உள்ளடக்கத்துக்குச் செல்

கடம் பத்மஜா ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடம் பத்மஜா ரெட்டி
2018 இல் காகதியம் நடன நிகழ்வில் பத்மஜா
பிறப்பு1 சனவரி 1967 (1967-01-01) (அகவை 59)
பாமரு, ஆந்திரப் பிரதேசம் India
பணிகுச்சிப்புடி நடனக் கலைஞர்
பிள்ளைகள்1-பிரணவ்
உறவினர்கள்கடம் கங்கா ரெட்டி (மாமனார்)
விருதுகள்விருதுகள்

கடம் பத்மஜா ரெட்டி (Gaddam Padmaja Reddy பிறப்பு: 1 ஜனவரி 1967) ஓர் இந்தியக் குச்சிப்புடி நிபுணர் மற்றும் இசை ஆசிரியர் ஆவார். புராணங்கள், சமகால சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றக் கருப்பொருளாகக் கொண்டு இவர்நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார். குச்சிப்புடியில் காட்சி நடன வடிவமான காகதியம் இவரது சிறப்பாகும். 2006 ஆம் ஆண்டில் கலா ரத்னா விருதும், 2015 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயர்ந்த கலை விருதான சங்கீத நாடக அகாதமி விருதும், 2022 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டன.

இளமை வாழ்க்கை.

[தொகு]

பத்மஜ ரெட்டி 1967 ஜனவரி 1 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பாமருவில் ஜி. வி. ரெட்டி மற்றும் சுவராஜ்யாலட்சுமி ஆகியோருக்கு ரெட்டி குடும்பத்தில் பிறந்தார்.[1][2][3] பத்மஜா பாமரு நகரில் உள்ள தனது தாத்தா பாட்டி வீட்டில் வளர்ந்தார்.[3] பின்னர் இவர் ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்தார்.[4] இவரது குடும்பம் யூசுப்குடாவில் வசித்து வந்தது. அவர் செயின்ட் தெரசா பள்ளியிலும் பின்னர் ரெட்டி கல்லூரியிலும் கல்வி பயின்று இளங்கலை கலை பட்டம் பெற்றார் .[5] She graduated in Bachelor of Arts.

குச்சிப்புடி நடனம்

[தொகு]

பத்மஜா இந்திய நடனக் கலைஞர் ஷோபா நாயுடுவிடம் குச்சிப்புடியில் பயிற்சி பெற்றார்.[1] சத்யபாமா மற்றும் ருத்ரமாதேவி வேடங்களில் நடித்ததற்காக சிறந்த அங்கீகாரம் பெற்றார்.[2] ஒரு நேர்காணலில், பொதுவான நிகழ்வுகளில் புராணக் கதைகளை விட ஒரு தனித்துவமான தலைப்பில் தன்து நடனத்தை நிகழ்த்த விரும்புவதாக அவர் கூறினார். சமகால சமூகப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல குச்சிப்புடி நடன வடிவங்களை அவர் உருவாக்கி நிகழ்த்தினார், அவற்றில் சில நடன நிகழ்ச்சிகளில் புரூனா ஹாத்யாலு, ஜக்ருதி, வஜ்ரா பாரதி, நமஸ்தே இந்தியா, பூக்களின் பருவம் ஆகியவை அடங்கும். புருனா ஹாத்யாலு பெண்சிசுவைக் கருக்கலைப்பு செய்வதைக் கண்டனம் செய்வதைக் குறித்த நிகழ்வாகும். எச். ஐ. வி.எய்ட்சு தொடர்பான பிரச்சினைகளை ஜக்ருதி ஆராய்கிறது. வஜ்ர பாரதி மக்கள் மத்தியில் தேசிய ஒருமைப்பாட்டின் நெறிமுறைகளைத் தூண்ட முயற்சிக்கிறது.[6][3][7][8] சமூகப் பிரச்சினைகளைத் தவிர, புராணங்கள் சம்பந்தப்பட்ட நடன நிகழ்வுகளையும் பத்மஜா நிகழ்த்டுகிறார். அவரது புராண படைப்புகளில் சில பாமகலாபம், மகிஷாசுர மர்தினி, நவதுர்கலு மற்றும் காகத்தியம் ஆகியவை அடங்கும்.[7][9]

அவர் தனது மகன் பிரணவின் பெயரிடப்பட்ட "பிரணவ் இன்ஸ்டிடியூட் ஆஃப் குச்சிப்புடி டான்ஸ்" அகாடமியில் குச்சிப்புடியை மற்றவர்களுக்குக் கற்பிக்கிறார்.[1][10] </ref>

