொருட்கள் நுரைப்பிகளாகச் செயல்படுகின்றன. கடற்கரையருகு நுரைப்புப் பகுதியில் அலைமுறிவுகளால் கடல்நீர் கடையப்படும்போது நிலவும் கொந்தளிப்பினால் நுரைப்பிகள் காற்றைச் சிறைபிடிக்கின்றன. அப்போது தொடர்நுரைப்பில் எழும் குமிழிகள் பரப்பு இழுவிசையால் ஒட்டிக் கொள்கின்றன.

கடல் நுரை ஓர் உலகளாவிய நிகழ்வாகும்.[1] இது சூழவுள்ள கடல், நன்னீர், தரைச் சூழல்களைப் பொறுத்து இடத்துக்கிடம் வேறுபடுகிறது.[2] நுரைகள் குறைந்த அடர்த்தியில் இருப்பதால், கடற்கரைக் காற்று இவற்றைக் கரைமுகப்பில் இருந்து நில உட்பகுதிக்கு வீசியடிக்கும். பொருளாக்கம், போக்குவரத்து, பெட்ரோலியக் கசிவு, சவர்க்காரங்கள் ஆகிய மாந்தச் செயல்பாடுகளும் கடல்நுரையாக்கக் காரணிகளாகின்றன.

கடல்நுரை வழக்கமாக, சிதிவுற்ற கரிமப் பொருட்களின் கலவையாகும்.
கடல்நுரை, வாங்கூவர் தீவு

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Schilling, Katerina; Zessner, Matthias (1 October 2011). "Foam in the aquatic environment" (in en). Water Research 45 (15): 4355–4366. doi:10.1016/j.watres.2011.06.004. பன்னாட்டுத் தர தொடர் எண்:0043-1354. பப்மெட்:21757217. Bibcode: 2011WatRe..45.4355S. 
  2. HAROLD, E.; SCHLICHTING, JR. (1971). "A Preliminary Study of the Algae and Protozoa in Seafoam". Botanica Marina 14 (1). doi:10.1515/botm.1971.14.1.24. பன்னாட்டுத் தர தொடர் எண்:0006-8055. 

http://www.surfingvancouverisland.com/weather/seafoam.htm பரணிடப்பட்டது 2017-07-21 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கடல் நுரை
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_நுரை&oldid=3728138" இருந்து மீள்விக்கப்பட்டது