கடற்பனி
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |

கடல்பனி (Sea ice) என்பது கடல் நீரானது உறையும்போது தோன்றும் பனிக்கட்டிகளைக் குறிக்கும். கடல் நீரானது உப்பைக் கொண்டிருப்பதனால், இதன் உறைநிலையானது தூய நீரை விடவும் குறைவாகவே இருக்கும். கடல்நீரானது தனது உறைநிலையை (அண்ணளவாக -1.8 °C (28.8 °F)) அடையும்போது உறைந்து கடல் பனியாக மாறும்.
இந்தக் கடல் பனி, பனிமலை களின் (Iceberg) இயல்பிலிருந்து வேறுபடுகின்றது. பனிமலைகள் பனியாறு, பனியடுக்கு போன்றவற்றில் ஏற்படும் பனித் தகர்வு (Ice calving) செயல்முறையினால், அவற்றிலிருந்து திடீரென உடைந்து, பிரிந்து செல்லும் பெரும்பகுதி பனிக்கட்டியை மலைபோலக் கொண்டதாக இருக்கும். இந்த பனிமலைகள் திறந்த நீர்நிலைகளில் தாமாக மிதந்தபடி இருக்கும். அத்துடன் பனிமலைகள் பனியடுக்கு அல்லது பனியாற்றிலிருந்து வருவதனால், ஆரம்பத்தில் இருந்தே நன்னீரைக் கொண்டதாக இருக்கும். ஆனால் கடல் பனியானது, ஆரம்பத்தில் உப்பைக் கொண்டிருந்தாலும், பின்னர் அதன் தோற்ற மாற்றச் செயல்முறையின்போது, உப்பை இழந்து நன்னீராக மாற்றமடையும்.