கடல் திராட்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கடல் திராட்சை
Umibudou at Miyakojima01s3s2850.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: Plantae
பிரிவு: Chlorophyta
வகுப்பு: Bryopsidophyceae
வரிசை: Bryopsidales
குடும்பம்: Caulerpaceae
பேரினம்: Caulerpa
இனம்: C. lentillifera
இருசொற் பெயரீடு
Caulerpa lentillifera
J. Agardh


இது இந்திய பசிபிக் கடலோர பகுதியில் காணப்படும் ஒருவகை பச்சை கடல்பாசி ஆகும். இதன் தாவரவியல் பெயர் 'காலெர்பாலிண்டில்ஃபெரா' என்பதாகும். அதன் மென்மையான மற்றும் சதைப்பற்றுள்ள அமைப்பு காரணமாக இந்த கடற்பாசி சாப்பிடக்கூடிய காலெர்பா வகை இனங்களுள் ஒன்றாகும். இந்த வகைக்கடற்பாசி பிலிப்பைன்ஸ்நாட்டில் பயிரிடப்பட்டு சாப்பிடப்படுவதால், அது latô, gusô, androsep போன்ற பல்வேறு பெயர்களில் உள்ளூர் மொழியில் அறியப்படுகிறது; மலேசிய நாட்டில் உள்ள சபா மாநிலத்தில் , அது 'லாட்டாக்' என அழைக்கப்படுகிறது; ஜப்பானில் உள்ள , 'ஒகினாவா'வில், இது "உமி-புடோ" (海 ど ど う) அதாவது "கடல் திராட்சை" "[1]என்று அழைக்கப்படுகிறது, இது ஆங்கிலத்தில் பச்சை கேவியர் அல்லது கடல் திராட்சை எனப்படுகிறது. [2]

'காலெர்பா லிண்டில்ஃபெரா' பொதுவாக வினிகருடன் சேர்த்து பச்சையாக ஒரு சிற்றுண்டியாக அல்லது ஒரு சாலட்டாகச் சாப்பிடப்படுகிறது.

பிலிப்பைன்ஸ்நாட்டில், சுத்தமான நீரில் கழுவப்பட்ட பின்னர், வழக்கமாக ஒரு சாலட் போன்று பச்சையாக சாப்பிடப்படகிறது. வெங்காயம் மற்றும் புதிய தக்காளி கலந்த கலவையுடன் மீன் சாஸ் அல்லது' பகுங்' எனப்படும் (மீன் பேஸ்ட்) மற்றும் வினிகர் ஆகியவற்றின் கலவையால் அலங்கரிக்கப்பட்டு சாப்பிடப்படுகிறது.

மேலும் இதில் அயோடின் சத்து நிறைந்தது.

மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள மாக்டான் தீவு, சிபு தீவுகளில், பெரிய குளங்களில் சாகுபடி செய்யப்பட்டு மிகவும் வெற்றிகரமாக சிபு மற்றும் மணிலா சந்தைகளில் விற்கப்படுகிறது. சுமார் 400 ஹெக்டேர் அளவுள்ள குளங்களில் சாகுபடி செய்யப்பட்டு , ஆண்டுக்கு ஒரு ஹெக்டருக்கு 12-15 டன் புதிய கடற்பாசி உற்பத்தி செய்யப்படுகிறது.

பிலிப்பைன்ஸ்நாட்டு வெங்காயம் மற்றும் புதிய தக்காளி மீன் சாஸ் கலந்த கடல் திராட்சை உணவு  
]]
ஒகினாவா'வில்,"உமி-புடோ" வகை "கடல் திராட்சை]]  

மேற்கோள்கள்[தொகு]

  1. Dawes, Clinton J. (1998). Marine botany. New York: John Wiley. ISBN 0-471-19208-2. 
  2. "Sea grapes - green caviar". பார்த்த நாள் 14 April 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_திராட்சை&oldid=2372661" இருந்து மீள்விக்கப்பட்டது