கடற் பறவைகள் பாதுகாப்பு சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடற் பறவைகள் பாதுகாப்பு சங்கம் (Association for the Protection of Sea-Birds) இங்கிலாந்தில் 1860 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. [1] இங்கிலாந்திலுள்ள கடற்கரை நகரமான பிரிட்லிங்டன் நகர பேராலயத்தில் அப்போது பதவியிலிருந்த என்றி ஃபிரடெரிக் பாரன்சு-லாரன்சு இச்சங்கத்தை உருவாக்கினார். [2]. இக்காலத்தில் முட்டை சேகரித்தல் மற்றும் காட்டு விலங்குகளை குறிப்பாக பறவைகளை சுட்டுக்கொல்லும் நடவடிக்கைகள் உச்சத்தை அடைந்திருந்தன. விளையாட்டிற்காக கடற் பறவைகளை சுட்டு வீழ்த்துவதை நிறுத்த வேண்டும் என்பது என்றியின் நோக்கமாகும். நடைமுறையிலுள்ள கடற் பறவைகள் பாதுகாப்புச் சட்டம் 1869 ஆம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. [3] யார்க்சையர் மாகாணத்தில் கடற் பறவைகள் பாதுகாப்பு சங்கத்தை என்றி முன்னெடுத்தார். தான் காப்பாளராக இருந்த கடலோர நகரமான இரைடில் இச்சங்கத்தின் ஒரு கிளையையும் உருவாக்கினார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. National Archives
  2. The Saviour of "those fair birds of God" Wilson, M p5 Bridlington, Bridlington Priory, 2005
  3. *Hansard: Sea Birds Preservation Bill, Lord's Committee
  4. 'RYDE, SATURDAY, 29 May 1880' Isle of Wight Observer (Ryde, England), Saturday, 29 May 1880; pg. 4; Issue 1425