கடல் சுவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இங்கிலாந்து, விகித் தீவு, வெய்நாரில் உள்ள தற்காலக் கடற்சுவர்
கவான மெலிக்கோனில் மக்கள் குழுமி நடைபயிலுதல்
குவீன்லாந்து, உரங்கன் கடற்சுவர்

கடற்சுவர் (seawall) அல்லது கடல் சுவர் என்பது கற்கரை நிலத்தின் மீது நேரடியாக கடலோ கடல்சார் நிகழ்வுகளோ தாக்கும்போது தற்காப்புக்காக கட்டப்படும் கட்டுமான. கடல் சுவரின் குறிக்கோள் அலைகள், ஓதங்கள், ஆழிப் பேரலைகள் வழி ஏற்படும் தாக்குதல்களில் இருந்து மாந்த வாழிடத்தைக் காத்துப் பேணுவதாகும்.[1] கடல் சுவர் நிலையான அமைப்பாகையால், இது கடலுக்கும் நிலத்துக்கு இடையிலான இயங்கியல் பரிமாற்றத்தைத் தடுக்கிறது.[2]

இது கடல் நீரின் ஓரத்தில் அமைந்த கட்டகமாகும். கடல், கரையை நோக்கி ஊடுருவாமல் கடல்சுவர் தடுக்கிறது. இயற்கை மண்ணோ நிரப்பப்பட்ட மண்ணோ அரிக்கப்படாமல் பாதுகாக்கிறது. கடல் பக்கத்தில் இதன் சரிவு காணப்படும். இச்சரிவு அலை விசைகளின் ஆற்றலைச் சீரழிக்கவும் திசைமாற்றவும் உதவும், சில நேரங்களில் அலை தாங்கி போலவும் காணப்படும். இது மரத்தாலோ , எஃகாலோ, கற்காரையாலோ கட்டப்படலாம். அளவுக்கு மீறிய உயரமான ஓத அலைகளால் கவிழ்க்கப்பட்டோ அடிப்பகுதியில் உள்ள மண்ணால் அரிக்கப்பட்டோ இது இடிந்து போக வாய்ப்புண்டு. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kamphuis, W J. (2010) Introduction to Coastal Engineering and Management. World Scientific Publishing Co Ltd. Singapore.
  2. Shipman, Brian; Stojanovic, Tim (2007), "Facts, Fictions, and Failures of Integrated Coastal Zone Management in Europe", Coastal Management, 35 (2–3): 375–398, doi:10.1080/08920750601169659, S2CID 153826622
  3. அறிவியல் களஞ்சியம் தொகுதி ஏழு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Seawalls
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_சுவர்&oldid=3731181" இலிருந்து மீள்விக்கப்பட்டது