கடல் கொண்ட தென்னாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கடல்கொண்ட தென்னாடு என்பது பண்டைய பழந்தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக இருந்து கடலுக்குள் அமிழ்ந்து போனதாகக் கருதப்படும் ஒரு நிலப்பகுதியைக் குறிக்கிறது. இப்பகுதியில் 49 நாடுகள் இருந்ததாகவும், பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் இந்த 49நாடுகளும் கடலினுள் அமிழ்ந்தாகவும் தமிழ் இலக்கியங்களில் இருந்து அறியப்படுகிறது. [1]

பழந்தமிழ்நாடு[தொகு]

பழந்தமிழ் நாட்டில் ஒரு தொகுப்பில் ஏழு நாடுகள் வீதம் ஏழு தொகுப்பில் 49 நாடுகள் இருந்தனவும், அவை கடல்கோள்களினால் அழிந்ததெனவும் தெரியவருகிறது.[2]

தமிழ்நாடு[தொகு]

பழந்தமிழ் நாடு: வடக்கின் கண் வேங்கடமும், தெற்கின் கண் குமரியாறும், கிழக்கு|கிழக்கும், மேற்கு|மேற்கும் கடலுமாகிய இவற்றிற்கு உள்ளிட்ட நாடுகள் இதனுள் தமிழ் வளர்ந்தது தென் மதுரை. இந்நாட்டகத்துள் நாற்பத்தொன்பது நாடுகள் கடல் கொண்டன[3] அவை:-

  1. ஏழ்தெங்க நாடு
  2. ஏழ்மதுரை நாடு
  3. ஏழ்முன்பாலை நாடு
  4. ஏழ்பின்பாலை நாடு
  5. ஏழ்குன்ற நாடு
  6. ஏழ்குணகாரை நாடு
  7. ஏழ்குறும்பனைநாடு

மேலும் பார்க்கவும்[தொகு]

சான்றாவணம்[தொகு]

  1. சிலப்பதிகாரம்- இளங்கோஅடிகள்- அடியார்க்கு நல்லார் எழுதியுள்ள உரை
  2. கடல் கொண்ட தென்னாடுபன்மொழிப் புலவர் கா.அப்பாதுரை.
  3. சிங்காரவேலு முதலியார் எழுதிய “அபிதான சிந்தாமணி” நூல் பக்கம். 948.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_கொண்ட_தென்னாடு&oldid=1854786" இருந்து மீள்விக்கப்பட்டது