உள்ளடக்கத்துக்குச் செல்

கடல் சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடல்சார் சட்டம் அல்லது கடற்படைச் சட்டம் (Maritime law or admiralty law) என்பது கடல்சார் விவகாரங்களையும் தனியார் கடல்சார் தகராறுகளையும் நெறிப்படுத்தும் சட்டங்களின் தொகுப்பாகும். கடல் சட்டமானது, கடல்சார் நடவடிக்கைகள் மீதான உள்நாட்டுச் சட்டங்களையும், கடலில் செல்லும் கப்பல்களை இயக்கும் அல்லது பயன்படுத்தும் தனியார் தரப்பினருக்கு இடையிலான உறவுகளை நெறிப்படுத்தும் தனியார் பன்னாட்டுச் சட்டங்களையும் உள்ளடக்கியது. கடலில் பயணிக்கும் ஒவ்வொரு கப்பலும், கடலில் பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளியும் இந்தச் சட்டதின் கீழ் வருகின்றனர்.[1] ஒவ்வொரு சட்ட அதிகார அமைப்பும் பொதுவாக கடல்சார் விவகாரங்களை நெறிப்படுத்தத் தனக்கெனச் சொந்தமான சட்டங்களைக் கொண்டிருந்தாலும், இத்துறையின் பன்னாட்டுத் தன்மையும், சட்டங்களில் ஒருமைப்பாடு தேவை என்ற அவசியமும் காரணமாக, 1900-ஆம் ஆண்டிலிருந்து கடல்சார் சர்வதேசச் சட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன; இதில் பலதரப்பு ஒப்பந்தங்கள் பலவும் அடங்கும். [a]

முக்கியமாக தனியார் தரப்பினருக்கு இடையிலான உறவுகளை நெறிப்படுத்தும் கடல் சட்டம், கடல் விதிகள் (Law of the Sea) எனப்படும் பொதுப் பன்னாட்டு சட்டத்திலிருந்து வேறுபடுகிறது. கடல் விதிகள் என்பவை, நாடுகளுக்கு இடையிலான கடல்சார் உறவுகளான கப்பல் போக்குவரத்து உரிமைகள், கனிம வள உரிமைகள், கடலோர நீர்ப்பரப்புகளின் மீதான அதிகார வரம்பு போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் சட்டத் தொகுப்பாகும். கடல் சட்டம் தேசிய நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுத் தீர்க்கப்படும் அதே வேளையில், ஐக்கிய நாடுகள் அவையின் கடல் விதிகள் உடன்படிக்கையானது 167 நாடுகளும் [b] மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தாலும் ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் இவ்விஷயம் சார்ந்த சர்ச்சைகள் ஹாம்பர்க்கில் அமைந்துள்ள ஐ.டி.எல்.ஓ.எஸ் தீர்ப்பாயத்தில் தீர்த்துவைக்கப்படுகின்றன.

குறிப்புகள்

[தொகு]
  1. Such as the COLREGS, SOLAS, Hague-Visby Rules, ISPS, etc.
  2. The Convention on the Law of the Sea has not been ratified by 29 United Nations member and observer states, most notably the United States.[2] See United States non-ratification of the UNCLOS.

மேற்கோள்கள்

[தொகு]
  1. நெடுஞ்செழியன்.தா (2026-03-25). "சட்டம் படித்தவர்கள் தவறவிடக் கூடாத படிப்பு - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 25". Hindu Tamil Thisai. Retrieved 2026-04-07.
  2. "Agreement relating to the implementation of Part XI of the United Nations Convention on the Law of the Sea". United Nations Treaty Series. Retrieved 2015-04-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_சட்டம்&oldid=4512487" இலிருந்து மீள்விக்கப்பட்டது