கடப்பேரிக்குப்பம் ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
—  ஊராட்சி  —
அமைவிடம்
மாவட்டம் விழுப்புரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சி. பழனி, இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர் --------------------
மக்களவைத் தொகுதி விழுப்புரம்
மக்களவை உறுப்பினர்

ரவிக்குமார்

சட்டமன்றத் தொகுதி வானூர்
சட்டமன்ற உறுப்பினர்

எம். சக்கரபாணி (அதிமுக)

மக்கள் தொகை 2,831
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

கடப்பேரிக்குப்பம் ஊராட்சி (Kadaperikuppam Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த கடப்பேரிகுப்பம் ஊராட்சி, வானூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2831 ஆகும். இவர்களில் பெண்கள் 1591 பேரும் ஆண்கள் 1240 பேரும் உள்ளனர்.

அடிப்படை வசதிகள்[தொகு]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 139
சிறு மின்விசைக் குழாய்கள் 7
கைக்குழாய்கள் 12
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்
உள்ளாட்சிக் கட்டடங்கள் 1
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3
ஊரணிகள் அல்லது குளங்கள் 2
விளையாட்டு மையங்கள்
சந்தைகள்
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 33
ஊராட்சிச் சாலைகள்
பேருந்து நிலையங்கள் -
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2

கிழக்கு & மேற்கு[தொகு]

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள பகுதிகளின் பட்டியல்[7]:

  1. கடப்பேரிக்குப்பம் கிழக்கு
  2. கடப்பேரிக்குப்பம் மேற்கு

கடப்பேரிகுப்பம்கிராமம் மூன்று பக்கமும் புதுச்சேரி மாநிலத்தை எல்லைகளாகக் கொண்டுள்ள ஒரு தமிழக கிராமம்.

வடக்கில் புதுச்சேரி மாநிலம் கரசூர் கிராமத்தை எல்லையாகவும் மேற்கில் புதுச்சேரி மாநிலம் துத்திபட்டு கிராமத்தை எல்லையாகவும் தெற்கில் புதுச்சேரி மாநிலம் தொண்டமாநத்தம் கிராமத்தை எல்லையாகவும் கொண்டுள்ள கிராமம்.

இக்கிராமத்தில் உள்ள ஏரிகள்

1.காலத்தேரி 
2.பழைய ஏரி (இது கடப்பேரிகுப்பம் மற்றும் புதுச்சேரி மாநிலம் தொண்டமாநத்தம் கிராமத்திற்கும் சொந்தமான ஏரி)
3. ஊசுட்டேரியின் வடமேற்குப் பகுதி

கடப்பேரிகுப்பம் கிழக்கில் உள்ள கோயில்கள்

1.அருள்மிகு மாரியம்மன் கோயில்( இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறும்)
2.அருள்மிகு காத்தவராயன் கோயில்  (இது ஒரு குலதெய்வக் கோயில். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவிழா நடைபெறும்)

கடப்பேரிகுப்பம் மேற்கில் உள்ள கோயில்கள்

1.அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் (இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தீமிதி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது). 
2.அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயில்  
3.அருள்மிகு எல்லையம்மன் கோயில்    
4.அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில்
5.அருள்மிகு விநாயகர் கோயில் 

கடப்பேரிகுப்பத்திலுள்ள பள்ளிகள்

1.திருவள்ளுவர் தொடக்கப்பள்ளி   2.இராதாகிருஷ்ணன் தொடக்கப்பள்ளி  
3.விவேகானந்தா நடுநிலைப்பள்ளி

கடப்பேரிகுப்பத்திலுள்ள அரசு அலுவலகங்கள்.

1. கடப்பேரிகுப்பம் அஞ்சல் அலுவலகம் 
2. தாய் சேய் துணை நிலையம் 
3. ஊராட்சி மன்ற அலுவலகம் 
4. சமுதாய நலக்கூடம்
5. அரசு நூலகம் 
6. நியாய விலைக் கடை 

​ கடப்பேரிகுப்பம் கிராமத்தில் ஒரே ஒரு தொழிற்சாலை உள்ளது.

   JBA -கண்ணாடி துகள் தொழிற்சாலை

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  5. "வானூர் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  7. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.