கடலை மாவு கறி

கடலை மாவு கறி (Jhunka) எனப்படுவது கடலை மாவு கஞ்சி அல்லது கடலை மாவு குழம்பு ஆகும். இயுங்கா அல்லது இயூங்கா எனப்படும் இக்கஞ்சி மக்காச்சோள மாவு கொண்டு செய்யப்படும் ஒரு வகை இத்தாலியக் கஞ்சி அல்லது உணவான பொலெண்டாவைப் போன்ற ஓர் உணவாகும்.[1][2][3] மகாராட்டிரம்,[4][5]] வட கர்நாடகா மற்றும் கோவாவில் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய[6] இந்திய உணவாகும். இது பெரும்பாலும் பித்லா அல்லது பித்லேவுடன் ஒப்பிட்டு குழப்பப்படுகிறது. இருப்பினும், பிந்தையது கடலை மாவிலிருந்தும் தயாரிக்கப்படலாம். கடலை மாவு கறி ஈரமானது மற்றும் சுவையில் இலேசானது.[7] சோளம் மற்றும் கம்பு கலந்த பாக்கரி என்னும் உரொட்டியுடன் சேர்த்து பரிமாறப்படும்போது, இந்த உணவு கடலைமாவு பாக்கரி அல்லது பித்லா பாக்கரி என்று குறிப்பிடப்படுகிறது. மகாராட்டிராவின் விதர்பா பகுதியில் பித்லே சுன் என்றும் அழைக்கப்படுகிறது.
கடலை மாவு கறி பக்கோடா மகாராட்டிராவின் மிக முக்கியமான கிராமப்புற உணவாகக் கருதப்படுகிறது.[8] இது கர்தா அல்லது தேச்சாவுடன் பரிமாறப்படுகிறது.[8][9] சமீப காலங்களில், சிம்மகட்டு போன்ற மலைக்கோட்டைகளுக்கான மலையேற்றப் பயணங்களில் பித்லா பாக்கரி ஒரு பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது.[5]
கடலை மாவு கறி -பித்லா, நார்ச்சத்து, புரதம், கார்போவைதரேட்டுகள் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் சமச்சீரான உள்ளடக்கம் காரணமாக ஒரு சத்தான உணவாகக் கருதப்படுகிறது.
தயாரிப்பு முறை
[தொகு]கடலை மாவு கறி தயாரிக்க கடலை மாவை (பேசன்) தண்ணீருடன் கலந்து அரை திடமான பசை போல கலந்து கொள்ளவேண்டும்.[1] பின்னர் அது எண்ணெயில் பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய்த் தூள், மஞ்சள், உப்பு, வறுத்த வெங்காயம், கடுகு, இஞ்சி, பூண்டு, சீரகம் மற்றும் கொத்தமல்லி இலைகள் போன்ற பல்வேறு பொருட்களுடன் சேர்த்து வதக்கப்படுகிறது.[10][11] கடலை மாவு கறி பாரம்பரியமாக பக்கோடாவுடன் பரிமாறப்படுகிறது. மேலும் இது கம்பு, சோள சப்பாத்தி அல்லது அரிசி உணவுடனும் உண்ணப்படுகிறது.[3][8][12]
அரசியல் முக்கியத்துவம்
[தொகு]1995 ஆம் ஆண்டில், சிவசேனா-பாரதிய ஜனதா கட்சி அரசு, மகாராட்டிராவில் கடலை மாவு கறி-பாக்கரி திட்டத்தை அறிமுகப்படுத்தியது.[1] வேலையில்லாதவர்களுக்கு 6000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கடைகளை ஒதுக்குவதன் மூலம் மாநிலத்தின் சமூகப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டிருந்தது.[13] இத்திட்டம் வெற்றி பெறவில்லை. ஏனெனில் கடைகளால் ஒரு ரூபாய் மானிய விலையில் கடலை மாவு கறி-பாக்கரி வழங்க முடியவில்லை. எனவே அவர்கள் அதற்குப் பதிலாக மற்ற உணவுகளை விற்கத் தொடங்கினர்.[1] 2000 ஆம் ஆண்டில், காங்கிரசு-என்சிபி அரசு இத்திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது, மேலும் உச்ச நீதிமன்றமும் இந்த முடிவை உறுதி செய்தது.[14]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 Koranne-Khandekar, Saee (2019). Pangat, a Feast: Food and Lore from Marathi Kitchens. Hachette India. ISBN 9789388322928.
- ↑ 1000 Indian Recipe Cookbook. Arcturus Publishing. 2013. ISBN 9781782122531.
- 1 2 Bladholm, Linda (2016). The Indian Grocery Store Demystified: A Food Lover's Guide to All the Best Ingredients in the Traditional Foods of India, Pakistan and Bangladesh. St. Martin's Publishing Group. p. 48. ISBN 9781250120793.
- ↑ Godha, Ashishwang (2011-11-02). "Simply seafood". Mid Day. http://www.mid-day.com/lifestyle/2011/nov/021111--the-guide-pune-Simply-seafood.htm. பார்த்த நாள்: 6 April 2013.
- 1 2 Deshpande, Meeta (2008-01-28). "From stalls to five-stars". The Indian Express. http://expressindia.indianexpress.com/latest-news/from-stalls-to-fivestars/328527/. பார்த்த நாள்: 6 April 2013.
- ↑ Ranade, Vidya; Tyagi, Akanksha (2011-10-06). "Hinterland dreams". Pune Mirror இம் மூலத்தில் இருந்து 2013-07-02 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130702104720/http://www.punemirror.in/printarticle.aspx?page=comments&action=add§id=56&contentid=2011100620111006052839785f8e0ad74&subsite=. பார்த்த நாள்: 6 April 2013.
- ↑ Shah, Rupa (2018). What About My Calcium?. CircleOHealth. ISBN 9789353110512.
- 1 2 3 Das, Soma (2013-03-28). "Just like home". Mid Day இம் மூலத்தில் இருந்து 2013-03-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130330074242/http://www.mid-day.com/lifestyle/2013/mar/280313-mumbai-guide-just-like-home.htm. பார்த்த நாள்: 6 April 2013.
- ↑ Deshmukh, Gayatri (2012-04-25). "Vandana Gupte believes in nature and God". The Times of India இம் மூலத்தில் இருந்து 2013-06-29 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130629141025/http://articles.timesofindia.indiatimes.com/2012-04-25/news-interviews/31398143_1_farm-house-nashik-nature. பார்த்த நாள்: 6 April 2013.
- ↑ Bharadwaj, Monisha (2005). The Indian Spice Kitchen: Essential Ingredients and Over 200 Authentic Recipes. Hippocrene Books, Incorporated. p. 209. ISBN 9780781811439.
- ↑ Rao, Jaishri (2019). Classic Cuisine and Celebrations of the Thanjavur Maharashtrians. Notion Press. ISBN 9781684666492.
- ↑ Powar, Anna (2019). Kal: Looking at the Old with New Eyes. GAEditori. p. 226. ISBN 9788834180457.
- ↑ Gangan, Surendra (November 19, 2013). "Finally, state dumps Zunka Bhakar scheme". DNA India (in ஆங்கிலம்). Retrieved 2022-02-04.
- ↑ "Shiv Sena's hunger games". The Asian Age. 2017-07-03. Retrieved 2022-02-04.