காகதீயம்

[தொகு]
2018 இல் ருத்ரமாதேவி கதாபாத்திரத்தில் காகதீயம் என்ற நடன நிகழ்வில் பத்மஜா

தெலுங்கானா கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாரம்பரிய நடன வடிவத்தை உருவாக்க விரும்புவதாக ரெட்டி ஒரு நேர்காணலில் கூறினார். காகத்திய வம்சத்தின் காலத்தில் ராமப்பா கோயில், சிற்பம் மற்றும் நடன வடிவங்களின் வரலாறு மற்றும் கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட குச்சிப்புடி பாரம்பரிய காட்சி நடன வடிவமான காகதியத்தை பத்மஜா உருவாக்கினார். இரண்டு பிரிவுகளைக் கொண்ட இந்த நடன வடிவத்தின் நடனக் கருத்தானது ராமப்பா கோயில், ஆயிரம் தூண் கோயில் மற்றும் வாரங்கல் கோட்டை பற்றிய தனது ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் கூறினார்.[11] இவரைப் பொறுத்தவரை, இது 13 ஆம் நூற்றாண்டின் நடன வடிவங்களை ஆவணப்படுத்தும் நிருத்த ரத்னாவளிஎன்ற காகதியர்களின் இராணுவத் தளபதியான ஜெயப சேனானி எழுதிய ஒரு நூலை அடிப்படையாகக் கொண்டது.[3]

ஹைதராபாத்தில் உள்ள சில்பகலா வேதிகா என்ற அரங்கில்,பத்மஜா தனது காகதிய நடன நிகழ்வை இரண்டு பிரிவுகளாக வழங்கினார். இதில் காகதீய வம்சத்தின் ராணியான ருத்ரமாதேவி வேடத்தில் பத்மஜா நடித்தார்.[12] நடனத்தின் முதல் பகுதி பிப்ரவரி 2017 இல் நிகழ்த்தப்பட்டது, இரண்டாவது பகுதி டிசம்பர் 2021 இல் வழங்கப்பட்டது.[11] பத்மஜாவின் கூற்றுப்படி, நிருத்த ரத்னவளியில் ஆவணப்படுத்தப்பட்ட நடனக் கருத்துகளின் பரந்த தன்மை காரணமாக இந்த நடன நிகழ்வு இரண்டு பகுதிகளாகப் பிரிந்தது, மேலும் " செலவினம், சாத்தியக்கூறுகள்" காரணமாக அவற்றில் சில மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டன.[13]   பத்மஜா இந்தப் புத்தகத்தை மேலும் படிக்கவும், எதிர்கால நிகழ்ச்சிகளில், தனது இரண்டு பிரிவுகளாக நிகழ்த்தும் காகதீய நடன நிகழ்வில் தற்போது நடனத்தில் எடுத்துக்கொள்ளப்படாத நிருத்த ரத்னாவளியின் நடனக் கருத்துக்களை முன்வைக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.[13]

மற்ற பணிகள்.

[தொகு]

பத்மஜா 2012 இல் தேசிய சுற்றுலா ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றினார். இந்தியக் கலாச்சார உறவுகள் கவுன்சிலின் பொதுச் சபையில் உறுப்பினராக இருந்தார்.[2]

விருதுகள்

[தொகு]

