கடற்படை தினம் (இசுரேல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கடற்படை தினத்தையொட்டி  கடற்படையினர் வெண்மை நிற  உடையணிந்து மரியாதை  செலுத்துதல்.

கடற்படை நாள் (Navy Day) இசுரேலில் ஆண்டு தோறும் சூன் 30 அன்று கொண்டாடப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு நடைபெற்ற இசுரேல் விடுதலைப் போரில் ஜூன் 30 ஆம் நாள் கைஃபா துறைமுகம் இசுரேலினால் கைப்பற்றப்பட்டது. தொன்றுதொட்டு இசுரேல் நாட்டு நினைவு தின மாலையைத் தொடர்ந்து கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.

1993 ஆம் ஆண்டு இசுரேலிய கடற்படைத் தளபதி ஆமி அயலோன் என்பவர் பல போர்களின் வெற்றிகளைக் கொண்டாடும் நோக்கில் அக்டோபர் மாத இறுதி வாரத்தில் இசுரேலின் கடற்படை  தினத்தை கொண்டாடத் திட்டமிட்டிருந்தார்.[1]

  • 1948 அக்டோபர் 22 ஆம் நாள், எகிப்தின் கடற்படை கொடிமரக்கப்பல் "எல் ஆமிர் ஃபாரூக்" என்பது கடலில் மூழ்கியது.
  • 1956 அக்டோபர்  31 ஆம் நாள் "இப்ராகிம் எல் அவ்வல்" எனும் பீரங்கிப் போர்க்கப்பல் இசுரேல் படையினரால் கைப்பற்றப்பட்டது.
  • 1973 அக்டோபர் 6 ஆம் நாள் முதல் 24 ஆம் நாள் வரை நடைபெற்ற யோம் கிப்பூர் போரில் இசுரேலியக் கடற்படையினரின் தீரச் செயல்களால் பெற்ற வெற்றிக் களிப்பில் அந்நாடு மூழ்கி இருந்தது.

இஸ்ரேல் கடற்படை தன்னுடைய ஐ.என்.எஸ். எய்லட் என்னும் அழிக்கும் கப்பலை 1967 அக்டோபர் 21 ஆம் நாள் இழந்தது. இந்த காரணமாக நினைவு தின மாலை அனுசரிப்பு நிகழ்வும் மாற்றி அமைக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு வரை கடற்படை தினக் கொண்டாட்டங்கள் ஒரு வாரம் வரை நீடித்து இருந்தன. நடைமுறைச் சிக்கல்களைக் காரணமாகக் கொண்டு இந்நிகழ்வு ஆகஸ்ட் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]