கடல் தோன்றிய வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அந்தமான் கடல்

1500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெரும் வெடிப்பு (டீபை டீயபெ) என்ற நிகழ்விலிருந்தே இந்த பிரபஞ்சம் தோன்றியது என அறிவியலாளர் கருதுகின்றனர். பருப்பொருள் (றுயவநச) மற்றும் ஆற்றல் (நுநெசபல) இரண்டும் ஒருமித்து இந்த நிகழ்வில் தோற்றம் கொண்டது எனக் கருதப்படுகிறது. அதன்பின் மெல்ல மெல்ல பிரபஞ்சத்தில் குவர்க் எனப்படும் அடிப்படைத் துகள்கள் தோன்றின. இவை பிணைந்து பின்னர் அணுத்துகள்கள் - நியூட்ரான், புரோட்டான் முதலியன பரிணமித்தன. காலப்போக்கில் அணு-ஹைட்ரஸ் போன்ற எளிய அணு உருவாகியது. சூரியன் தோன்றியது: சுமார் 1000 கோடி வருடத்திற்கு முன்பு ஹைடிரஜன் செரிவான விண்முகில் ஒன்று தனது சுய ஈர்ப்பு விசையால் சுருங்கத் துவங்கியது. இந்த சூரிய முகில் மெல்ல மெல்ல சுருங்கி திரட்சி பெற்றது. மையத்தில் மேலும் மேலும் பொருள் குவிய அழுத்தம் ஏற்பட்டது. அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க மையத்தில் வெப்பம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அந்த சூரிய முகிலின் மையத்தில் அணுக்கரு பிணைவு ஏற்பட்டு ஆற்றல் உற்பத்தியானது. சூரியன் பிறந்தது.[சான்று தேவை]

பூமி தோன்றியது[தொகு]

முகிலின் எஞ்சிய பொருள்கள் சுழன்று சுழன்று மெல்ல மெல்லச் சூரியனைச் சுற்றி வரும் கோள்களாக உருவெடுத்தன. அதில் ஒன்றுதான் நமது பூமி. 480 கோடி வருடத்திற்கு முன்பு சூரியக் குடும்பம் தோற்றம் கொண்டதாக அறிவியலாளர்கள் மதிப்பிடுகின்றனர். பூமி உருவானபோது அது மிகமிக உயர்ந்த வெப்பநிலையில் இருந்தது. அதன்மீது பற்பல சிறுகோள்கள் மோதியவண்ணம் இருந்தன. விண்கற்கள் மோதுவது வாடிக்கை. இந்த சூழலில் இளம் பூமி வெகு அதிக வெப்பநிலையில் உருகிய இளகிய நிலையில் அமைந்திருந்தது. உருகிய நிலையில் இருத்தலால் எளிதில் அடர்த்தியான பொருட்கள் வெப்பத்தை நோக்கி விழுந்தன. அடர்த்தி குறைவான பொருட்கள், இலசான பொருட்கள் உருகிய பூமி குழம்பின் மீது மிகுந்தபடி அமைந்தன.

எரிமலை[தொகு]

மெல்ல மெல்ல புவி குளிர்ந்தது. புவிபரப்பின் மீது படர்ந்திருந்த இலேசான அடர்த்தி குறைவான பொருட்கள் குளிர்ந்து மெல்லிய புவி ஓடு ஆக (புசரளவ) மாறியது. புவி உருவாகி பல கோடி ஆண்டுகள் தொடர்ந்து எரிமலை அங்கும் இங்கும் வெடித்தபடி இருந்தது. எரிமலை வழி எரிமலைக் குழம்புடன் புவியினுள் இருந்த நீர் ஆவியும் வெளியேறியது. பலவகையான வாயுக்களும் வெளியேறின. இவ்வாறு புவிக்கு மேலே வளிமண்டலம் உருவாகத் துவங்கியது. சுமாh; 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவியின் வளிமண்டலம் நீராவி சொpவானதாக இருந்தது. மெல்ல மெல்ல புவி வெப்பம் இழந்து குளிர வளிமண்டல நீராவி மழையாக பெரு மழையாகப் பொழிந்தது. நிலத்தில் விழுந்த நீh; உருண்N;டாடியது.சிறு சிறு ஓடைகள் உருவாயின. ஓடைகள் இணைந்து நதி உருவாகியது. ஆழம் குறைவான பள்ளங்கள் நீரால் நிரம்பின. புவி ஓட்டின் பள்ளங்கள் நீரால் நிரம்பி முதல் கடல் உருவாகியது.

கடல்[தொகு]

[1] நீர்வழி உருவாகும் பாறைகளே உறைபாறைகள். இதுவரை கிடைத்த தடயத்தில் 380 கோடி வருடம் பழமையான உறைபாறைகள் (படிவப்பாறைகள்) கிடைத்துள்ளன. கிhpன்லாந்தில் தென்மேற்குப்பகுதியில் உள்ள இசுவா (ளைரய) என்ற பகுதியில் உலகின் மிகத் தொன்மையான உறைபாறைகள் கிடைத்துள்ளது. ஓடி வரும் நீh; எடுத்து வரும் மணல் சிறுகற்கள் முதலியவை படிந்து படிந்து உருவானவை உறைபாறைகள். இதன் வழி ஒடிய நீh; தேங்கிய நீh; ஆகியவற்றை அனுமானிக்கலாம். கிhpன்லாந்து பகுதியில் கிடைத்த இந்த பாறைகள் தாம் கடல் 380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்க வேண்டும் என கருதத்தூண்டும் ஆதாரம் ஆகும்.

Bunkerë bregdetar Karaburun 2

மேற்கோள்கள்[தொகு]

கடல்கள் த.வி.வெங்கடேஸ்வரன் -அறிவியல் வெளியீடு 245 அவ்வைசண்முகம் சாலை கோபாலபுரம் சென்னை-600 [086https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_தோன்றிய_வரலாறு&oldid=2486460" இருந்து மீள்விக்கப்பட்டது