பத்மஜாவுக்கு பல விருதுகளும் கௌரவங்களும் வழங்கப்பட்டன.[2] 2005 ஆம் ஆண்டில் ஸ்ரீ கிருஷ்ணதேவராய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம், 2022 ஆம் ஆண்டில் ஸ்ரீ பத்மாவதி மகிளா விசுவவித்யாலயத்தால் கவுரவ டாக்டர் பட்டம் ஆகியவை அதில் முக்கியமானவையாகும்.[1][14] 2006 ஆம் ஆண்டில், ஐக்கிய ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தால் அவருக்கு கலா ரத்னா விருது வழங்கப்பட்டது.[15] 2015 ஆம் ஆண்டில் குச்சிப்புடிக்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்தியாவின் கலைகளில் மிக உயர்ந்த விருதான சங்கீத நாடக அகாடமி விருது அவருக்கு வழங்கப்பட்டது, மேலும் இந்த விருதைப் பெற்ற தெலுங்கானா முதல் நடனக் கலைஞர் ஆனார்.[16][17] பின்னர் 2022 ஆம் ஆண்டில், இந்திய அரசு அவருக்கு கலைத் துறையில் நாட்டின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கியது.[18][19]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம் கங்கா ரெட்டி மகனான கடம் ஸ்ரீநிவாஸ் ரெட்டியை 1988-இல் பத்மஜா ரெட்டி மணந்தார். இவர்களுக்கு பிரணவ் என்ற மகன் உள்ளார்.அவர் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட்டையில் வசிக்கிறார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 "పద్మజారెడ్డికి నేడు మహిళా వర్సిటీ డాక్టరేట్‌ ప్రదానం" [Padmaja Reddy awarded doctorate from women's university today]. Andhra Jyothi (in தெலுங்கு). 11 November 2022. Retrieved 18 November 2022.
  2. 1 2 3 4 "మాజీ ఎంపీ గడ్డం గంగారెడ్డి చిన్నకోడలికి 'పద్మశ్రీ'" ['Padma Shri' for former MP Gaddam Ganga Reddy's younger daughter-in-law]. Sakshi (in தெலுங்கு). 26 January 2022. Retrieved 18 November 2022.
  3. 1 2 3 4 5 Revalla, Venkateswarlu (27 January 2022). "ఇది శివుడిచ్చిన వరం" [This is Shiva's boon]. Eenadu (in தெலுங்கு). Retrieved 18 November 2022.Revalla, Venkateswarlu (27 January 2022). "ఇది శివుడిచ్చిన వరం" [This is Shiva's boon]. Eenadu (in Telugu). Retrieved 18 November 2022.
  4. ↑ "Padma Shri Awardee Dr. Padmaja Reddy joins Green India Challenge". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). 28 January 2022. Retrieved 18 November 2022.
  5. ↑ Exclusive Interview with Dr.Padmaja Reddy (Videotape) (in தெலுங்கு). Jaya Jaya Shankara Tv. 2 January 2018.
  6. ↑ "Governor Biswabhusan lauds SPMVV for responding to challenges". The Hans India (in ஆங்கிலம்). 11 November 2022. Retrieved 18 November 2022.
  7. 1 2 "Padma Shri - Smt. Gaddam Padmaja Reddy" (PDF). Government of India. 2022. Retrieved 18 November 2022.
  8. ↑ "కాకతీయం: చారిత్రక నృత్య సౌరభం". 26 December 2021 இம் மூலத்தில் இருந்து 18 நவம்பர் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221118182332/https://www.sakshi.com/sites/default/files/article_images/2022/01/27/26-Padmaja-Reddy.jpg.
  9. ↑ Chakravorty, Reshmi (6 December 2017). "An honourable moment". Deccan Chronicle (in ஆங்கிலம்). Retrieved 18 November 2022.
  10. ↑ "Youngsters take centre stage" (in en-IN). 4 September 2014. https://www.thehindu.com/features/friday-review/dance/youngsters-take-centre-stage/article6379494.ece.
  11. 1 2 "Kuchipudi dancer Padmaja Reddy is all set to perform at Shilpakala Vedika". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). 23 December 2021. Retrieved 18 November 2022.
  12. ↑ Paul, Papri; Palaparthi, Srividya (7 February 2017). "Kakatiyam, a melange of ethnic dance forms long forgotten in telangana". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). Retrieved 21 November 2022.
  13. 1 2 Chakravorty, Reshmi (24 December 2021). "Kuchipudi exponent Dr G Padmaja Reddy has taken up the challenge to revive dance forms of the Kakatiya era". Indulge Express (in ஆங்கிலம்). Retrieved 18 November 2022.
  14. ↑ "India's higher education second largest in world: Guv Harichandan". The New Indian Express. 12 November 2022. Retrieved 18 November 2022.
  15. ↑ "Hamsa awards are now Kalaratna" (in en-IN). 15 August 2006. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh//article58041585.ece.
  16. ↑ "Sangeet Natak Akademi Award to UoH professor" (in en-IN). 20 July 2019. https://www.thehindu.com/news/cities/Hyderabad/sangeet-natak-akademi-award-to-uoh-professor/article28614913.ece.
  17. ↑ Joseph, Deepu (2 October 2016). "Meet Telangana's first Sangeeta Nataka Akademi award winner". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). Retrieved 18 November 2022.
  18. ↑ Khurana, Suanshu (28 April 2022). "Padma Shri awardee removed from govt accommodation as eviction starts". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). Retrieved 25 November 2022.
  19. ↑ "Padma Awards 2022: Meet awardees conferred in the field of art for their distinguished contribution". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). 29 March 2022. Retrieved 18 November 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடம்_பத்மஜா_ரெட்டி&oldid=4640771" இலிருந்து மீள்விக்கப்பட்டது