உள்ளடக்கத்துக்குச் செல்

கடற்படை வரலாற்றுக்கும் மரபுக்குமான ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடற்படை வரலாற்று மையத்தின் சின்னம்

முன்னர் கடற்படை வரலாற்று மையம் என அழைக்கப்பட்ட கடற்படை வரலாற்றுக்கும் மரபுக்குமான ஆணையம் (Naval History & Heritage Command) என்பது ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் வரலாற்றுத் திட்டம் ஆகும். வாசிங்டன் கடற்படைத் தளப்பகுதியில் அமைந்துள்ள இது பல பெறுமதி வாய்ந்த தகவல்களைக் கொண்ட இணையத்தளம் ஒன்றையும் பேணி வருகிறது. இந்த ஆணையத்தைச் சேர்ந்த வரலாற்றாளர்கள் கடற்படையின் வரலாற்றை ஆய்வு செய்து அது தொடர்பான பல்வேறு தலைப்புக்களில் நூல்களை வெளியிட்டு வருகின்றனர்.[1][2][3]

தோற்றம்[தொகு]

கடற்படை வரலாற்றுக்கும் மரபுக்குமான ஆணையத்தின் தோற்றத்துக்கான வித்து 1800 ஆண்டில் தொடங்கியது எனலாம். ஆவ்வாண்டில் சனாதிபதி ஜான் ஆடம்சு (John Adams) கடற்படைச் செயலாளராக இருந்த பெஞ்சமின் இசுட்டோடேர்ட் என்பவரை, செயலாளரின் அலுவலகப் பயன்பாட்டுக்காக தொழில்சார் நூல்களின் பட்டியலொன்றைத் தயாரிக்குமாறு பணித்தார். 1814 ஆம் ஆண்டில் பிரித்தானியர் வாசிங்டனைக் கைப்பற்றியபோது இவ்வாறு சேகரிக்கப்பட்ட நூல்களை பாதுகாப்புக்காக வாசிங்டனுக்கு வெளியே கொண்டு சென்றனர். இச் சேகரிப்பில், அமெரிக்காவையும், பிற நாடுகளையும் சேர்ந்த சிறந்த கடற்படை வரலாற்று நூல்கள் இருந்தன. பின்னர், இந் நூல்கள் வெள்ளை மாளிகைக்கு அண்மையில் இருந்த நூலகம் அடங்கலாகப் பல்வேறு இடங்களில் அமைந்த நூலகங்களில் வைக்கப்பட்டிருந்தன.

1882 ஆம் ஆண்டில் நூலகம் கடற்போக்குவரத்து அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட போது அதன் தலைவராக இருந்த பேராசிரியர் ஜேம்சு ஆர். சோலி என்பார் பல்வேறு கடற்படை அலுவலகங்களிலும் சிதறிக் கிடந்த அரிய நூல்கள், கடற்படை தொடர்பான நிழற்படங்கள் என்பவற்றைச் சேகரித்ததுடன் இது தொடர்பான தொழில்முறை வெளியீடுகளையும் ஒழுங்காகப் பெற்றுக்கொள்ள ஆவன செய்தார். பல்வேறு கடற்படைப் பதிவுகளை, சிறப்பாக அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடர்பான பதிவுகளைச் சேகரித்துப் பேணவும் இவர் நடவடிக்கை எடுத்தார். இவரது செயற்பாடுகளை ஏற்றுக்கொண்ட அமெரிக்கக் காங்கிரசு, அலுவலர்களுக்கும், நூலகத்தையும் பதிவுப் பிரிவையும் ஒன்றிணைத்து நூலகத்துக்கும், கடற்போர் பதிவுகளுக்குமான அலுவலகம் ஒன்றை உருவாக்கவும் நிதி ஒதுக்கீடு செய்தது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Command Origins". public1.nhhcaws.local.
  2. "Director Biography". History.navy.mil. Archived from the original on 24 October 2012. பார்க்கப்பட்ட நாள் 30 October 2012.
  3. "Naval historical command director resigns – Navy News | News from Afghanistan & Iraq". Navy Times. பார்க்கப்பட்ட நாள் 30 October 2012.